Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருநெல்வேலி மாவட்டம்>திருநெல்வேலி அம்மன் கோயில்
 
திருநெல்வேலி அம்மன் கோயில் (561)
 
அருள்மிகு வாழவந்தம்மன் திருக்கோயில்
வாழவந்தபுரம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு சுந்தரவிநாயகர் திருக்கோயில்
சுப்பிரமணியபுரம், சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு சக்கரவர்த்திவிநாயகர் திருக்கோயில்
சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு சிவபாக்கியசித்திவிநாயகர் திருக்கோயில்
ராமநாதபுரம்,சிவகிரி வட்டம்,திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
வாசுதேவநல்லுர் - 627 758, திருநெல்வேலி மாவட்டம்
+91 4636 - 241938
ராஜபாளையத்திலிருந்து 36 கி.மீ.
நடைதிறப்பு : காலை 7.45 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திருவிழா : சித்திரை மூன்றாம் செவ்வாய் பூக்குழி மற்றும் அலங்காரம்.
அருள்மிகு முத்துப்பேச்சி அம்மன் திருக்கோயில்
அருள்மிகு முத்துப்பேச்சி அம்மன் திருக்கோயில், திருக்கோயில் காரையார், அணக்கட்டு அருகில், பாபநாசம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம், 627425.
+91 4634-250209.
திருநெல்வேலி மதுரையிலிருந்து 153 கிமீ. சென்னையிலிருந்து தூத்துக்குடி ரயில்களும் செல்கின்றன. கோயில் அகத்தியார்அருவிக்கு அருகே உள்ளது. அதற்கு மேல் காரையார் அணைக்கட்டும், அதற்குமேல் பான தீர்த்தமும் உள்ளது. சிங்கம்பட்டியில் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது. காரையார் திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ.
சொரிமுத்து அய்யøõரைப் பிரதான தெய்வமாகக் கொண்ட இந்த ஆலயத்தில் பொம்மக்கா, திம்மக்கா மற்றும் பேச்சியம்மன் சந்நிதிகள் உள்ளன. வட இந்தியாவில் முத்து பட்டர் சகோதரர்கள் ராமர் சீதைக்கு என்ன உறவு என கேட்க மாமா எனக்கூற அவரை அடித்து விரட்டினர் மக்கள். பின்னர் பொதிகை அடிவாரம் வந்தடைந்தனர். வாளைப்படகை சமூகத்தினர் மகள்கள் இருவரை மணம்புரிய நினைத்தபோது அந்த சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் புரிந்தனர். பின்னர் திருமணமான அன்று ஓர் பசுமாடு களவு போனது. அதைத் தேடிச் சென்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு அவர்களை மணந்த முத்து பட்டர் சகோதர்களில் ஒருவன் தகராறில் இறந்தான். அவனது மனைவியும் மாண்டாள். அவரே சொரிமுத்து அய்யனார் என ஐயப்பன் பற்றிய திருவான்கூர் ஆஸ்தான கையேடு குறிப்பிடுகிறது.
பூஜை நேரம்: -
அருள்மிகு ஆயிரத்து அம்மன் திருக்கோயில்
அருள்மிகு ஆயிரத்து அம்மன் திருக்கோயில், பாளையங்கோட்டை 627002, திருநெல்வேலி மாவட்டம்.
+91 462-2574949, 04634-252874.
திருநெல்வேலியிலிருந்து 5கிமீ தொலைவில் உள்ளது. தாமிரபரணி நதியின் ஒரு புறத்தில் திருநெல்வேலியும் மறு கரையில் பாளையங்கோட்டையும் உள்ளது. மகராஜ் நகர், பெருமாள் புரம் மற்றும் சாந்தி நகரில் புகழ் பெற்ற ஆலயங்கள் உள்ளன. திரிபுராந்தகம் என்னும் வைப்புத் தலத்தின் திரிபுராந்தகர் கோவிலின் அருகே உள்ள எல்லை மாரியம்மன்.
ஆயிரத்தம்மன் மற்றும் தூதுவார் ஆலயம் பிரசித்தமான கோயில்கள். மேலும் பாளையங்கோட்டை பகுதியில் மன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலும் உள்ளது. ஒவ்வொரு தசராவின் போதும் பாளையம் கோட்டையில் உள்ள 12 அம்மன் கோயில்களிலிருந்து உற்சவர் சேவைக்கென எழுந்தருளுகின்றனர். முற்காலத்தில் (மைசூரில் உள்ளது போல) தசரா புரட்டாசி அமாவாசை முதல் விஜய தசமி வரை இந்தக் கோயிலில் விமர்சையாக நடைபெற்று வந்தது. மிகப் பழமையான கோயில். தற்போதைய குலசேகரப்பட்டண தசரா விழாவிற்கு நிகராக அக்காலத்தில் நடந்து வந்ததாகத் தகவல்.
பூஜை நேரம்: காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை (செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மதியம் 1 மணி வரை, இரவு 9.30 மணி வரை).
அருள்மிகு ஜக்கம்மாள் திருக்கோயில்
அருள்மிகு ஜக்கம்மாள் திருக்கோயில், பாஞ்சாலங்குறிச்சி 627002, திருநெல்வேலி மாவட்டம்.
தூத்துக்குடியிலிருந்து 25 கிமீம். திருநெல்வேலியிலிருந்து 48 கிமீ தொலைவிலும் உள்ள ஊர் இது. கீழப்பட்டணம், சீவலப்பேரி, சவலப்பேரி, ஒட்டப்பிடாரம் தாண்டியதும் ஊர்.
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் குல தெய்வமாகத் திகழ்ந்த அம்பாள். 1974ல் கட்டப்பட்ட தொல்பொருள் ஆய்வினரால் பராமரிக்கப்படும் கட்டபொம்மன் அருங்காட்சியகமும் கோட்டையும் உள்ளது. உள்ளேயே இந்தக் கோவில். ஜக்கம்மாள் ராஜஅம்பளம் நாயக்கர்கள் 9 குலத்தவரான அம்பளத்தாரின் குல தெய்வம். சில இடங்களில் பொம்மம்மா என்றும் அழைக்கப்படுகிறாள். இங்கே யாத்ரிகர்கள் தங்கும் வசதியும் உள்ளது.
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 2 மணி முதல் 6 மணி வரை
அருள்மிகு பேரத்துச் செல்லியம்மன் திருக்கோயில்
அருள்மிகு பேரத்துச் செல்வியம்மன் திருக்கோயில், (தீப்பாச்சியம்மன்), வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி 627003, திருநெல்வேலி மாவட்டம்.
+91 462-2500344, 2500744.
திருநெல்வேலி மதுரையிலிருந்து 153கிமீ. சென்னையிலிருந்து தூத்துக்குடி ரயில்களும் செல்கின்றன வண்ணராப்பேட்டை பகுதியில் உள்ளது.
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த ஊர். ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்பாள். மாவிளக்கு போட்டு செவ்வரளி மாலையினால் வழிபட்டு திருமணத்தடை நீக்கம் மற்றும் மக்கட்பேறு பெறுகின்றனர். எதிரே சுடலை மாடன், பேச்சியம்மன், நல்ல மாடன், சங்கிலி போத்தார், தளவைப் பேச்சி, லிங்கேஸ்வரர் மற்றும் சக்கர விநாயகர் சந்நிதிகளும் உள்ளன. சாந்த ரூப காளியாக உள்ள இவ்வாலயத்தில் விநாயகர் நந்திகளுடன் உள்ளார். காசி மன்னனுக்குக் குஷ்டம் தீர்த்த தீர்த்தம் உள்ளது. வடக்கு நோக்கி பாய்வதால் உத்தர வாகினி எனப்பெயர். தாமிரபரணியில் தீர்த்த நீராடி அம்மனை வழிபடுதல் பெரும் பயனளிக்கும் அம்பாளுக்கு ஆலயம் எழுப்ப நினைத்த எளியவனுக்கு பணம் இல்லாததால் அவன் கனவில் தோன்றி ஆற்றில் உள்ள 3 அத்தி மரங்களுக்கு இடையே நான் வெளிப்படுவேன் எனக் கூறினாள். அவனும் வலையிட்டுப் பார்க்க அம்பாள் கிடைத்தாள். அதிலிருந்து பேராற்று செல்வி என்கிற பெயர் பெற்று பேரத்துச் செல்வியானாள். வடக்குப் பார்த்த அம்பாள் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை (செவ்வாய் முழு நேரம் திறந்திருக்கும்).
அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோயில்
அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோயில். சீவலப்பேரி 627361, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.
+91 462-2483286, 2483256, 09843058341.
திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து 15 கிமீ தூரம். தாமிரபரணிக்கரையில் உள்ளது. கோவில்பட்டி, கலியவூர் தூத்துக்குடி பேருந்துகள் கோயில் வரை செல்கிறது.
1987ல் தகர கொட்டகையில் இருந்த கோயில் ராஜகோபுரம் கட்டி 11 ஆண்டுகள் ஆகிறது. மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கிரம் தலத்தின் அருகே ஓடும் தாமிரபரணியில் மூழ்கி பாவம் நீங்கி இந்த துர்க்கையினை வழிபட்டு அஸ்வமேத யாகம் செய்ததாக தலக்குறிப்பு. திருமாலை சிவன் ஆக்கிய குறு முனி அகத்தியர் அவரை தேட இந்தத் தலத்தில் துர்க்கையோடு விளங்கக் கண்டு வழிபட்டார். நவராத்திரி துர்க்காஷ்டமி மகாசண்டி யாகம் நடைபெறுகிறது. திருமணத்தடை நீக்கும் தலம். மகாவிஷ்ணு (அண்ணன்) மாயா (துர்க்கை) (தங்கை) மகா கணபதியுடன் ஒரே பீடத்தில் அமர்ந்து இருப்பது விசேஷம். அம்பாள் மிக மிக வரப்பிரசாதி. திருமணத்தடை, புத்ர பாக்கியம், படிப்பு, வேலை வாய்ப்பு அருளும் தலம். வருடத்தில் சித்திரை, விஷு, ஆடிப்பூரம், லட்சார்ச்சனை, புரட்டாசி நவராத்திரி, ராஜகோபுர வருஷாபிஷேகம் என நான்கு விசேஷ தினங்கள், சண்டி ஹோமம், மகா சண்டி ஹோமம் முதிலியவை நடக்கிறது. லட்சார்ச்சனை 3 நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வெள்ளியன்றும் பௌர்ணமி அன்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை (செவ்வாய் மதியம் 1.30 வரை வெள்ளி மதியம் 2 மணி வரை. செவ்வாய், வெள்ளி மாலை 3 மணி முதல் இரவு 7.30 வரை).
<< Previous  54  55  56  57  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar