அருள்மிகு சுந்தரவல்லி, சுந்தரவரதர் பெருமாள் ட்ரஸ்ட் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு சுந்தரவல்லி, சுந்தரவரதர் பெருமாள் ட்ரஸ்ட் தேவஸ்தானம் திருக்கோயில்,
காவேரிப்பாக்கம்,
அழகிய ராமர் கோயில்,
காவேரிப்பாக்கம் மற்றும் அஞ்சல்,
வேலூர் மாவட்டம் 632508. |
+91 9443963067, 9791687534, 04177-254522. | சென்னையிலிருந்து காஞ்சிபுரம் 75கிமீ. இங்கிருந்து பைபாஸில் வேலூர் பாதையில் பாலத்தின் மேல் ஏறி சென்றால் சுமார் 11கிமீ தொலைவில் பாலுசெட்டி சத்திரம் வரும் (திருப்புட்குழி). இங்கிருந்து 15கிமீ தொலைவில் உள்ளது. காவேரிப்பாக்கம் இங்கிருந்து 3கிமீ. காவல் நிலையத்திற்கு எதிரில் செல்லும் சாலையில் சென்றால் திருப்பாற்கடல் தலம் வரும். பாலாற்றின் கரையில் இந்த அழகிய ராமர் கோயில் உள்ளது. காவேரிப்பாக்கம் காஞ்சியிலிருந்து 30கிமீ. வேலூரிலிருந்து 40கிமீ. சென்னையிலிருந்து 100 கிமீ. |
ஹேமகோடி விமானத்தின் கீழ் மகுட மரத்தடியில் க்ஷரபுஷ்கரணிக் கரையில் ஸ்வாமி எழுந்தருளியுள்ள இத்தலம் அவணி நாராயண மற்றும் விஜயகண்ட கோபால சதுர்வேதி மங்கலம் என்கிற பெயரோடும் புலியூர் கோட்டத்தில் விளங்கியது. இராபர்ட் கிளைவ் மற்றும் ஆற்காடு நவாப்பிற்கு போர் நடைபெற்ற இடம். முகமதியர் படையெடுப்பின் பாதிப்புக்குப்பின், இக்கோயில் பராமரிக்கும் பரம்பரையினரால் புணர் சுந்தரவரதரும், சுந்தரவல்லித் தாயாரும், முக்கிய மூர்த்தங்களாக அழகிய ராமர் திருமணக் கோலத்தில் சீதா, லக்ஷ்மண ஆஞ்சநேய சமேதராய் விளங்குகிறார். சுற்றுக் கோயிலில் ஆழ்வார்கள். நாதமுனிகள், யமுனைத்துறைவர். பாஷ்யகார், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் மற்றும் பெரிய-சிறிய திருவடிகளும் விளங்குகின்றனர். நெய்யினால் மெழுகி மாவினால் 4 வாரம் வெள்ளிக்கிழமைகளில் வாசலில் கோலமிட தாயார் திருமண மற்றும் இதர தடைகளை நீக்குவார். கருடாழ்வாருக்கு வளர்பிறை பஞ்சமி தேனாபிஷேகம் நாக தோஷ மற்றும் நச்சுக்கடிக்கு நிவர்த்தி தரும். கஷ்ட நிவர்த்திக்கு சுதர்ஷண ஆழ்வாருக்கு ஸ்வாதித் திருமஞ்சனம் பலன் தரும். சுந்தரவள்ளி சுந்தரவரதர் பெருமாள் ட்ரஸ்ட் சுந்தர வல்லி சுந்தரவரதர் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை, காலை 10 மணியிலிருந்து மாலை 2 மணி வரை. |
அருள்மிகு கஜேந்திரவரதன் திருக்கோயில் |
அருள்மிகு கஜேந்திரவரதன் திருக்கோயில்,
திருப்பத்தூர்,
வேலூர். |
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் எழிலான ராஜகோபுரத்தோடு அமைந்துள்ளது. |
கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் மகாமண்டபத்தின் முன்பு கருடாழ்வார் சன்னிதி, கஜேந்திர வரதராஜப் பெருமாளை நோக்கியவாறு காணப்படுகிறது. அர்த்த மண்டபத்தின் நுழைவு வாயிலின் மேலே கஜேந்திர மோட்ச சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. யானைகளின் தலைவனாக விளங்கிய கஜேந்திரன் எனும் யானை தினமும் தாமரைப்பூ பறித்து வந்து எம் பெருமானை ஆராதித்து வந்தது. ஒரு நாள் அந்த யானையை குளத்திலிருந்த முதலை ஒன்று பிடித்துக் கொண்டது. யானை பகவானைச் சரணடைய பகவான் தனது சக்கரத்தினால் அந்த முதலையைக் கொன்று யானையை ரட்சித்தார். பின்னர், சாபத்தால் யானை முதலைகளாக இருந்தவர்களின் சாபம் விலக்கி மோட்சம் அருளினார். அந்த யானை போல் சரணடைந்து அபயம் கேட்கும் பக்தர்களை ஓடிவந்து காப்பவர் என்பதால் கஜேந்திர வரதன் என்று அழைக்கப்படுகிறார்.
அர்த்த மண்டபத்தில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், கூரத்தாழ்வார், மற்றும் ஏழு ஆழ்வார்களின் உருவங்களைக் காண்கிறோம். கருவறையில் கஜேந்திர வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, ஆகிய உபநாச்சியார்களோடு கிழக்கு நோக்கியவாறு காட்சியளிக்கிறார். வரதராஜப் பெருமாளை நோக்கி மார்க்கண்டேயன் முதலிய முனிவர்கள் அமர்ந்துள்ளனர். ஆண்டாள் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். ராமானுஜர், ஆஞ்சநேயர், லட்சுமி நாராயணர், சக்கரத்தாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. சித்திரைப் தமிழப் புத்தாண்டுப் பிறப்பு, சித்திரை பவுர்ணமி, வைகாசியில் பத்து நாட்கள் பிரமோற்சவம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, கார்த்திகைத் தீபம், மார்கழி வைகுண்ட ஏகாதசி தை சங்கராந்தி ஆகியவை இக்கோயிலில் முக்கிய திருவிழாக்களாகும். |
|
|