அருள்மிகு அரிபிரம்மேஸ்வரர் திருக்கோயில் |
நடுக்காவேரி, திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருக்கண்டியூர்க்கு மேற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
வெள்ளாம்பெரம்பூர்-613 101, திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருக்கண்டியூர்க்கு மேற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நேத்திரபதீஸ்வரர் திருக்கோயில் |
மேகளத்தூர், திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருக்காட்டுப்பள்ளிக்கு தென்மேற்கே 5 கி.மீ. |
வெண்ணாற்றின் வடகரையில் இக்கோயில் 37 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு பக்தீஸ்வரர் திருக்கோயில் |
நாகத்தி, திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருக்கண்டியூர்க்கு தென்மேற்கே 4 கி.மீ. |
இக்கோயில் 18 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் |
விளத்தொட்டி, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
பந்தணைநல்லூர்க்கு வடக்கே 4 கி.மீ. |
கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் இக்ஷúரசநாயகி தனிச்சன்னிதியில் உள்ளார். விநாயகர் ஆபத்துக்காத்த விநாயகர். உள்பிரகாரத்தில் பாலசுப்ரமணியர், கஜலஷ்மி, மகாலஷ்மி, பைரவர், சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன. பிரமன் படைப்புத் தொழில் வேண்டிப் பூசித்த தலம். பிரமன் பூசித்த ஐதீகச்சிற்பம் உள்ளது. முருகப்பெருமான் தொட்டிலின் கண் வளர்ந்த தலம். வளர்தொட்டில் என்ற சொற்களே இணைந்து விளத்தொட்டி என்று ஆயிற்று. இவ்வூரில் வாழ்வோர் இந்த புராணவரலாற்று நிகழ்ச்சியொட்டி குழந்தை பிறந்த 10 நாட்கள் வரை குழந்தையைத் தொட்டியில் போடாமல் தூளியில் கண்வளரச் செய்து வருகின்றனர். இத்தலம் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. திருநாவுக்கரசர் அருளிய திருத்தாண்ட கத்தில் இத்தலம் குறிப்பிடப்படுகிறது. தலபுராணம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் விளத்தொட்டி புராணம் இயற்றப்பட்டது. வைகாசி விசாகத்தன்று பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |
திருலோகி, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருப்பனந்தாளிலிருந்து கிழக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். அம்மன் அகிலாண்டேசுவரி. இத்தலம் தேவார வைப்புத்தலங்களில் ஒன்று. அப்பர் திருத்தாண்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருவூர்த் தேவர் அருளிய திருவிசைப்பா பதிகமும் இவ்வாலயத்திற்குள்ளது. முதல் இராசராச சோழமன்னனின மனைவி திரைலோக்கிய மாதேவி அவர் பெயரால் இவ்வூர் மண்ணிநாட்டு ஏசந்லூராகிய திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதிமங்கலம் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
குலசேகரநல்லூர், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
பந்தணைநல்லூர்க்கு வடக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சர்வலோகநாதர் திருக்கோயில் |
மரத்துறை, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
பந்தணைநல்லூர்க்கு வடகிழக்கே 4கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு தாடகபுரீசுவரர் திருக்கோயில் |
நெய்வாசல், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
பந்தணைநல்லூர்க்கு வடகிழக்கே 5கி.மீ. |
கொள்ளிடம் ஆற்றின் தென் கரைப்பகுதியில் இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அட்சநாதர் திருக்கோயில் |
திருமாந்துறை, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
திருமங்கலக்குடிக்கு வடக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் போகநாயகி. இத்தலம் காவிரித் தென்கரை மாந்துறை என்றும், லால்குடிக்கு அருகில் உள்ள திருமாந்துறை வடகரை மாந்துறை என்றும் கூறப்படும். இத்தலம் திருஞானசம்பந்தர் எழுந்தருளி வழிபட்டதாகப் பெரிய புராணத்தில் குறிக்கப்படுகிறது. தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் பழமையானதும், பெரியதும் ஆகும். இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானது. |
|
|