Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் விநாயகர் கோயில்
 
காஞ்சிபுரம் விநாயகர் கோயில் (215)
 
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில், புளியகுளம், கோவை.
கோவை புளியகுளம் பகுதியில் முந்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லினால் உருவானவர். உயரம் 19 அடி, நீளம் 11 அடி, அகலம் 10 அடி. ஏணி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
அருள்மிகு தழுவக் குழந்தை விநாயகர் திருக்கோயில்
அருள்மிகு தழுவக் குழந்தை விநாயகர் திருக்கோயில் கிருஷ்ணன் தெரு பெரிய காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
பெரியகாஞ்சிபுரம் கிருஷ்ணன் தெருவில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. தழுவக் குழந்தை விநாயகர் கோயில்.
தேவி தம் மகனாகிய கணபதியை அன்புடன் தழுவிக் கொண்டதால் இவர் குழைந்த மேனியை உடையவராதலின் இப்பெயர் பெற்றார் என்பர். உயர்ந்த மேடை மீது கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறு விமானம் அமைந்துள்ளது. விநாயகர் வீற்றிருக்கும் கருவறையை மட்டும் கொண்ட கோயில் இது.
அருள்மிகு திருநின்ற விநாயகர் திருக்கோயில்
அருள்மிகு திருநின்ற விநாயகர் திருக்கோயில் கிருஷ்ணன் தெரு, காஞ்சிபுரம்
கிருஷ்ணன் தெருவில் வடக்கே ஐயனார் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது திருநின்ற விநாயகர் கோயில்.
இங்கு கருவறை முன் மண்டபம் மட்டும் உள்ளது. காஞ்சிபுரத்தில் அனைத்து விநாயகரும் அமர்ந்தவாறிருக்க இவர் மட்டும் நின்றவாறு காட்சியளிக்கிறார்.
அருள்மிகு வாதப் பிள்ளையார் திருக்கோயில்
அருள்மிகு வாதப் பிள்ளையார் திருக்கோயில் காஞ்சிபுரம்
வரதராஜப் பெருமாள் கோயிலிருந்து தேனம்பாக்கம் செல்லும் வழியில் வேகவதியின் வடகரையில் கிழக்கு நோக்கியவாறு வாதப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது.
அக்காலத்தில் நோய் தீர்க்கும் நெடுங்கல்லும் அதன் எதிரில் விநாயகர் கோயிலும் அமைப்பது வழக்கம். பெண்களுக்கான வாதநோய்களைத் தீர்க்கும் விசேஷ குணமுடையது இந்தக்கல் நோயுற்ற பெண்கள் நள்ளிரவில் இந்தக் கல்லை தழுவிக் கொண்டு நின்றால் அவர்கள் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு தோரண கணபதி திருக்கோயில்
அருள்மிகு தோரண கணபதி திருக்கோயில், திருநீர்மலை, குன்றத்தூர்.
குன்றத்தூர் முருகன் கோயிலிலிருந்து திருநீர்மலைக்குச் செல்லும் சாலையில் உள்ள கார்த்தியாயினி கோயில் வளாகம்.
விநாயகருக்குப் பல்வேறு பெயர்கள் சொல்லப்பட்டாலும், தோரண கணபதி என்பது விசேஷமானது. அதாவது சிவன் கோயில்களிலும், சக்தி கோயில்களிலும் தோரண வாயிலை நோக்கி அமர்ந்திருப்பவர் இவர். கடன் நிவாரணமும், மனச்சாந்தியும் தந்து தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணச் செய்பவர் வாங்கியக் கடனை அடைக்க நினைப்பவர்கள், ஆறு செவ்வாய்க்கிழமைகள் இந்த கணபதியின் முன், மூன்று நெய் தீபங்கள் ஏற்றி, மாதுளை, மா, கொய்யா, திராட்சை, ஆரஞ்சு ஆகிய ஐந்துவித பழங்களைப் படைத்து தோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதியை மூன்று முறை படிக்க வேண்டும். ஆறாவது செவ்வாய்க்கிழமை அர்ச்சனை செய்து வழிபட, கடன் நிவாரணம் ஏற்படும். ஒவ்வொரு மாதமும் சுக்ல சதுர்த்தியன்று மாலை 6 மணிக்கு இங்கு ருண விமோசன கணபதி ஹோமமும், பக்தர்களின் ப்ரசன்ன ஸ்துதி கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது. சங்கடஹர சதுர்த்தியன்றும் மாலை 6 மணிக்கு வலம்புரிச் சங்கு பால் அபிஷேகமும், விசேஷ திரிசதி, அருகு அர்ச்சனையும் செய்யப்படுகிறது. இவரை சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிபடுபவர்களுக்கு தொழில் தடைகள் விலகி, நலம் சேர்வது கண்கூடு.
<< Previous  20  21  22 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar