அருள்மிகு பாலவிஸ்வநாதர் திருக்கோயில் |
சிக்கராயபுரம், ராணிப்பேட்டை வட்டம்
வேலூர் மாவட்டம் |
வாலாஜாப்பேட்டையிலிருந்து வடமேற்கே 10 கி.மீ. |
பொன்னையாற்றின் கிழக்கு கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. |
அருள்மிகு திருக்கண்டீஸ்வரர் திருக்கோயில் |
தெங்கால், ராணிப்பேட்டை வட்டம்
வேலூர் மாவட்டம் |
வாலாஜாப்பேட்டையிலிருந்து மேற்கே 9 கி.மீ |
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு வசிட்டேசுவரர் திருக்கோயில் |
வேப்பூர், ராணிப்பேட்டை வட்டம்
வேலூர் மாவட்டம் |
வாலாஜாப்பேட்டையிலிருந்து மேற்கே 7 கி.மீ. |
பாலாற்றின் தென்கரையில் இக்கோயில் 90 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
வன்னிவேடு, ராணிப்பேட்டை வட்டம்
வேலூர் மாவட்டம் |
வாலாஜாப்பேட்டையிலிருந்து தெற்கே ஒரு கி.மீ. |
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் 90 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் புவனேஸ்வரி. தலவிருட்சம் வன்னி. உள்பிரகாரத்தில் அகத்தியர் உள்ளார் இத்தலத்தில் சனீஸ்வரர் ஒற்றைக்காலில் நின்று, வாகனம் காக்கை தெற்குநோக்கி உள்ளது. |
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் |
கதியவாடை, ராணிப்பேட்டை வட்டம்
வேலூர் மாவட்டம் |
மேல்விஷாரத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு தர்மேசுவரர் திருக்கோயில் |
அருங்குன்றம், ராணிப்பேட்டை வட்டம்
வேலூர் மாவட்டம் |
மேல்விஷாரத்திலிருந்து தென்மேற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கரபுரீசுவரர் திருக்கோயில் |
திருப்பாற்கடல், ராணிப்பேட்டை வட்டம்
வேலூர் மாவட்டம் |
வாலாஜாப்பேட்டையிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீ. |
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் 68 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் பாலகுஜாம்பாள், விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி முதலிய சன்னதிகள் உள்ளன. இத்தலம் திருநாவுக்கரசர் அருளிய திருத்தாண்டகப் பதிகத்தில் குறிக்கப் பட்டுள்ளதால் இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானைப் போற்றி திருப்புகழ் அருளியுள்ளார். கல்வெட்டில் இறைவர் திருக்கரபுரத்துப் பெருமான் அடிகள் என்றும், இவ்வூரை தொண்டை மண்டலத்துப் படுவூர்க் கோட்டத்துக் காவிரிப்பாக்கமாகிய அவநிநாராயணச் சதுர்வேதிமங்கலத்தைச் சார்ந்தது எனச் சோழ மன்னர்களில் இராண்டாம் பராந்தக சோழனின் படைத்தலைவனான பார்த்வேந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலுக்கு மேற்கே பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. புண்டரீகமுனிவர்க்கு இறைவன் ஹரிஹரனாக காட்சியளித்த தலம். இன்றும் இக்கோயிலில் சிவலிங்க ஆவுடையார் மீது திருமால் காட்சியளிக்கிறார். |
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
அம்மணாங்குப்பம்-632 803, வேலூர் மாவட்டம் |
குடியாத்தத்தின் தென்கிழக்கே 4 கி.மீ. |
|
அருள்மிகு நிமிஷாசலேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு நிமிஷாசலேஸ்வரர் திருக்கோயில்
கரிக்கல்
வேலூர் |
அரக்கோணம். சோளிங்கர் பாதையில் 17 வது கி.மீ ல் ஸ்டாப்பில் இறங்கி 1 கி.மீ நடக்கவும். |
கரிக்கல் என்று வழங்குகின்றது. நிமிஷாசலேஸ்வரர்-கோகிலாம்பிகை கோயில். நிமிஷாசல் தீர்த்தம் பழமையான கல்வெட்டு கோயில் உள்ளது. |
அருள்மிகு சிவன் திருக்கோயில் |
அருள்மிகு சிவன் திருக்கோயில்
பொய்கை
வேலூர் |
வேலூர் மேற்கே 12 கி.மீ ல் பொய்கை உள்ளது. |
புதிய சிவலிங்கம், நந்தி பிரதிஷ்டை |
|
|