அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில்
அலவந்திபுரம்
கும்பகோணம் |
சுவாமிமலையிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. |
இங்கு மகாலிங்க சுவாமி மூலவராக வீற்றிருக்கிறார், அம்பாள் சுந்தர குஜாம்பிகை, பிரகாரங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், ஐயப்பன், அஞ்சநேயர், நவகிரகங்கள் அமைந்துள்ளன.இது சோழர் காலத்தில் கட்டப்பட்டது |
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் |
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில்
அம்பகரத்தூர்
தஞ்சாவூர் |
அம்பகரத்தூர் மையத்தில் கோயில் அமைந்துள்ளது. |
அம்பன் அம்பரன் வழிபட்டதால் இத்தலம் அம்பகரத்தூர் ஆயிற்று இக்கோயிலில் இந்திர தீர்த்தம் அன்னமாம் பொய்கை என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஸ்தல விருட்சம் புன்னை மரம் கோயிலின் தென்கிழக்கே உள்ள புன்னை மரத்தில் ஆதிமூர்த்தியாகிய சிவபெருமான் லிங்க உருவில் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.÷ காயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது என்பதைக் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. |
அருள்மிகு பாணபுரிஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு பாணபுரிஸ்வரர் திருக்கோயில்
ஆண்கள் அரசு கல்லூரி
கும்பகோணம் |
கும்பகோணத்திலிருக்கும் ஆண்கள் அரசு கல்லூரி ஸ்டாபிலிருந்து கொஞ்ம் தொலைவில் அமைந்துள்ளது. |
இக்கோயிலில் மூலவர் பாணபுரீஸ்வரர். பிரகாரத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், ரிபுமன்ய துர்க்கை அமைந்துள்ளது. இது சோழர் காலத்தில் கட்டப்பட்டது |
அருள்மிகு அகஸ்தீஸ்வரசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு அகஸ்தீஸ்வரசுவாமி திருக்கோயில்
கருவளர்சேரி
தஞ்சாவூர் |
91 435 2000538 9344895538 | கருவளர்சேரி மையத்தில் அமைந்துள்ளது. |
இங்கு அகஸ்தீஸ்வரசுவாமி மூலவராக வீற்றிருக்கிறார், அம்பாள் அகிலாண்டேஸ்வரி தாயார். |
அருள்மிகு சக்திகிரீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு சக்திகிரீஸ்வரர் திருக்கோயில்
சேங்கனூர்
கும்பகோணம் |
சேங்கனூர் மையத்தில் அமைந்துள்ளது. |
இத்தலத்தில் சக்திகிரீஸ்வரர் மூலவராக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் அம்பாள், கணபதி (நின்ற கோலம்), மயில் வாகனத்துடன் சண்முகர் வீற்றிருக்கிறார்கள். |
அருள்மிகு சிவயோகிநாத சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சிவயோகிநாத சுவாமி திருக்கோயில்
திருவிசயநல்லூர்
கும்பகோணம் |
திருவிசயநல்லூர் கும்பகோணத்திலிருந்து 7 கி,மீ தொலைவில் அமைந்துள்ளது. |
இத்தலத்தில் மூலவர் சிவயோகிநாத சுவாமி. பிரகாரத்தில் அம்பாள் வீற்றிருக்கிறார். |
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
தாராசுரம்
கும்பகோணம் |
கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 15 நிமிடத்திற்கு ஒருமுறை மினி பஸ் செல்கிறது. |
கோயிலில் சரபேஸ்வரருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. அம்பாள் பெரிய நாயகி தனி சன்னதி வீற்றிருக்கிறாள்.இது சோழர் காலத்தில் கட்டப்பட்டது |
அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில்
இஞ்சிக்குடி
தஞ்சாவூர் |
இஞ்சிக்குடி மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் இருக்கிறது. |
இஞ்சிக்குடி சிவன் கோயிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. முன்பு கல் , சுண்ணாம்புக் கட்டடமாக இருந்த கோயில், விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி1128) கருங்கல் கட்டடமாக மாற்றியமைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.கருவறையில் ஸ்ரீசாந்தநாயகி அம்மன் வலக்கையில் மலருடன் வலக்காலை மடித்துப் பாதம் தாமரைப் பீடத்தில் பதித்தபடி இடக்காலைத் தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்து அருள் பாலிக்கின்றாள். |
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் |
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
மகாமக குளம்
கும்பகோணம் |
இக்கோயில் மகாமக குளத்தின் கரையில் அமைந்துள்ளது. கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. |
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இங்கு மூலவராக காசி விஸ்வநாதரும், அம்பாள் விசாலாட்சியும் அருள்புரிகிறார்கள் |
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
கடிச்சம்பாடி
கும்பகோணம் |
கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூர் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது கடிச்சம்பாடி. ஊரின் மையப்பகுதியில் அழகுற அமைந்துள்ளது. திரிபுரசுந்தரி அம்பாள் சமேத மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில். பஸ் வசதி உண்டு. ஆட்டோவிலும் செல்லலாம். |
நீண்ட பிரகாரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கருவறை என மிக விஸ்தாரமான கோயில்தான். கருவறையில் குடிகொண்டிருக்கிற மூலவர் மாசிலாமணீஸ்வரரின் லிங்கத் திருமேனியும் கொள்ளை அழகு. |
|
|