அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
பள்ளிக்கொண்டா
வேலூர் மாவட்டம் |
வேலூர்க்கு மேற்கே 22 கி.மீ. |
பாலாற்றின் தென்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு திருத்தலீஸ்வரர் திருக்கோயில் |
அன்பூண்டி
வேலூர் மாவட்டம் |
வேலூர்க்கு மேற்கே 7 கி.மீ |
பாலாற்றின் தென்கரையில் இக்கோயில் 24 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விருபாட்ஷிஈஸ்வரர் திருக்கோயில் |
வேப்பம்பட்டு
வேலூர் மாவட்டம் |
வேலூர்க்கு தெற்கே 12 கி.மீ. |
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சோமசுந்தரேசுவரர் திருக்கோயில் |
சேண்பாக்கம்
வேலூர் மாவட்டம் |
வேலூர்க்கு வடக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சோமசுந்தரேசுவரர் சுயம்புலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இத்தலத்திலுள்ள செல்வவிநாயகர் மிகப் பிரசித்தி பெற்ற விநாயகராவார். இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. |
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் |
வாலாஜாப்பேட்டை
வேலூர் மாவட்டம் |
காஞ்சிபுரத்திலிருந்து மேற்கே 40 கி.மீ. |
பாலாற்றின் வடபகுதியில் இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் ராஜகோபுரம், பிரகாரத்துடன் அமைந்துள்ளது. அம்மன் காமாட்சியம்மன். இக்கோயிலுக்கு வடகிழக்கில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலும் , பேருந்து நிலையத்திற்கு அருகில் சுந்தரவிநாயகர் கோயிலும் உள்ளன. மேலும் இவ்வூரில் வசவேசுவரர் திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இவ்வூர்க்கு இறைவன் பெயரால் வசவராசப்பேட்டை என்பதே காலப்போக்கில் வாலாஜாப்பேட்டை என ஆகியது என்பர். மேலும் இவ்வூரில் வீரபத்திரர் திருக்கோயில், 80 செண்ட் நிலப்பரப்பளவில் கூடிய வேணுகோபாலசுவாமி திருக்கோயில், மற்றும் பூண்டி மகான் மடம் முதலியன இவ்வூரில் அமைந்துள்ளன. |
அருள்மிகு தேவநாதேசுவரர் திருக்கோயில் |
ராணிப்பேட்டை
வேலூர் மாவட்டம் |
வாலாஜாப்பேட்டையிலிருந்து மேற்கே 4 கி.மீ. |
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூர்க்கு அருகில் உள்ள காரை என்னுமிடத்தில் கௌதமர் பூசித்த கௌதமேசுவரர் பாலாற்றின் தென்கரையில் காட்சியளிக்கிறார். |
அருள்மிகு சோளாபுரீஸ்வரர் திருக்கோயில் |
சோளிங்கர், ராணிப்பேட்டை வட்டம்
வேலூர் மாவட்டம் |
வாலாஜாப்பேட்டையிலிருந்து வடக்கே 18 கி.மீ. |
இக்கோயில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார்.
சோழமன்னன் ஒருவர் இத்தலத்தில் சுயம்புமூர்த்தியைக் கண்டு அதற்கு ஒரு கோயில் அமைத்துச் சோளீசர் கோயில் எனப் பெயரிட்டதாகவும், சோழ-லிங்க-புரம் என்ற பெயர் சோளிங்கர் என பெயர் பெற்றதாகவும் கூறுவர். இக்கோயிலில் உள்ள 5 கல்வெட்டுக்களில் இவ்வூரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
வெண்ணம்பள்ளி, ராணிப்பேட்டை வட்டம்
வேலூர் மாவட்டம் |
வாலாஜாப்பேட்டையிலிருந்து வடமேற்கே 18 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 1000 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு திருக்காமேசுவரர் திருக்கோயில் |
புலிவலம், ராணிப்பேட்டை வட்டம்
வேலூர் மாவட்டம் |
சோளிங்கரிலிருந்து தெற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சோமநாதீசுவரர் திருக்கோயில் |
மேல்பாடி, ராணிப்பேட்டை வட்டம்
வேலூர் மாவட்டம் |
வாலாஜாப்பேட்டையிலிருந்து வடக்கே 17 கி.மீ. |
பொன்னையாற்றின் மேற்குக் கரையில் இக்கோயில் 1-18 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சோமநாதீசுவரர் கிழக்கு நோக்கியும் அம்மன் தபசுகிருதாம்பாள் கிழக்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். கங்காளர், உமாமகேஸ்வரர், விநாயகர், ஐயனார், சப்தமாதர் முதலியோர் உள்ளனர். கல்வெட்டுக்களில் சோளேந்திர சிங்கஈசுவரமுடைய மகாதேவர் கோயில் என குறிக்கப்பட்டுள்ளது. ஒரு கால பூஜை நடைபெறுகிறது. மேலும் இவ்வூரில் மற்றொரு கோயிலாக 6 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சோழீசுவரர் திருக்கோயில் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. இக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவன் ஸ்ரீ கோயிராசராசகேசரிவர்மரான ஸ்ரீ ராசராசதேவர்க்கு 29 ஆம் ஆண்டு ஜெயங்கொண்ட சோழமண்டலத்துப் பெரும்பாணாடி நாட்டு மேற்பாடியான ராசஸ்ரீபுரத்து ஆற்றூர்த் துஞ்சிய தேவர்க்குப் பள்ளிப்படையான உடையார் ஸ்ரீ ராசராசதேவர் எடுப்பித்தருளிய திருஅரிஞ்சிகை ஈச்சுரத்து மகாதேவர்க்கு என்று குறிக்கப்பட்டுள்ளது. |
|
|