அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் |
வெங்கிளி,வாணியம்பாடி வட்டம்,வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுந்திர வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் |
திருப்பத்தூர் நகர்,திருப்பத்தூர் வட்டம்,வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில் |
ஆம்பூர், திருப்பத்தூர் வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு ஆஞ்சிநேயர் சுவாமி திருக்கோயில் |
செட்டிக்குளக்கரை,திருப்பத்தூர் வட்டம்,வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு தன்வந்திரி ஆரோக்ய பீடம் திருக்கோயில் |
அருள்மிகு தன்வந்திரி ஆரோக்ய பீடம் திருக்கோயில்,
வாலாஜாபாத்,
வேலூர். |
வேலூர் மாவட்டம் வாலாஜாபாத்தில் அமைந்துள்ளது. |
சாதாரணமாக இங்கு பிரதிஷ்டை ஆகி உள்ள 468 சித்தர் திருமேனிகள் மற்றும் இங்கு குடிகொண்டுள்ள மகான்கள் சன்னதியை தரிசிக்க பல்வேறு துறவிகள் இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். |
அருள்மிகு தருமராசர் திருக்கோயில் |
அருள்மிகு தருமராசர் திருக்கோயில்,
திருப்பத்தூர்,
வேலூர். |
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தர்மரின் பெயரால் அமைந்துள்ள திருப்பத்தூர் தருமராசர் கோயில் அமைந்துள்ளது. |
பாண்டவர்கள் பெயராலும், அவர்களின் பத்தினியான திரவுபதியின் பெயராலும் அமைந்த அநேகம் கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றாக கோயில் அமைந்துள்ள தெரு. கோயில் பெயராலேயே தருமராசர் தெரு என அழைக்கப்படுகிறது. கோயிலின் முன் மண்டபம் கல்யாண மண்டபம் பிராகாரம் ஆகியவை கடந்து, உள்ளே செல்கின்றோம். கருவறையில் மூலவர் தருமராசர் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். இடப்பாகத்தில் விநாயகரும் முன்புறம் திரவுபதியும் உள்ளனர். தற்போது கோயில் அமைந்துள்ள இடம் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் செடி, கொடிகள் நிறைந்த காடாக இருந்தது. அக்காலத்தில் ஆற்காடு அருகிலுள்ள வளவனூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் குடும்பத்துடன் இப்பகுதிக்கு குடிவந்தார். அவர் திரௌபதி அம்மனையே தமது குல தெய்வமாக வழிபட்டு வந்தார். தம் குல தெய்வத்தின் நினைவாக தருமராசர் திரவுபதி மற்றும் அர்ச்சுனன் ஆகியோர் திருவுருவங்களை பூஜை செய்து வந்தார். அப்பகுதியில் வாழ்ந்த பலரும் அவரோடு சேர்ந்து அந்தத் தெய்வங்களை வழிபட்டனர். நாளடைவில் அங்கு ஓர் கோயில் அமைந்தது. அதுவே தருமராசர் கோயில் ஆயிற்று. கருவறையில் இடப்புறம் விநாயகருக்கு தனிச் சன்னிதி உள்ளது. அடுத்து பாண்டு ரங்க பஜனைக் கோயில் உள்ளது.
கடும் பஞ்சம் நிலவும் காலங்களில் மழை வேண்டி மகாபாரதத் திருவிழா நடத்தப்படுவது சிறப்பாகும். அச்சமயம், பகல் பொழுதில் மகாபாரதக் கதை சொல்லப்படும். இரவில் மகாபாரத நிகழ்ச்சிகள் நாடகமாக நடத்தப்படும். நிறைவு நாளில் தர்மராஜரே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். என்பது ஐதீகம். அன்று பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நடைபெறும். அன்றைய தினம் கண்டிப்பாக மழை பொழியும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நவராத்திரி திருவிழா, மார்கழியில் அபிஷேக ஆராதனைகள் தை மாதம் முதல் நாளன்று திருவீதியுலா புரட்டாசி மாதம் பாண்டுரங்கருக்கு பந்து சேர்வை என விழாக்கள் நடத்தப்படுகின்றன. தீபாவளியன்று கேதார கவுரி விரதத்தை மக்கள் எடுக்கின்றனர். சத்யநாராயண பூஜையும் இங்கு நடைபெறுகின்றது. தர்மம் தலைகாக்கும் என்பார்கள் தர்மத்தின் காவலனான தர்மரும் இங்கு வந்து தம்மைப் பணிவோரின் தாழ்வு நிலை மாற்றி வாழ்வை ஏற்றம் பெறச் செய்கிறார். |
|
|