அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
கருந்திட்டைக்குடி
தஞ்சாவூர் |
தஞ்சாவூர்-கும்பகோணம் பாதையில் 2 கி.மீ |
கரந்தை என்று வழங்கப்படுகிறது. வசிஷ்டேஸ்வரர் கோயில், கரிகால் சோழனின் கல் திருப்பணி. மூழ்கினோர் தோல் நோய் தீர்க்கும் குளம் உள்ளது. |
அருள்மிகு ஆம்ரவேனஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு ஆம்ரவேனஸ்வரர் திருக்கோயில்
கூரூர்
தஞ்சாவூர் |
கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார் கோயிலிலிருந்து நன்னிலம் செல்லும் சாலையில் 4 கி.மீ |
கூரூர் என்று வழங்குகின்றது. ஆம்ரவேனஸ்வரர்-மங்கள நாயகி கோயில். |
அருள்மிகு சோமேசர் திருக்கோயில் |
அருள்மிகு சோமேசர் திருக்கோயில்
கும்பகோணம் |
கும்பகோணத்தில் நாகேசுவரசுவாமி கோயில் அருகில் உள்ளது. |
சோமேசர் கோயில் என்று வழங்குகின்றது. சோமேசர்-சோமசுந்தரி கோயில் சோமதீர்த்தம் கல்திருப்பணி |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
தண்டாங்கோரை
தஞ்சாவூர் |
தஞ்சாவூர்-கும்பகோணம் பாதையில் 13 கி.மீ |
தண்டாங்கோரை என்று வழங்குகின்றது. கைலாசநாதர் சர்வலோக நாயகி கோயில். சிறிய கோயில் |
அருள்மிகு திரிலோகநாதர் திருக்கோயில் |
அருள்மிகு திரிலோகநாதர் திருக்கோயில்
இரும்தலை
தஞ்சாவூர் |
பாபநாசத்திலிருந்து 10 கி.மீ கும்பகோணம் வழி பாபநாசம் திருக்கருகாவூரை அடுத்து 5 கி.மீ ல் இரும்புதலை உள்ளது. அப்பால் சாலியமங்கலம் உள்ளது. |
இரும்தலை என்று வழங்கப்படுகின்றது. திரிலோகநாதர்-திரிலோக நாயகி சிவாலயம். நல்ல பராமரிப்பு. |
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
கோவிலடி
தஞ்சாவூர் |
திருவையாறு -கல்லணை பாதையில் உள்ளது. |
கோவிலடி என்று வழங்குகின்றது. திருச்சடைமுடி மகாதேவர்-அகிலாண்டேஸ்வரி கோயில் கல்திருப்பணி சிறிய கோயில். இவ்வூரின் பழைய பெயர்: திருப்பேர்நகர், தொல்பொருள் இலாகாவசம் கோயில் உள்ளது. |
அருள்மிகு கிருத்திவாகேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு கிருத்திவாகேஸ்வரர் திருக்கோயில்
சூலமங்கை
தஞ்சாவூர் |
கும்பகோணம் தஞ்சாவூர் பேருந்து பாதையில் ஐயம்பேட்டை மாற்றுப் பாதையில் வந்து இடதுபுறம் ரயில்வே ஸ்டேசன் சாலையில் திரும்பிச் சென்றால் 1 கி.மீ சூலமங்கை உள்ளது. |
கிருத்திவாகேஸ்வரர்-அலங்காரவல்லி அம்மன் கோயில், பெரிய சிவாலயம். அஸ்திரதேவர் சிவபெருமானின் சூலமானபதி. |
அருள்மிகு நடனபுரிஈசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு நடனபுரிஈசுவரர் திருக்கோயில்
கும்பகோணம் |
கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் வழியாக, கிளைப்பாதையில் முருக்கங்குடி சென்று அப்பால் 2 கி.மீ மொத்தம் 9 கி.மீ |
நடனபுரிஈசுவரர்-சிவகாம சுந்தரி கோயில், சிறிய கோயில், செங்கல் திருப்பணி, நல்ல பராமரிப்பு. |
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில் |
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில்
தேவன்குடி
கும்பகோணம் |
திருவையாற்றிலிருந்து வீரமாங்குடி டவுன் பஸ்ஸில் முதல் ஸ்டாப்பில் இறங்கி 1 கி.மீ நடக்கவும். |
விசுவநாதர்-விசாலாட்சி அம்மன் கோயில். சிறிய கோயில். |
அருள்மிகு தீர்த்தநாதர் திருக்கோயில் |
அருள்மிகு தீர்த்தநாதர் திருக்கோயில்
திருபுவனம்
கும்பகோணம் |
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ |
திருபுவனம் என்று வழங்குகின்றது. நடுக்கம் தீர்த்தநாதர்-பெரியநாயகி சிவாலயம். பெரிய கோயில். சரபேஸ்வரருக்கான தனிக்கோயில் மிகவும் சிறப்புடையது. பில்லி, சூனியம், வழக்கு, திருமணத்தடை இவற்றை சரபேஸ்வரர் போக்கி அருள்கிறார். |
|
|