Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவாரூர் மாவட்டம்>திருவாரூர் பிற ஆலயங்கள்
 
திருவாரூர் பிற ஆலயங்கள் (177)
 
அருள்மிகு மனுநாதசுவாமி மற்றும் பெத்தபாட்டை அய்யனார் திருக்கோயில்
மருதுவாஞ்சேரி,நன்னிலம்,திருவாரூர்
அருள்மிகு கைலாசநாதர் மற்றும் வரதராஜபெருமாள் திருக்கோயில்
விஷ்ணுபுரம்,நன்னிலம்,திருவாரூர்
அருள்மிகு நாகநாதசுவாமி மற்றும் வரதராஜபெருமாள் திருக்கோயில்
எடையூர்,திருத்துறைபூண்டி,திருவாரூர்
அருள்மிகு தர்மர், நடராஜர், ஐயனார் திருக்கோயில்
ஜாம்புவானோடை,திருத்துறைபூண்டி,திருவாரூர்
அருள்மிகு நல்லமாணிக்கர் திருக்கோயில்
அருள்மிகு நல்லமாணிக்கர் திருக்கோயில், குன்னலூர் கர்ப்பகநாதர் குளம், திருவாரூர் மாவட்டம்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்னலூர் கர்ப்பகநாதர் குளம் என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் திருவிழாவில், பூஜைகளில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் ஆண்களாக இருக்க வேண்டும். பெண்கள் கட்டாயம் இந்தக் கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள்ளே வரக்கூடாது. இந்த ஊரில் உள்ளவர்கள் பிறக்கும் பெண்குழந்தைகளுக்கு நல்லமாணிக்கர் சாமியின் சாபத்தை சிறு வயதிலேயே சொல்லி வளர்க்கிறார்கள். கோயிலைச் சுற்றி மதுரை வீரன், அக்னி வீரன், ரேனாயகம், தொட்டிச்சியம்மன் (கேரள பெண் தெய்வம்) என்று பதினெட்டுப் பரிவார தெய்வங்கள் இருக்கின்றன.
அருள்மிகு நாகநாத சாஸ்தா திருக்கோயில்
அருள்மிகு நாகநாத சாஸ்தா திருக்கோயில் வஸ்தராஜபுரம் திருவாரூர்
திருவாரூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் இருக்கும் பேரளம் எனும் ஊரின் மேற்கே சுமார் 3 கி.மீ யில் இருக்கிறது வஸ்தராஜபுரம் கிராமம். இவ்வூரின் கிழக்கே திருமீயச்சூர், மேற்கே திருப்பாம்புரம், தெற்கே திருவீழிமிழலை, வடக்கே தேரழுந்தூர் திருத்தலங்கள் உள்ளன.
பூரணை புஷ்கலையுடன் காட்சிதரும் நாகநாத சாஸ்தாவான ஐயனார் இத்தலத்தின் காவல் தெய்வமாகத் திகழ்பவர். இவரது ஆலயப் பரிவார தெய்வமாக நாகர்கள் இருப்பதும் இவரது பெயரில் நாகர் இணைந்து இருப்பதுமே இவரை நாக தோஷம் போக்கிடும் கடவுளாக எண்ணி வழிபடக் காரணங்கள்.
அருள்மிகு சாஸ்தா திருக்கோயில்
அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவி<லு<ம் உள்ளது இந்த ஊர்.
சத்யபூரணர் எனும் மகரிஷி, ஐயனாருக்கு இங்கு கோயில் எழுப்பினார். அத்துடன், கோயிலுக்கு அருகிலேயே ரிஷி தீர்த்தம் ஒன்றையும் அமைத்தார். இதில் நீராடினால், தானம் செய்த பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாஸ்தாவை வணங்கினால் சனி பகவானின் பேரருளைப் பெறலாம் என்பதால், சனிக்கிழமைகளில் இங்கு சாஸ்தாவை தரிசிக்க வரும் பக்தர்கள் ஏராளம். தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் இங்கு வந்து, எள் தீபமேற்றி 12 முறை வலம் வந்து பிரார்த்தித்தால், தீராத நோயும் தீரும், பித்ரு தோஷங்கள் விலகும் என்கின்றனர் பக்தர்கள். கோயிலில் சன்னிதி கொண்டிருக்கும் பெரியாச்சி அம்மன், கருணையே வடிவானவள். பெண்கள் சாஸ்தாவையும், பெரியாச்சி அம்மனையும் வேண்டிக் கொண்டால், சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை. மேலும், பெண்களுக்கான உடல் பிரச்னைகள் யாவும் நீங்கும். அரிச்சந்திர மகாராஜா, பிள்ளை வரம் வேண்டிப் பலன் பெற்ற திருத்தலமும் இதுவே. எனவேதான், இங்கே உள்ள நதிக்கு, அரிச்சந்திரா நதி என்ற பெயர் அமைந்தது. அதேபோல், வீரசேனன் எனும் மன்னனுக்கு, இழந்த பதவியையும் ஆட்சியையும் தந்தருளினார் ஐயனார். ஆகவே, இங்கு வந்து பிரார்த்தித்தால், பிள்ளை வரம் கிடைக்கும்; இழந்ததையெல்லாம் திரும்பப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள். காடந்தேத்தி ஐயனார் கோயில் சிவாச்சாரியார்கள், சபரிமலையில் நிகழும் முக்கிய விழாக்களில் இன்றைக்கும் பங்கெடுப்பது வழக்கம். அதேபோல் சுற்றுவட்டார மக்கள் இங்கு வந்து சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதம் துவங்குகின்றனர். பங்குனி உத்திரப் பெருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி ஞாயிற்றுக்கிழமையில், பூர்ணா புஷ்கலா சமேத சாஸ்தாவுக்குத் திருக்கல்யாண வைபவமும் சிறப்புற நடைபெறுகிறது. துஷ்ட சக்திகளுக்கு ஆட்பட்டுத் தவிப்பவர்கள், மனலம் குன்றியவர்கள் இங்கு வந்து மனுவாக எழுதிப்போட்டு வேண்டிக்கொண்டால், விரைவில் குணமாகும். பொருட்கள் களவு போயிருந்தால், ஐயனாரிடம் வந்து முறையிட்டால் போதும். காணாமல் போன பொருள் சீக்கிரமே திரும்பக் கிடைத்துவிடும்.
<< Previous  16  17  18 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar