Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை பெருமாள் கோயில்
 
சென்னை பெருமாள் கோயில் (217)
 
அருள்மிகு கரி வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு கரி வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம் 601203.
+91 9940984355.
சென்னை கும்மிடிபூண்டி புறநகர் ரயில் நிலையமான மீஞ்சூர் உள்ளது. பொன்னேரிக்கு இங்கிருந்து 5கிமீ. மீஞ்சூருக்கு சாலை மார்க்கமாக சென்றால் மேலூர் சக்தி தலமும் அதைத் தண்டி தேவதானம் திருமால் தலமும் உள்ளது. பஸ் ஸ்டாப்பில் இடப்புறம் சிவன் கோயிலை அடுத்த கோயில்.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். வட காஞ்சி என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் பல பதிவேடுகள் மைசூரில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மவுண் சரண்யம் என்னும் புனிதப் புல்வகை இங்கு வளர்ந்த வண்ணம் இருந்தது. அதுவே பின்னர் மருவி மீஞ்சூர் ஆனது. வைகாசி பிரம்மோற்சவம் விசேஷம். கருட சேவையும் நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள். இந்தப் பகுதியில் தேரோடு விளங்கும் ஒரே பெருமாள் கோயில் இது. கரி வரதராஜப் பெருமாள் ஸ்ரீபெருந்தேவி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை.
அருள்மிகு கல்யாண வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு கல்யாண வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை காலடிபேட்டை, திருவொற்றியூர், சென்னை 600019.
சென்னை தங்கசாலை மணிக்கூண்டிலிருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்குச் செல்ல வேண்டும் பாண்டியன், மகாராணி திரையரங்குகளைத் தாண்டி சுமார் 4 கிமீ சென்றால் திருவொற்றியூர் பாடல் பெற்ற தலம், அங்கிருந்து அரை கிமீல் கோயில். பேருந்து எண்கள் 1-பி, 1-சி, 28, 56-எ, 56-ஊ, திருவேற்காட்டிலிருந்து 59, 159, கோயம்பேடிலிருந்து 159-ஏ, 159-பி ஆகியவை சுங்கச்சாவடி வழியாகச் செல்கின்றன. இக்கோயிலுக்கு காலடிப்பேட்டை ராஜா கடை ஸ்டாப்பில் இறங்கி செல்ல வேண்டும்.
சுந்தரர் கண் பார்வை இழந்த இடம். கிழக்கிந்தியக் கம்பெனியின் காலமான 1717-1719ல் கவர்னராகத் திகழ்ந்த ஜோசப் காலட் என்பவரிடம் வீரராகவன் என்கிறவர் பணிபுரிந்து வந்தார். அவர் இந்த கவர்னருடன் நெருங்கிப் பழகக் கூடியவர். இவர் அடிக்கடி காஞ்சி வரதராஜரைச் சென்று தரிசித்து வரும் செய்தி கவர்னருக்கு எட்டியது. இதைக் கண்டு அவர் பக்தியின் உண்மையை உணர கவர்னர் இவரை அழைத்து அந்தச் க்ஷணத்தில் காஞ்சியில் என்ன நடைபெறுகிறது எனக் கேட்க அவரும் வரதராஜர் தேர் வீதியில் பவனி வரும் போது சேற்றில் மாட்டிக்கொண்டது எனக் கூறுகிறார். கவர்னரும் அது உண்மை எனக் கேட்டறிய அவர் வாழ்ந்த பகுதிலேயே கல்யாண வரதராஜப் பெருமாள் கோயிலைக் கட்ட ஏற்பாடு செய்து தந்ததாக வரலாறு. சங்கீத மேதைகளான டைகர் வரதாச்சாரியார், கே.வீ. ஸ்ரீநிவாஸ ஐயங்கார், புளியோதரை கிருஷ்ணமாச்சாரி சகோதரர்களின் ஜன்ம தலம் இந்தத் திருவொற்றியூர், காலட்பேட் என்பது மருவியே காலாடிப்பேட்டையானது என்றும் பிற்காலத்தில் வள்ளலாரின் காலடி பட்ட இடம் காலடிப்பேட்டையானது என்றும் கருத்துக்கள் உள்ளன. வீணை கிருஷ்ணமாச்சாரியார் இந்தப் பெருமாளைப் பற்றி பாடல்கள் பாடியுள்ளார். சங்கீதத் தலமாக விளங்கும் இத்தலத்தில் 600 பாடல்களுக்கு மேல் அறிந்த காகம்மா என்கிறவரிடம் டைகர் வரதாச்சாரியாரும் அவரது சகோதரியும் பாடல் கற்றதாக வரலாறு உள்ளது. எனவே டைகர் வாழ்ந்த புலியின் குகையாகவும் இந்த இடம் ஞாபகப்படுத்தப்படுகிறது. கல்யாண வரதராஜப் பெருமாள் ஸ்ரீபெருந்தேவி ஸ்ரீதேவி, பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணியிலிருந்து மாலை 9 மணி வரை. (சனிக்கிழமைகளில்)
அருள்மிகு கரிகிருஷ்ணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு கரிகிருஷ்ணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், பொன்னேரி, பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் 601204
+91 9283152447, 9894788184.
சென்னையிலிருந்து 35 கிமீல் உள்ள கொல்கத்தா மார்க்கத்தில் உள்ள இரயில் நிலையம் பொன்னேரி. மீஞ்சூரை அடுத்துள்ள இரயில் நிலையம் இது. இந்த ஊரில் ஆயர்பாடி பகுதியில் உள்ள கோயில். பொன்னேரியைச் சுற்றியுள்ள இதர கோயில்கள். 1. அரசூர் ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள் திருக்கோயில் பொன்னோரியிலிருந்து வடக்கே 5 கிமீலும் 2. எலையம்பேட்டில் கோதண்டராமர் திருக்கோயில் பொன்னேரியிலிருந்து மேற்கே 2கிமீ லும், 3.கட்டாவூரில் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் பொன்னேரியிலிருந்து வடக்கே 3கிமீலும் உள்ளன. 4. பொன்னேரியிலிருந்து வடகிழக்கே 12 கிமீல் ஆரணியாற்றின் தென்கரையில் உள்ள தத்தமாஞ்சியில் கரிய மாணிக்கப்பெருமாள் கோயில் உள்ளது.
ஹரியும் (கரிகிருஷ்ணப் பெருமாள்) ஹரனும் (அகத்தீஸ்வரர்) இணைந்து அருள் பாலிக்கும் உன்னதத் தலமிது. இப்பகுதியில் ஹரிஹர பஜார் என்கிற பெயர் இன்றும் நிலவுகிறது. சுற்றி எண்ணற்ற கோயில்கள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஹரிஹரன் சந்திப்பு உற்சவம் சித்ரா பவுர்ணமியன்று நடைபெறுகிறது. கரிகாற் சோழன் தன் சேனைகளுடன் இரவு விஸ்ராந்திக்காக அரண்ய நதிக்கரையின் தெற்கே தங்கிய போது அவனுடைய யானை ஓர் இடத்தைக் கண்டு பிளரியது. செய்வதறியாது போர் வீரர்கள் அங்கு சென்று பார்த்த போது இந்தப் பெருமாள் சுயம்புவாக விளங்குவதைக் கண்டனர். யானையால் காண்பிக்கப்பட்ட பெருமாள் என்கிற காரணத்தினாலும் (கரி என்றால் யானை) கரிகாற்சோழனால் நிறுவப்பட்ட கோயிலானதாலும் பெருமாளுக்கு இப்பெயர். முற்காலத்தில் காடாக இருந்த இப்பகுதியில் ஆயர்கள் அருகே உள்ள சிற்றூரிலிருந்து மாடு மேய்த்து வந்த போது பால் குறைவாக கறக்கவே. மாடுகளைப் பின் தொடர்ந்து காரணத்தை அறிய முற்பட்டபோது இந்தப் பெருமாள் இருக்கும் இடத்தில் பால் சொரிவதைக் கண்டனர். அப்போது அந்தப் புற்று உள்ள இடத்திலேயே தான் விளங்குவதாகவும் பசும் பால் கொண்டு அபிஷேகம் செய்தால் புற்று மண் கரைந்து தான் வெளிப்படுவேன் எனக் கூறினார். இவ்வாறு செய்து கொண்டு இருக்கையில் ஒருவர் அவசரப்பட்டு திருவடிப்பகுதியினை பாலினால் கரைக்காமல் சுரண்டி காண முயற்சித்தமையால் சாய்ந்த நிலையிலேயே திருவடிச் சேவை சேவை காட்டாமல் நின்றுவிட்டதாக வரலாறு. வடக்கு பார்த்த மூலவர். இடது காலை சிறிது மடித்தும், வலது காலை மூடியும் சேவை சாதிக்கிறார். மேலும் விசேஷமாக சாய்ந்த வெளி மண்டப தூண்கள், தாயார் இடப்புறத்தில் நின்று சேவை சாதிப்பது (அம்பாள் போன்று). எல்லா வேளையிலும் சூரிய ஒளி மூலவர் தரிசனத்தின்போது கிடைப்பது விசேஷமான தகவல்கள். அந்தராளம், முக மண்டபம் மஹா மண்டபம் மற்றும் கூடாகார விமானம் அமைந்த கோயில். விஷக் கடிகளிலிருந்தும், புத்திர தோஷத்திலிருந்தும் இந்தக் கோயில் கருடாழ்வார் நிவர்த்தி அளிக்கிறார். சித்திரைத் திருவிழாவில் இந்தக் கோயில் கொடிமரத்தில் நாற்பதுமுழம் சல்லடைத் துணியில் கருடன் திருவுருவம் வரையப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது. ஒன்பது நாட்கள் கழித்து இக்கொடி கீழே இறக்கப்படும். 80 லக்ஷம் செலவில் நடைபெறும் தேர்த்திருப்பணிக்கு தாராளமாக உதவலாம். கரிகிருஷ்ணப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி வடக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், புதுவயல் 601206, கும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.
+91 9944579844
சென்னை கல்கத்தா ரயில் பாதையில் 40 கிமீல் உள்ள ஊர் கும்மிடிப்பூண்டி. இங்கிருந்து நெடுஞ்சாலையில் வலப்புறமே இத்தலம் உள்ளது. பெரியபாளையத்திலிருந்து வருவோர் ஆரணி, சிறுவாபுரி (9கிமீ) தாண்டி வந்தவுடன் இணையும் தேசிய நெடுஞ்சாலையில் வலப்புறம் 1 கிமீ ல் சென்றால் ஊர். சாøயிலிருந்தே கோயில் தெரியும். பெரியபாளையம் ஆரணியிலிருந்து 6 கிமீ பெரியபாளையத்திலிருந்து 12 கிமீ சிவகங்கை மாவட்டத்திலும் புதுவாயலில் நாராயாண சுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது.
காஷ்யபரால் உருவாக்கப்பட்ட தொண்டை மண்டலத்தின் வடக்கே அமைந்த இவ்விடம் பிருந்தாரண்யச் க்ஷேத்திரம் என்கிற பெயரோடு ஸுரஸதரணியாற்றின் (தற்கால ஆரணி ஆறு) புறத்தில் விளங்கியது. துளசிக்காடாக இருந்தால் துளசி வனம் (பிருந்தாவனம்) என்கிற பெயரும் உண்டு. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேற்கே திகழும் கமல புஷ்கரணி ஜி.என்.டி. ரோடிலிருந்து தெரிகிறது. இங்கு முற்காலத்தில் கண்வ மகரிஷி ஆசிரமம் அமைத்து வாழ்ந்த போது இந்தப் பெருமாள் அவருக்குக் காட்சி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அழகிய வடிவமைப்பும் வேலைப்பாடும் கொண்ட கல்யாண மண்டபத்தில் கண்ணைக் கவரும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இத்தலப் பெருமானை வணங்க 100 மடங்கு பலன் கிட்டும் என்கிற தகவலும் தெரிகிறது. ஸுமாலி என்கிற கந்தர்வன் தன் அடுத்த பிறவியில் நிவாதனாகத் தோன்றி கண்வரின் யாகங்களைத் தடை செய்ய, அவர் பிரமனை வணங்கி வரம் பெற்ற போது, இப்பெருமாள் தன்னுடைய சுதர்ஸன சக்கிரத்தால் வதம் செய்ததாக வரலாறு. விஜயராகவப் பெருமாள் லக்ஷ்மி தேவி கமலவல்லி கிழக்கு திருமுக மண்டலம் வீற்றிருந்த கோலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு ஏரிகாத்த ராமர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஏரிகாத்த ராமர் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை திருநின்றவூர், திருநின்றவூர், சென்னை.
+91 44-26390434, 9380516055.
சென்னை ஆவடியினை அடுத்த திருநின்றவூர் பக்தவத்ஸலப் பெருமாள்கோயில் திவ்ய தேசத்திலிருந்து அரை கிமீ தூரத்தில் மேற்கே உள்ளது.
இங்குள்ள திவ்ய தேசத்தை மட்டுமே அறிந்தவர்கள் ஏரிகாத்த ராமனை அவ்வளவாக அறியவில்லை. இது மிகவும் தொன்மை வாய்ந்த கோயில். இன்னும் சொல்லப் போனால் திவ்ய தேசம் பக்தவத்ஸலப் பெருமாள் கோயிலுக்கும் முற்பட்ட காலம் என்று அறியப்படுகிறது. இந்தக்கோயிலின் அருகே க்ஷீர புஷ்கரணி தீர்த்தமும் மற்றோர் புறத்தில் வருண புஷ்கரணியும் உள்ளது. தாசரதி மற்றும் கைங்கர்ய மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், கரளப்பாக்கம், (கீழக்கொண்டையூர்), வழி திருநின்றவூர் 602024, திருவள்ளூர் மாவட்டம், வழி திருவள்ளூர்.
+91 44-65660386
திருவள்ளூருக்கு வடகிழக்கே 12 கிமீ ல் உள்ளது. திருநின்றவூரிலிருந்தும், ஆவடியிலிருந்தும் 61-ஈ மற்றும் 61-டி பேருந்துகள் இந்தத் தலத்தின் வழியே செல்லும். சென்னை கோயம்பேட்டிலிருந்து 61-ஈ கட் சர்வீஸ் மேலக்கொண்டையூர் செல்கிறது. வேல்டெக் கல்லூரியிலிருந்து 2கிமீ. சென்றால் வேளாங்கண்ணி கோயில் வரும். இது மோரை அருகம்பாக்கம் பாதை இதில் கதவூர் தாண்டியதும் குளத்தின் ஓரம் திரும்பி மெயின் ரோடின் இடப்புறத்தில் கரளப்பாக்கம் உள்ளது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் அவதரித்த அஹோபில மடத்து ஷஷ்ட பராங்குச யதீந்திர மகாதேசிகன் ஆராதித்தப் பெருமான். விஜயநகரத்து மன்னன் சதாசிவராயரின் புதல்விக்கு பிடித்திருந்த பேயினை நரசிம்மரின் அனுஷ்டுப் சந்த மந்திரப் பிரயோகம் செய்து அவளுக்கு சித்தப் பிரமையிலிருந்து விடிவு கொணர்ந்தார். அஹோபிலத்தில் தன்னை ஆராதிக்க திருவுளம் கொண்டு ஏற்ற நரசிம்மருக்கு அவர் செய்யும் பூஜை நேரத்தில் இன்றும் மணியோசை கேட்பதாக நம்பப்படுகிறது. தனது துறவறப் பிரவேசத்திற்கு முன் இந்தப் பெருமானை ஆராதித்ததாக வரலாறு. மனம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விமோசனம் தரும் பெருமாள் இந்த ஆதிகேசவன். அஹோபிலத்தின் 6வது பட்டம் அவதாரத் தலம். ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை
அருள்மிகு நித்யகல்யாணவாசப் பெருமாள் மற்றும் திருமலைநாத ஈஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு நித்யகல்யாணவாசப் பெருமாள் மற்றும் திருமலைநாத ஈஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில், மேலக்குண்டையூர், சிவன்வாயல் போஸ்ட் 602024, திருவள்ளூர் வட்டம், மட்டும் மாவட்டம்.
+91 9380028775
திருநின்றவூரிலிருந்தும், ஆவடியிலிருந்தும் 61-ஈ மற்றும் 61-டி பேருந்துகள் இந்தத் தலத்தின் வழியே செல்லும் சென்னை கோயம்பேட்டிலிருந்து 61-ஈ கட் சர்வீஸ் மேலக்கொண்டையூர் செல்கிறது. திருநின்றவூர் பெரியபாளையம் பாதையில் 10 கிமீ, ல் ஊர்.
இத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. வடதிசையை சமநிலைப்படுத்த சிவபெருமானின் திருமணத்தின் போது அகத்தியர் இத்தலத்திற்கு வந்து யாகங்கள் செய்ததால் யக்னமேடு எனப்பெயர் பெற்று யாக குண்டங்கள் அமைக்கப்பட்டதால் குண்டமூர் மருவி குண்டையூர் ஆனது. இந்தச் சிவனின் பெயர் திருமலைநாத ஈஸ்வரர். இந்தச் சிவலிங்கம் அகத்தியரால் திருமலையிலிருந்து கொண்டு வரப்பட்டது என்றும் சர்வ சக்தி பெற்ற திருமலை வேங்கடவன் தன் பக்தர்களுக்கு தரும் பலன்களை இத்தலத்து இறைவன் திருமலைநாதன் மூலம் வழங்கவதாக ஐதீகம். சூரியனுக்கும் அக்னி தேவனுக்கும் இத்தலத்தில் ஹோமங்கள் செய்யப்பட்ட தலம். இக்கோயில் திருப்பணி சில ஆண்டுகளுக்கு முன் செய்ய முற்பட்டு சிவலிங்கத்தை நகர்த்தியபோது கீழே ஏழு கற்கள் தென்பட்டு பின்னர் சுரங்கப்பாதையும் தென்பட்டது. இத்தலத்தில் சிவசித்த யோகியர் உயிருடன் யோகத்தில் இருப்பதால் பாதையை மூடி பழையபடி அமர்த்திவிட்டனர். இன்றும் அகத்தியர் சமாதியும் பல மகான்களின் சமாதிகளும் நிரம்பிய தலம். நித்ய கல்யாணவாசப் பெருமாள் காமாட்சியம்மை உடனுறை திருமலைநாத ஈஸ்வரர்.
<< Previous  20  21  22 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar