Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>ஈரோடு மாவட்டம்>ஈரோடு சிவன் கோயில்
 
ஈரோடு சிவன் கோயில் (251)
 
அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில்
வேங்கம்பூர் ஈரோடு மாவட்டம்
கொடுமுடியிலிருந்து வடக்கே 3 கி.மீ.
காவிரியாற்றின் கரையில் இக்கோயிலில் அமைந்துள்ளது.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
இளைபிள்ளை பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்
அந்தியூர்க்கு வடகிழக்கே 15 கி.மீ.
இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சொக்கநாச்சியம்மன்.
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில்
குறிச்சி, பவானி வட்டம் ஈரோடு மாவட்டம்
பவானியிலிருந்து வடக்கே 15 கி.மீ.
இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
கருமாந்தசெல்லிபாளையம் பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்
பெருந்துறைக்கு வடக்கே 2 கி.மீ.
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில்
வெள்ளியம்பதி, பெருந்துறை வட்டம் ஈரோடு மாவட்டம்
குன்னத்தூர்க்கு தெற்கே 5 கி.மீ.
இக்கோயில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு நாகேசப்பெருமான் திருக்கோயில்
விஜயபுரி, பெருந்துறை வட்டம் ஈரோடு மாவட்டம்
பெரந்துறைக்கு மேற்கே 10 கி.மீ.
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் கோவர்த்தனாம்பிகை. உள்பிரகாரத்தில் ஆறுமுகப்பெருமான் மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழ் அருளிய தலம்.
அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில்
வடமுகம் வெள்ளோடு பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்
பெருந்துறைக்கு தென்கிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஆலலேஸ்வரர் திருக்கோயில்
இங்கூர், பெருந்துறை வட்டம் ஈரோடு மாவட்டம்
பெருந்துறைக்கு தெற்கே 6 கி.மீ.
இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
சென்னிமலை,பெருந்துறை வட்டம் ஈரோடு மாவட்டம்
பெருந்துறையிலிருந்து தெற்கே 15 கி.மீ.
சிரகிரி, சிகரகிரி, சென்னியங்கிரி, புஷ்பகிரி, இக்கோயில் கடல் மட்டத்திலிருந்து 1750 அடி உயரத்தில் மலைமேல் 165*110 அடி நீளம், அகலம் கொண்டும், 1300 படிகள் கொண்டு கிழக்கு நோக்கியது. அம்மன் பெரியநாயகி. தீர்த்தம் குமார, மார்க்கண்டேய தீர்த்தம் தலவிருட்சம் பளியமரம். இத்தலத்தில் முருகப்பெருமான் விசேஷ அம்சத்துடன் காட்சியளிக்கிறார். காங்கேயத்தை மையமாகக் கொண்டு சென்னிமலை, ஊதிமலை, வட்டமலை, சிவன்மலை, திருமுருகன்பூண்டி உள்ளன. இவை எல்லாவற்றிக்கும் முதன்மையாக கருதப் படுவதால் இது சென்னிமலை. திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் சிவபெருமான் படிக்காசு வைத்தது போல் இத்தலத்தில் முருகப் பெருமான் அருணகிரிநாதருக்குப் படிக்காசு வைத்த பெருமையுடைய தலம். அருணகிரிநாதர் திருப்புகழ் அருளிய தலம். புண்நாக்கு சித்தர் சமாதியை இத்தலத்தில் காணலாம். ÷ தவராயரின் கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட தலம். கவிகாளமேகப் புலவர் இத்தலத்தைப் பற்றிச் சிலேடை யாகப் பாடிய பாடல்கள் இத்தலத்திற்குண்டு. இத்தலத்தில் ÷காஷ்டங்களில் காணப்படும் அக்னிஜாத சுப்பிரமணியர், ளெரபேயசுப்பிரமணியர், சரவணபவன், தேவசேனாதிபதி முதலிய சிற்பங்களும் அமைந்துள்ளன. கல்வெட்டுக்கள் உள்ளன, விசயலாய சோழன், கொங்கு சோழர்கள், எலம்பள்ளி ஜமீன்தார்கள் முதலியோர் திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் கூறுகின்றன. தினமும் நான்கு கால பூஜை. சஷ்டி தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அருள்மிகு சுக்கிரீசுவரர் திருக்கோயில்
சர்க்கார் பெரிய பாளையம் பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்
பெருந்துறைக்கு தென்மேற்கே 28 கி.மீ.
குரக்குத்தளி, குறும்பர்நாடு, நொய்யல் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 367 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கியது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் ஆவுடைநாயகி. இராமாயணத்தில்வரும் சுக்கிரீவன் வழிபட்ட தலம். ஆதலால் குரக்குத்தளி எனப்பெயர் பெற்றது. சுந்தரமூர்த்திசுவாமிகள் இத்தலத்தைக் குறும்பர் நாட்டைச் சேர்ந்தது என்ற விவரத்தோடு கொங்கிற் குறும்பில் குரக்குத் தளியாய் என ஊர்த் தொகையில் பாடியுள்ளதால் இத்தலம் தேவார வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. கல்வெட்டுக்கள் உள்ளன. சோழர், பாண்டியர், உ<டையார் காலத்தைச் சேர்ந்தது. தொல்பொருள் ஆய்வுத் துறையிலுள்ள அழகிய கற்றளி இக்கோயில்.
<< Previous  20  21  22  23  24  25  26  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar