அருள்மிகு வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் |
பரவாக்கரை,நன்னிலம்,திருவாரூர் |
|
|
அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில் |
கிடாமங்கலம்,நன்னிலம்,திருவாரூர் |
|
|
அருள்மிகு கல்யாணராமசுவாமி திருக்கோயில் |
அம்மையப்பன்,குடவாசல்,திருவாரூர் |
|
|
அருள்மிகு கோதண்டராமசுவாமி திருக்கோயில் |
கண்டிரமாணிக்கம்,குடவாசல்,திருவாரூர் |
|
|
அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில் |
நாரணமங்கலம்,குடவாசல்,திருவாரூர் |
|
|
அருள்மிகு இராமர் மடம் |
பிச்சன்கோட்டகம்,திருத்துறைபூண்டி,திருவாரூர் |
|
|
அருள்மிகு கஸ்தூரி ரெங்கபெருமாள் திருக்கோயில் |
விளக்குடி,திருத்துறைபூண்டி,திருவாரூர் |
|
|
அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில் |
ஆலிவலம்,திருத்துறைபூண்டி,திருவாரூர் |
|
|
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் |
திருராமேஸ்வரம், நீடாமங்கலம் வட்டம்,
திருவாருர் மாவட்டம். |
மன்னார்குடியிலிருந்து திருத்துறைபூண்டி சாலையில் தட்டாங்கோயிலின் வடக்கே 4 கி.மீ. |
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
சிறப்பு : ஸ்ரீ ராமபிரான் இத்தலத்தில் சிவ பூஜை செய்ததினால் சிவபெருமான் தோன்றி ஸ்ரீராமர் லெட்சுமணனுக்கு காட்சி கொடுத்து யுத்தத்தில் இறந்தவர்களுக்கு முக்தி பெறவும் இறந்த தசரத மஹா சக்கரவர்த்திக்கு சாயுஸ்ய பதவி கிடைக்கவும் ஸ்ரீராமரை வழிபட சொன்னார். ஸ்ரீராமர் அவ்வாறே செய்ய இறந்தவர்கள் முக்தி பெற்றனர். சீதாதேவி சிவபெருமானை பூஜை செய்த படியால் சீதாராமேஸ்வரம் என வழங்கலாயிற்று. பின்னர் காலப்போக்கில் பெயர் மாறி திருராமேஸ்வரம் என்றாயிற்று. சூரியன் தான் இழந்த சக்தியினை பெற்ற திருத்தலம். மாசிமாதம் சூரியன் நந்திதேவர் மீது பட்டு இறைவனை வணங்கும் தலம். |
அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில் |
திருமக்கோட்டை
திருவாரூர் மாவட்டம் |
மன்னார்குடிக்கு தெற்கே 16 கி.மீ. |
ஞானபுரீஸ்வரம், திருமெய்ஞானபுரம், பாரிஜாதவனம். பாமணியாற்றின் மேற்குப் பகுதியில் இக்கோயில் 47 செண்ட் நிலப்பரப்பளவில் மூன்று பிராகாரங்களுடன், கிழக்கு நோக்கிய மூலவர் ரங்கநாதப் பெருமாள் திருமகள், பூமிதேவியுடன் காட்சியளிக்கிறார். உற்சவர் ரங்கநாதர். அரங்கநாதப்பெருமாளுக்கு அலங்காரப்பிரியர் என்ற வேறு பெயரும் உண்டு. தென் பிரகாரத்தில் தனிச் சன்னதியில் தாயார் ரங்கநாயகி காட்சியளிக்கிறார். சுற்றுப் பிராகாரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள், நவநீதகிருஷ்ணன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருக்கச்சிநம்பிகள், பெரியாழ்வார், சேனை முதலியார், மற்றும் விஸ்வக் சேனர், தனிச் சன்னதிகளில் காட்சியளிக்கிறார். வசந்த மண்டபத்தில் அனுமன் உள்ளார். தனிச் சன்னதிகளில் மாரியம்மன், பிடாரி யம்மன், அய்யனார் ஆகியோர் உள்ளனர். இத்தல இறைவனை ஸ்ரீராமரும், விபீஷணனும் நேரில் தரிசித்ததாக வரலாறு. கல்வெட்டுக்களில் மாரவர்மன் குலசேகர பாண்டியன், நரசிங்கராய நாயகர் கால கல்வெட்டுகளில் இத்தலத்திற்கு பூஜை செய்ய நிலம் அளித்ததாக கூறப்பட்டுள்ளது. சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது. தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. |
|
|