அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் |
தூத்துக்குடி நகர் - 628 002, தூத்துக்குடி மாவட்டம். |
+91 461 - 2320680 | நெல்லையிலிருந்து 50 கி.மீ. |
நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
திருவிழா : பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி
சிறப்பு : இத்தலத்தில சுவாமியை வணங்கி வீரபாகு சூரபத்மனிடம் தூது புறப்பட்டதால் தூதுகுடி என்ற பெயரை தழுவியது. பின்னர் தூதுகுடி என்பது மருவி தூத்துக்குடி என்றாயிற்று. சுவாமி அம்பாளுக்கு திருமந்திரம் உபதேசம் செய்த தலம். பார்வதி பிரதிஷ்டை செய்த சிவலிங்கம். இங்கு வழிபட்டால் காசி இரமேஸ்வரம் சென்ற பலன் கிட்டும். |
அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் |
லிங்கம்பட்டி, கோவில்பட்டி வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
கோவில்பட்டியிலிருந்து கிழக்கே 6 கி.மீ. |
இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில் |
கட்டாரிமங்கலம், சாத்தான்குளம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
சாத்தான்குளத்திலிருந்து வடக்கே 8 கி.மீ. |
இக்கோயில் 1-27 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. நடராஜர் கோயில் கொண்டுள்ள தலம். மார்கழி திருவாதிரையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. |
அருள்மிகு சங்கரலிங்கேசுவரர் திருக்கோயில் |
கருங்கடல், சாத்தான்குளம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
சாத்தான்குளத்திலிருந்து வடமேற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு ஜம்புநாதேஸ்வரர் திருக்கோயில் |
கழுகுமலை, கோவில்பட்டி வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
கோவில்பட்டியிலிருந்து மேற்கே 19 கி.மீ. |
இக்கோயில் 9-00 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட சிறிய மலை 300 அடி உயரம் கொண்டது. அம்மன் அகிலாண்டேஸ்வரி. மற்றும் முருகப்பெருமான் கழுகாசலபதி. அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார். உச்சியில் பிள்ளையார் கோயில் உள்ளது. இம்மலையின் மற்றொரு பகுதியில் சற்றுத்தாழ்ந்த உயரத்தில் சிவன் கோயில் ஒன்று எழுப்பபட்டிருக்கிறது. இதற்கு வெட்டுவான் கோயில் என்று பெயர். 30 அடி ஆழத்தில் சதுரமாகப் பாறைக்குள் குடைந்து அதன் நடுப்பகுதியில் கோயில் கட்டப்பட்டிருக்கின்றது. நீளம் 47 அடி, அகலம் 24 அடி, யரம் 30 அடி ஆகும். கோபுரத்தின் உச்சியில் தாமரை இதழ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பெற்றதாகும். மலையடிவாரத்தில் மேற்கே ஆம்பல் ஊருணி உள்ளது. முற்காலத்தில் ஜடாயுவின் தம்பியான சம்பாதி ஜடாயுவிற்கு ஈம்க்கிரியை செய்ய இயலாமல் போனதால் பாவம் தீர இத்தலத்திற்கு வந்த சம்பாதி ஆம்பல் மலர்களைக் கொண்டு இத்தல முருகப் பெருமானை வழிபட்டு பாவத்தைப் போக்கிக் கொண்ட தலம். இதனால் இத்தலத்திற்கு கழுகாசலம் என்றும் தற்போது கழுகுமலை என்றும் பெயர் பெற்றது. நாள்தோறும் ஆறு கால பூஜை. ஐப்பசி கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகத்தன்று உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில் |
சாஸ்தாவிநல்லூர், சாத்தான்குளம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
சாத்தான்குளத்திலிருந்து தெற்கே 8 கி.மீ. |
இக்கோயில் 14 செண்ட் நிலப்ரபப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
அகரம், ஸ்ரீவைகுண்டம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
முக்காணியிலிருந்து வடக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
சிறுதொண்டநல்லூர், ஸ்ரீவைகுண்டம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
ஏரல்லிருந்து வடமேற்கே ஒரு கி.மீ. |
தாமிரபரணியாற்றின் கரையில் இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மாதவமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் |
கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து மேற்கே 8 கி.மீ. |
தாமிரபரணியாற்றின் கரையில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மத்தியபதீஸ்வரர் திருக்கோயில் |
வேலூர்கஸ்பா, ஸ்ரீவைகுண்டம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. |
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தாமிரபரணியாற்றின் கரையில் இக்கோயில் 42 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். |
|
|