அருள்மிகு அர்த்தநாதீவரர் திருக்கோயில் |
அம்முண்டி,குடியாத்தம் வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சோமநாதீஸ்வரர் (ம) பொன்னியம்மன் திருக்கோயில் |
திருமலைச்சேரி, ராணிப்பேட்டை வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கைலாசநாதர் ஆஞ்சிநேயர் திருக்கோயில் |
பாலாற்றங்கரை,ஆற்காடு,ராணிப்பேட்டை வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கங்காதீஸ்வரர் (ம) வரதராஜப்பெருமாள் திருக்கோயில் |
தோப்புக்கானா, ராணிப்பேட்டை வட்டம்,வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கைலாசநாதர் பிடாரி பொன்னியம்மன் ஒருவாக்கு விநாயகர் திருக்கோயில் |
திருமணி,குடியாத்தம் வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு ஈஸ்வரர் (ம) கெங்கையம்மன் நல்லமாவடியம்மன் (வ) திருக்கோயில் |
அரும்பாக்கம்,குடியாத்தம் வட்டம்,வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு தர்மராஜர் ஜம்புவிநாயகர் அகஸ்தீஸ்வரர் ஒசூர் அம்மன் திருக்கோயில் |
சேனுரர்,குடியாத்தம் வட்டம்,வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் |
செம்பேடு, அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
அரக்கோணத்திலிருந்து வடமேற்கே 17 கி.மீ. |
இக்கோயில் 9 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு திருநாகேஸ்வரர் திருக்கோயில் |
வளர்புரம், அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
அரக்கோணத்திலிருந்து வடக்கே 12 கி.மீ. |
நந்தியாற்றின் தென்கரையில் இக்கோயில் 34 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் சொர்ணவல்லி. தீர்த்தம் சங்கு தீர்த்தம் எனப்பெறும் புனிதமான வளைகுளமாகும். தலவிருட்சம் வில்வம். ஆதிசேடன் பூசித்து அருள்பெற்றதால் இறைவன் திருநாகேஸ்வரர் எனப் பெயர் பெறுகிறார். இத்தலம் தேவார வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. திருநாவுக்கரசர் வளைகுளம், தளிக்குளம், இடைக்குளம் ஆகிய சிறந்த முக்குளத் தலங்களைக் குறிப்பிட்டுப்பாடியுள்ளார். பதினொராம் திருமுறையில் ஐயடிகள்காடவர்கோன் நாயனார் இத்தலத்தை போற்றிப் பாடியுள்ளார். பாண்டிய மன்னர்களில் சுந்தர் பாண்டியன் இக்கோயிலுக்கு நிவந்தம் அளித்துள்ளதாகக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. |
அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் |
பனப்பாக்கம், அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
காஞ்சிபுரத்திலிருந்து வடமேற்கே 14 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் 5 நிலை ராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் சௌந்தர்ய நாயகி. தலமரம் பனைமரம், ஆதலால் இவ்வூருக்கு பனப்பாக்கம் என்றும் உமையம்மை மயில் வடிவில் வழிபாடு செய்ததால் இறைவனுக்கு மயூரநாதர் என்றும் பெயர். இத்தலத்திற்கு திருத்தாலபுரி, மயூரபுரி, புலியூர், இந்திரபுரி, பிரமபுரி, கலியாணமாவூர் முதலிய பெயர்கள் இத்தலப்புராணமாகிய பனசைப் புராணத்தில் குறிக்கப்படுகிறது. நந்திதேவர், பிரமன், இந்திரன், அகத்தியர், முதலியோர் பூஜை செய்து பேறு பெற்றத் தலம். கல்வெட்டுக்கள் 2 உள்ளன. இறைவர் பெயர் புலியப்பர் என்றே குறிக்கிறது. நாள்தோறும் மூன்று கால பூஜை சித்திரை மாதத்தில் மகநட்சத்திரத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
|
|