அருள்மிகு பஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு பஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
காவேரிப்பாக்கம்,
கொண்டாபுரம்,
வேலூர். |
வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகில் உள்ளது. கொண்டாபுரம். |
காஞ்சி மகாபெரியவாளின் அபிமான திருக்கோயில் இது. பஞ்ச பூதங்களுக்குமாக ஐந்து லிங்கங்கள் காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சம். இங்கு வந்து வழிபட, பஞ்சபூதத் தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு கோஷ்டத்திலும் தனியாகவும் இரண்டு தட்சிணாமூர்த்திகள் சன்னிதி கொண்டிருப்பது விசேஷம்! |
அருள்மிகு ஸ்ரீதிருக்காரீசநாதர் திருக்கோயில் |
அருள்மிகு ஸ்ரீதிருக்காரீசநாதர் திருக்கோயில்,
கலவை, வேலூர். |
வேலூர் மாவட்டம் கலவையில் உள்ளது திருக்காரீசநாதர் திருக்கோயில். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து காஞ்சிபுரம், திண்டிவனம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கலவைக்கு பேருந்து வசதி உள்ளது. |
கி.பி. 7ம் நூற்றாண்டில் கட்டப்பத்தாகச் செல்லப்படும் இத்திருக்கோயில் 2-ம் குலோத்துங்க சோழன் இத்திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்திருப்பதாகவும் தெரிய வருகிறது. இந்தக் கோயில் காஞ்சி மகா ஸ்வாமிகளின் உத்தரவுப்படி புதுப்பிக்கப்பட்டு, 1978-ம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா பெரியவா அவ்வப்போது கலவைக்கு விஜயம் செய்வது வழக்கம். இங்கு உள்ள சிவகாமி அம்மை சமேத நடராஜரின் திருவுருவம் சுமார் 6 அடி உயரம் உள்ளது. இந்த நடராஜரின் சிலை சிதம்பரம் நடராஜரின் சிலையை விடவும் பெரியது என்பதற்கான வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. இந்த நடராஜர் சிலையின் திருமுடியின் மேல் அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் சிலையின் வலப்புறக் கால் வழியாக மட்டுமே வழிந்து செல்லும். அந்த அளவுக்குக் கலைநுட்பத்துடன் கூடிய திருவுருவம் இது. |
அருள்மிகு பிரமேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு பிரமேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பத்தூர்,
வேலூர். |
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரின் கிழக்கு எல்லையில் பிரமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. |
உயர்ந்த மூன்று நிலை கோபுர வாயிலைக் கொண்டு அழகுடன் விளங்குகிறது. பிரமேஸ்வரர் கோயில். கிழக்கு பார்த்த கோயிலில் மூலவர் பிரமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். பிரளய காலத்தில் தலவிருட்சமான புன்னை மரத்தடியில் சுயம்பாக எழுந்தருளிய ஈஸ்வரனை படைப்புக் கடவுளான நான்முகன் வந்து வழிபட்டதால் அவர் பெயராலேயே தல நாயகர் பிரமேஸ்வரர் என்றும், இத்தலம் பிரம்மபுரம் என்றும் வழங்கப்பட்டது. நான்முகனின் படைப்புத் தொழில் இங்குதான் துவங்கியதாகவும். நான்முகனின் துணைவியான கலைவாணியின் ஊடலைத் தீர்த்து, இருவரையும் சிவனே ஒன்று சேர்த்து வைத்ததாகவும் தல புராணம் கூறுகிறது. நான்முகனும் வாணியும் சேர்ந்து வழிபட்ட சிறப்புடையது இத்தலம் சூரியன், சந்திரன் நால்வர், மகாகணபதி சன்னிதிகள் உள்ளன. சோமேஸ்வரருக்கு தனி சன்னிதி உள்ளது. சுரங்க மண்டபம் ஒன்றும் உள்ளது. அம்மன் திரிபுரசுந்தரி ஈஸ்வரருக்கு அடுத்து தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளான்.
ஆதி சங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் அம்பிகையின் சன்னிதியில் உள்ளது மிகவும் சிறப்புக்குரியது. முருகன் வள்ளி - தெய்வானையோடு தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். நவகிரகங்களும் அருள்பாலிக்கும் இத்தலத்தில் கால பைரவர் சற்று வித்தியாசமாக சர்ப்பங்களோடு காணப்படுகிறார். இவரை யோக பைரவர் என அழைக்கிறார்கள். நிருத்த கணபதி, மகிழ கணபதி சண்டிகேஸ்வரர் சன்னிதிகள் தனியே உள்ளன. காமாட்சியம்மன் - ஏகாம்பரேஸ்வரர் காசி விஸ்வ நாதர், மீனாட்சி சொக்கநாதீஸ்வரர் சன்னிதிகளும் தனியே உள்ளன. சொக்கநாதரின் லிங்க வடிவம் விழிகளோடும் நாசியுடனும் காட்சி தருவது சிறப்பு செல்வகணபதி, ரமனாதீஸ்வரர், பர்வதவர்த்தினி சன்னிதிகள் ஒரே இடத்தில் காணப்படுகின்றன. ஐயப்பன் தனி சன்னிதியில் உள்ளார். முருகன் அவதார சுதைச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இங்கு மாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு வரை போகாளா மற்றும் விஜயநகர அரசர்களால் பராமரிக்கப்பட்டு வந்து பின் பராமரிப்பின்றி இருக்க இந்த கோயில் அண்மைக் காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|