Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருநெல்வேலி மாவட்டம்>திருநெல்வேலி முருகன் கோயில்
 
திருநெல்வேலி முருகன் கோயில் (184)
 
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
பாரைப்பட்டி, சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
சங்குபுரம், சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
புளியங்குடி, சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
ஆவடையாபுரம்,சங்கரன்கோவில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
இளையரசனேந்தல், சங்கரன்கோவில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு மனைமடம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
காரிசாத்தான் குளம்,சங்கரன்கோவில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி பஜனை திருக்கோயில்
வீரசிகாசிமணி,சங்கரன்கோவில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பால பாக்யா நகர் தெற்கு, திருநெல்வேலி டவுன், 627006, திருநெல்வேலி மாவட்டம்.
+91 462- 2337436
திருநெல்வேலியிலிருந்து மேலப்பாளையம் செல்லும் பாதையில் உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையில் டவுனிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. ஜங்ஷன் மேம்பாலத்தின் இடப்புறம் மீனாட்சிபுரம் சந்நியாசி கிராமம் தாண்டியவுடன் கோயில். ஆற்று நீர் குறைவாக உள்ளபோது வழிபடலாம்.
தாமிரபரணி ஆறு சிலைகள் செய்யப்படும் பாறைகள் மீது ஓடுகிறது. எனவே இது திருவருமாமலை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளக் காலத்தில் இறைவனை மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர் என்பது வரலாறு. திருச்செந்தூர் முருகனை 1653ல் உருவாக்கிய வடமலையப்ப பிள்ளையின் தாயார் பூஜித்த பாறை ஆச்சிப் பாறை என்று இன்றும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலிக்கும் ஆற்றுத்துறைக்கும் அமைந்த குறுக்கு வழியே இன்று குறுக்குத்துறையானது. தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு உள்ள முருகருக்கு சித்திரை ஆவணி திருவிழாக்கள் விசேஷம்.
பூஜை நேரம்: காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயில்
அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயில், பாளையஞ்சோலை, சிந்துப்பூந்துறை, திருநெல்வேலி, திருநெல்வேலி ஜங்ஷன், திருநெல்வேலி மாவட்டம்,
+91 9865791659
திருநெல்வேலி பேருந்து நிலையம் இருக்கும் ஜங்ஷன் பகுதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்கிற இந்தக் கோயில் உள்ளது. பேருந்து நிலையத்திற்கு எதிரில் செல்லும் சாலையில் உள்ளது. மதுரையிலிருந்து திருநெல்வேலி 153 கிமீ. சிந்துப்பூந்துறை திருநெல்வேலி சந்திப்பில் உள்ள கோயில். இது ரயில் நிலையம் அருகில் உள்ளது. பாளையஞ்சோலை கோயில்.
ஆதிசங்கரரால் போற்றப்பட்ட திருச்செந்தூர் முருகனின் 16 பெயர்களுள் ஒன்றான குமாரசுவாமி பெயர் கொண்டு விளங்கும் தலம். இங்கு முருகன் 12 கரங்களுடன் வள்ட தெய்வயானையுடன் திகழ்கிறார். 1648ல் திருச்செந்தூர் உற்சவரை டச்சுக்காரர்கள் திருடிச் சென்று தங்கம் என்று எண்ணி கப்பலில் ஏற்றிச் சென்றனர். மூலவரையும் சுக்கல்நூறாகச் செய்தனர். கடல் நடுவே சென்ற போது பெரும் சூறாவளி ஏற்பட்டவுடன் பயந்து சிலையினை கடலில் வீசினர். செய்தி அறிந்த வடமலையப்பப் பிள்ளை குறுக்குத்துறையில் முருகன் சிலைகளை செய்து கொண்டு வரும்போது இரவில் இந்தப்பகுதியில் தங்கினார். அப்போது மழையின் காரணத்தால் சிலையினைக் கொண்டு செல்ல முடியாது போனபோது சிற்பியின் கனவில் தோன்றி தாமிரபரணி நதிக்கரையிலேயே தங்கி விட விழைகிறேன் என்று முருகன் கூறுகிறார். திருச்செந்தூருக்கென தயாரான சிலையினைக் கொண்டு செல்ல அருள வேண்டும் என்று கூற மறுநாள் வண்டி நகர்ந்தது. பின்னர் ஆறுமுகன் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 350 ஆண்டுகள் பழமையான கோயில்.
பூஜை நேரம்: காலை 5 மணி முதல் 11.30 மணி வரை, (உச்சிகாலம்) மாலை 5 மணி முதல் 9.30 மணி வரை காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகுமுத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
அருள்மிகுமுத்துக்குமாரசுவாமி திருக்கோயில், சாலைக்குமாரன் திருநெல்வேலி, திருநெல்வேலி ஜங்ஷன், திருநெல்வேலி 627001, திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி பாளையங்கோட்டை சாலையில் உள்ள கோயில். திருநெல்வேலி -பாளையங்கோட்டை 5 கிமீ தூரம். ஜங்ஷனை ஒட்டியுள்ள இரட்டைப் பாலத்திற்கு வடக்கே கோயிலுக்குப் பாதை செல்கிறது. பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ளது. திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி பழைய கட்டடம் முன் கோயில் உள்ளது.
கி.பி. 1653ல் கட்டப்பட்ட கோயில். திருச்செந்தூருக்குச் செல்ல வேண்டி ஆறுமுகன் 12 கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் தேவியருடன் இங்கேயே தங்கிய தலம். சஷ்டி, வெள்ளி, கிருத்திகை விசேஷம். சாலைக்குமரன் கிழக்கேயும், சண்முகர் தெற்கேயும் காட்சி தருகிறார்.
பூஜை நேரம்: காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 9.30 மணி வரை
<< Previous  16  17  18  19  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar