அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் |
அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்,
ஆண்டிப்பட்டி,
தேனி. |
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது கணவாய் தர்மசாஸ்தா கோயில். |
ஊர் எல்லையில் காவல்தெய்வமாக தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். மக்கள். பயணம் மேற்கொள்பவர்கள், தர்மசாஸ்தாவை மனதார வேண்டிச் சென்றால், பயணத்தில் பாதுகாப்பாகவும், பூட்டிய வீட்டுக்குக் காவலனாகவும் இருந்து காத்து வருகிறார். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், கோயிலுக்கு வந்து, இங்கே உள்ள சாலிமரத்தில் (ஒருவகையான காட்டு முள்மரம்) துணியைப் போட்டுவிட்டுச் செல்கின்றனர். கன்னிதேவதையின் நினைவாக சூலாயுதமும், விளக்குத் தூணும் அமைத்து வழிபடுகின்றனர். பேருந்தில் இந்தப் பகுதியே செல்லும் பயணிகள், அவளை மனதார வேண்டிக்கொண்டு, கோயிலை நோக்கிக் காசுகளை இறைத்துச் செல்கின்றனர். பொய் வழக்கில் சிக்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து வேண்டினால், விரைவில் அவர்களை அதில் இருந்து விடுவித்து அருள்வார் தர்மசாஸ்தா. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. |
|
|