அருள்மிகு வரதராசப்பெருமாள் திருக்கோயில் |
முத்துராமலிங்கபுரம், விருதுநகர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கிருஷ்ணன் (எ) நவநீதகிருஷ்ணப்பெருமாள் திருக்கோயில் |
மலைப்பட்டி, அருப்புக்கோட்டை(வ), விருதுநகர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் திருக்கோயில் |
மல்லாங்கிணறு, கõரியாபட்டி வட்டம், விருதுநகர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில் |
புதுப்பாளையம், ராசபாளையம் வட்டம், விருதுநகர் மாவட்டம் |
|
|
அருள்மிகு மணவாளமாமுனிகள் திருக்கோயில் |
ஸ்ரீவில்லிபுத்துõர், விருதுநகர் மாவட்டம் |
|
|
அருள்மிகு மணவாளமாமுனிகள் சன்னதி (இ) நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் |
திருத்தங்கல், விருதுநகர் மாவட்டம் |
|
|
அருள்மிகு திருவாராதனைக் கட்டளை(இ)கரியமால் அழகர் திருக்கோயில் |
பந்தல்குடி,அருப்புக்கோட்டை வட்டம்,விருதுநகர் மாவட்டம் |
|
|
அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில்
பாளையம்பட்டி
அருப்புக்கோட்டை |
இக்கோயில் அருப்புக் கோட்டை மதுரை சாலையில் பாளையம்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. |
இங்குள்ள சக்கரத் தாழ்வாருக்கு வேண்டிக் கொண்டவர்களுக்குக் கை மேல் பலன் கிடைக்கப் பெற்றதால் அவர்கள் கோயில் வளாகத்தில் பல திருப்பணிகளைச் செய்து வைத்துள்ளனர். ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடித் திருவிழாவும் புரட்டாசி நவராத்திரி விழாவும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழாவும், வைகாசி வசந்த உற்சவ விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெறும். |
அருள்மிகு நவநீத பாலகிருஷ்ணர் திருக்கோயில் |
அருள்மிகு நவநீத பாலகிருஷ்ணர் திருக்கோயில்,
அருப்புக்கோட்டை,
விருதுநகர். |
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் திருச்சுழி செல்லும் நெடுஞ்சாலையில் கோயில் அமைந்துள்ளது. |
அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரே கிருஷ்ணர் கோயில் என்ற பெருமை வாய்ந்தது இக்கோயில்.
கி.பி. 12-ம் நூற்றாண்டில், முதலாம் சடையன் குலசேகர பாண்டிய மன்னரின் காலத்தில் வெண்பில் நாடு என்ற பகுதியில் அடங்கியிருந்த செங்காட்டிருக்கை இடத்துவளி என்பதுதான் இன்றைய அருப்புக்கோட்டை நகரின் தொன்மைப் பெயர். இந்த மன்னரால் கற்றளியாக உருவாக்கப்பட்டதுதான் குறள்மணி ஈசுவரமுடைய நாயனார் திருக்கோயில். அதற்குத் தென்புறம் புனித தீர்த்தக் குளமாக கி.பி. 1193-ம் ஆண்டில், திருஆலவாயுடையான் சோழகங்கன் என்பவரது மகன் அருளாளரழகப் பெருமானால் தெப்பக்குளம் ஒன்று உருவாக்கப்பட்டது. சூரிய புஷ்கரணி தீர்த்தம் என்ற அந்தத் தெப்பக்குளத்தின் மேற்குக் கரையில் அதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது நவநீத பாலகிருஷ்ணர் திருக்கோயில். பல்வேறு தோஷங்களால் சுபகாரியங்களில் தடை, பணியில் பாதிப்பு, கல்வியில் நாட்டமின்மை, குடும்பத்தில் குழப்பம், கடன் தொல்லை எனப் பல்வேறு பிரச்னைகளால் மனநிம்மதி இழந்து அல்லல்படுவோர் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் தெய்வமாகத் திகழ்கிறார், அருப்புக்கோட்டை நவநீத பாலகிருஷ்ணர் விளங்குவதால் பக்தர்கள் ஏராளமானோர் வந்து பிரார்த்திக்கின்றனர்.
சுற்றுவட்டார மக்கள் தங்கள் வாழ்வில் சூழ்ந்திருக்கும் பிரச்னை எதுவானாலும் அது நீங்க புதன், சனிக்கிழமைகளில் நவநீதகிருஷ்ணனுக்கு நம்பிக்கையுடன் ஆராதனைகள் செய்து நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர். முகமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என வரிசையாக அமைந்த கிழக்குப் பார்த்த கோயில். மகாமண்டபத்தில் கருடாழ்வார், மூலவரான பாலகிருஷ்ணரை சேவித்த நிலையில் காணப்படுகிறார். கருவறையில் மூலவரான நவநீத பாலகிருஷ்ணர் நின்ற திருக்கோலத்தில் குழந்தை வடிவில் எழுந்தருளியுள்ளார். கருவறை வாயிலில் துவார பாலகர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிராகாரச் சுற்றில் ராமானுஜர் சன்னிதி உள்ளது. கோயிலின் தீர்த்தம் சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகும். மார்கழி 30 நாட்கள், ஸ்ரீராமநவமி, புரட்டாசி சனிக்கிழமைகள், கிருஷ்ண ஜெயந்தி ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. |
பூஜை நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை திறந்திருக்கும். |
|
|