அருள்மிகு சந்திரமௌலீசுவரர் திருக்கோயில் |
மாமண்டூர், அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
காவேரிப்பாக்கத்திலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ. |
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் |
சேர்காடு, குடியாத்தம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
திருவலத்திலிருந்து வடமேற்கே 4 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
காட்பாடி, குடியாத்தம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
வேலூர்க்கு வடக்கே 5 கி.மீ. |
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. |
அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயில் |
வேப்பூர், குடியாத்தம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
பசுமாத்தூர்க்கு மேற்கே 2 கி.மீ. |
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில் |
பசுமாத்தூர், குடியாத்தம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
குடியாத்தத்திலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ. |
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நரசிம்மஈஸ்வரர் திருக்கோயில் |
சேரி, அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
காவேரிப்பாக்கத்திலிருந்து வடக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 1-85 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். திருமால் நரசிம்ம வடிவம் எடுத்து வழிபடப் பெற்றதால் இத்தல இறைவனுக்கு நரசிம்மஈஸ்வரர் என்று பெயர். |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
காவனூர், குடியாத்தம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
குடியாத்தத்திலிருந்து கிழக்கே 12 கி.மீ. |
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நீலகண்டீசுவரர் திருக்கோயில் |
கவசம்பட்டு, குடியாத்தம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
|
விரிஞ்சிபுரத்திலிருந்து வடமேற்கில் இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அகிலாண்டேசுவரி. |
அருள்மிகு அரிபிரசாதேசுவரர் திருக்கோயில் |
கரிவேடு, அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம் |
காவேரிப்பாக்கத்திலிருந்து கிழக்கே 7 கி.மீ. |
பாலாற்றின் வடபகுதியில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்க மூர்த்தியாக உள்ளார். அம்மன் தர்மவர்த்தினி. திருமாலுக்கு அருள்புரிந்ததால் இறைவர் அரிபிரசாதேசுவரர் என்னும் பெயர் பெற்று விளங்குகிறார். கல்வெட்டுக்களில் திரிபுவன வீரகண்ட கோபாலன் 3 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒரு வேலி நிலம் அளித்ததைக் குறிக்கிறது. |
அருள்மிகு கருப்புலீசுவரர் திருக்கோயில் |
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் |
காட்பாடியிலிருந்து 25 கி.மீ. |
இவ்வூரின் நெல்லுப்பேட்டையில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் 5 நிலை ராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் சிவகாமசுந்தரி. சிவநேசர் என்னும் வணிகனுக்கு இறைவர் மிளகுப் பொதிகளுக்குக் காவலாக வந்ததால் இறைவனுக்கு கரிப்பொதிக்காவலீசர் என்னும் பெயர் பெற்றார். காலப்போக்கில் கருப்புலீசுவரர் எனத் திரிபு எய்திற்று, வடமொழியில் பாலசார்த்துல்லீசர் என்பதாகும். மேலும் இவ்வூரில் கண்டலநதி வளைந்து ஓடுகிறது. வளைந்து ஓடும் ஆற்றூர் கோடியத்தூர் என்பதை காலப் போக்கில் குடியாத்தூர் என்று பெயர் பெற்றதாக கூறுகின்றனர்.நாள்தோறும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. |
|
|