அருள்மிகு கம்பப் பெருமாள் திருக்கோயில் |
கிளியனூர் பட்டி,துறையஸ்ரீர், திருச்சி மாவட்டம் |
|
|
அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில் |
கோட்டைப்பாளையம்,துறையஸ்ரீர்,திருச்சி மாவட்டம் |
|
|
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் |
சிக்கத்தம்பஸ்ரீர்,துறையஸ்ரீர், திருச்சி மாவட்டம் |
|
|
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் |
சிக்கத்தம்பஸ்ரீர்,துறையஸ்ரீர், திருச்சி மாவட்டம் |
|
|
அருள்மிகு கம்பப் பெருமாள் திருக்கோயில் |
வீரமச்சான் பட்டி,துறையஸ்ரீர், திருச்சி மாவட்டம் |
|
|
அருள்மிகு கலியபெருமாள் திருக்கோயில் |
சேர்வைக்காரன் பட்டி,துறையஸ்ரீர்,திருச்சி மாவட்டம் |
|
|
தென்திருப்பதி அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் |
பெருமாள்மலை, துறையூர் - 621 010.,
திருச்சி மாவட்டம். |
+91 4327 - 245677 | துறையூரிலிருந்து 5. கி.மீ. |
நடைதிறப்பு :
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
திருவிழா : திருஓணம் ஐந்து சனிக்கிழமைகளில் விசேஷ திரும்மஞ்சனம் அலங்காரம் தீபம் வைகுண்ட ஏகாதசி.
சிறப்பு : இத்தலம் 1532 படிக்கட்டுகளையும் 7 சிறிய குன்றுகளையும், சப்தஸ்வர தூண்களையும் கொண்டது. ஸ்ரீ தேவி பூ தேவியுடன் திருமண கோலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி சேவை சாதிக்கிறார். பெருமாள் தாயார் சன்னதிகளில் துளசியும் தீர்த்தமும் தேங்காய் துருவலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கருப்பண்ணர் சன்னதியில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இது வைணவ தலத்தில் விசேஷமானது. 5 கி.மீ. சுற்றளவுள்ள மலையை சுற்றி ஒவ்வொரு பவுர்ணமியும் இந்த வைணவ தலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது சிறப்பு. |
அருள்மிகு வேங்கடரமணசுவாமி திருக்கோயில் |
காட்டுப்புத்தூர்
திருச்சி மாவட்டம் |
முசிறிக்கு வடமேற்கே 25 கி.மீ. |
காவிரியாற்றின் வடகரைப்பகுதியில் இக்கோயில் 10,064 சதுர அடிநிலப்பரப்பளவில், ஒரு பிராகாரத்துடன், 22 அடிஉயர இராஜகோபுரத்துடன் மூலவர் வேங்கடரமணசுவாமி மற்றும் திருமகள், பூமிதேவியுடன் காட்சியளிக்கிறார். முசுகுந்த சக்கரவர்த்திக்கு இத்தல இறைவன் காட்சியளித்த தலம். கல்வெட்டுகள் பல உள்ளன. காட்டுப் புத்தூர் ஜமீன்தார்கள் இக்கோயிலை 250 வருடங்களுக்கு முன்பு விரிவுபடுத்தி திருப்பணி செய்துள்ளதைக் குறிக்கின்றது. தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று 12 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு குரங்கநாதர் திருக்கோயில் |
அருள்மிகு குரங்கநாதர் திருக்கோயில்,
ஸ்ரீநிவாசநல்லூர்,
திருச்சி.
|
திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில், திருச்சியை அடுத்து முசிறிக்கு மேற்கே உள்ளது ஸ்ரீநிவாசநல்லூர் கிராமம். இந்த ஊருடன் இணைந்து, பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் பெயரால் அமைக்கப்பெற்ற பழம்பெருமை வாய்ந்த மகேந்திரமங்கலம் எனும் ஊர் திகழ்கிறது. |
ஆடுதுறை பெருமாள் கோயில் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் திருவூர் ஒன்று உள்ளது. அந்த ஊரின் பழம்பெயர் குரங்காடுதுறை என்பதாகும். தேவாரப் பதிகத்தில் நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தோடு ஒல்க வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் வடகரை அடை குரங்காடுதுறையே என்பார் காழிப்பிள்ளையார்.தொண்டைநாட்டுக் குரங்கணில்முட்டம், சோழநாட்டு குரக்குக்கா, நடுநாட்டு வாலிகண்டபுரம் ஆகிய திருத்தலங்கள் போலவே திருக்குரக்குத்துறை எனப்படும் ஸ்ரீநிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில் முக்கியத்துவம் பெற்ற ஒரு வழிபாட்டுத்தலமாகப் போற்றப்படுகிறது. ஈசன் கால் உயர்த்தி நடனமாட, அதிகார நந்தி குடமுழா இசைக்க, அனுமன் தாளமிடுகிறார். இது அபூர்வக் காட்சியாகும். மாடத்தின் நடுவே எட்டு கிளைகளுடன் கல்லால மரம் திகழ, அதன் கீழ் ஞானம் உரைக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார். ஆலங்கிளைகளில் அணில் பொக்கணம் என்னும் விபூதிப் பை, பொந்தில் ஆந்தை ஆகியவை காணப்படுகின்றன. பித்தி எனப்படும் சுவரில் உள்ள தூண்களின் கால்களில் நடனமாடும் பெண்கள், இசைவாணர்கள், குதூகலித்து ஆடும் கணங்களின் உருவங்கள் உள்ளன. |
அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில் |
அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்,
குளித்தலை, திருச்சி. |
+91 98409 21022, 98453 48009 | திருச்சி- குளித்தலை சாலையில் 45வது கி.மீ., குளித்தலையில் இருந்து 12 கி.மீ. |
தமிழகத்தில் உள்ள அஷ்ட நரசிம்மர் கோயில்களில், சிந்தலவாடி யோக நரசிம்மர் கோயிலும் ஒன்று. காளிங்க நர்த்தன கிருஷ்ணர் மற்றும் அனுமன் ஆகியோர் இங்கு எழுந்தருளியிருந்தனர். இவர்களைப் பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீவியாசராஜர். ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் கரூர், குளித்தலை, திருச்சி, முசிறி, பகுதிகளில் வாழும் மத்வ சம்பிரதாயக் குடும்பங்களின் குலதெய்வமாக இருந்து வருகிறது. தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காது குத்தல் போன்ற சுபநிகழச்சிகள் மத்வ சம்பிரதாயப் படி தினசரி பூஜைகளும் உற்சவங்களும் இங்கு நடத்தப்படுகின்றன. |
|
|