அருள்மிகு ராஜேந்திர விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு ராஜேந்திர விநாயகர் திருக்கோயில்,
பெரியகுளம், தேனி. |
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ராஜேந்திர விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. |
கிழக்குப் பார்த்தபடி அருள்கிறார் ராஜேந்திர விநாயகர். நாக கன்னியர், நவக்கிரகங்கள் சன்னிதியும் இங்கு உண்டு. சனி கிரகத்தின் பாதிப்புக்கு ஆளானோர், சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விநாயக சதுர்த்தி வைபவத்தின் போதும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், சங்கடங்கள் யாவும் அகலும், சந்தோஷம் பிறக்கும். மாதந்தோறும் சதுர்த்தியில், இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, கொழுக்கட்டை அல்லது கரும்பு அல்லது பழங்கள் சமர்ப்பித்து வழிபட்டால், திருமணத் தடைகள் அகலும். பிள்ளைச் செல்வம் கிடைக்கும். இந்த வழியே பயணிப்பவர்கள், பிள்ளையாருக்கு சிதறுகாய் உடைத்து வேண்டிச் சென்றால், வழித்துணைக்கு பிள்ளையார் வருவார் என்பது ஐதீகம்! |
|
|