Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>கோயம்புத்தூர் மாவட்டம்>கோயம்புத்தூர் பெருமாள் கோயில்
 
கோயம்புத்தூர் பெருமாள் கோயில் (310)
 
அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்
கொங்கல்நகர்,கோவை
அருள்மிகு ரங்கநாதபெருமாள் திருக்கோயில்
பெரியபட்டி,கோவை
அருள்மிகு ராமர் திருக்கோயில்
கணபதி,ஊத்துக்குளி,கோவை
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
மூங்கில்தொழுவு,கோவை
அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில்
மெட்ராத்தி, கோவை
அருள்மிகு திருமலையப்பர் திருக்கோயில்
சிங்கநல்லூர் கோயம்புத்தூர் மாவட்டம்
கோயம்புத்தூர்க்கு கிழக்கே 12 கி.மீ.
3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், புளியம்பட்டி, கோவை.
கோபியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள நன்செய் புளியம்பட்டியில் இக்கோயில் உள்ளது.
நாகம் அடையாளம் காட்டிக் கொடுத்த தலமாதலால் கருவறையின் சுவர்களில் 21 நாகங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கிவிடும் என்கிறார்கள்.
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், காரமடை, கோவை.
கோவை மாநகருக்கு அருகில் உள்ள காரமடையில் அமைந்துள்ளது.
மடைவெள்ளம் போல கருணை மிக்கவரான எம்பெருமான், காரைச் செடிகள் இடையே சுயம்புவாகத் தோன்றி சேவை சாதித்தால், இத்தலம் காரமடை என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் தவம் செய்த பிரம்மன் சாப விமோசனமும் கிடைக்கப்பெற்றார் என்பது தலபுராணம்.
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், ஜடயம்பாளையம், கோவை.
சிறுமுகை- அன்னூர் வழித்தடத்தில் உள்ளது ஜடயம் பாளையம்.
திருப்பதி திருத்தலத்தை அப்படியே காண்பது போல, கோவை மாவட்டத்துக்குப் பெருமை சேர்ப்பது இங்குள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில். தினமும் இங்கு சுதர்சன வேள்வி நடைபெறுகிறது.
அருள்மிகு அரங்கநாதர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு அரங்கநாதர் தேவஸ்தானம் திருக்கோயில், பாலமலை, பாலமலை, வழி மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம் 641301.
மேட்டுப்பாளையம் கோவை இருப்புப் பாதையின் இடையே உள்ள பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து மேற்கே 8கிமீ தூரத்தில் உள்ள தலம். தார் ரோடு மலை வரை உள்ளது. தரையிலிருந்து 4கிமீ இம்மலை. அமாவாசை அன்று ஜீப் வசதி உள்ளது.
ஸுத மகரிஷி நைமிசாரண்யத்தில் அத்திரி உள்ளிட்ட ரிஷிகளுக்கு க்ஷீரவனம் என்னும் இத்தலப்பெருமையை உணர்த்தியதாகவும், இத்தலத்துப் பத்ம தீர்த்தத்தில் நீராடி துர்த்தமன், அரம்பை மற்றும் க்ருதாஸு சாபம் நீங்கப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. மூலவர் சுயம்பு, சுமார் நான்கரை மணி நேர மலையேற்றத்தில் உள்ள மேல்முடி ரங்கநாதர் தலம் இப்பெருமாளின் சிரக என்றும், இது வயிற்றுப்பகுதி என்றும் காரமடை அரங்கன் திருவடிப் பகுதியாக விளங்குவதாகவும் ஐதீகம். தொட்டியான் ஒருவனின் மாடு தினமும் இப்பெருமாள் மீது பால் சொரிய. கவுண்டன்ய கோத்திரத்தில் வந்த காளிதாசர் என்கிற ஊர்ப் பெரியவரின் அறிவுரைப்படி பர்ணசாலை அமைத்து தினமும் அபிஷேகம் செய்ய இச்சுயம்பு பெருமான் வெளிப்பட்டார். இருளர்கள் என்னும் ஆதிவாசிகள் கட்டிய கோயில் அவர்கள் திருப்பணிக்கு உபயோகித்த கைவண்டி இன்றும் கோயிலில் உள்ளது. கோயில் கட்ட மணல் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே கிடைக்கும் இடத்தைப் பெருமாளே காட்டியதாகக் குறிப்பு உள்ளது. கோயிலுக்கான உற்சவரும் பெருமாளாலேயே குறிப்பிடப்பட்டு கீழ்த்திருப்பதியின் குளக்கரையில் முகத் தழும்புடனும் (அனந்தாழ்வாரால் பெருமாளின் முகவாய்க்கட்டையில் உள்ள தழும்பு அது. பச்சைக் கற்பூரத்தால் அது அலங்கரிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே) திருமண்ணிட்டிருக்கும் நபரிடம் பெற்றுக்கொள்ளுமாறு பணித்தார். அவ்வாறே கோயிலுக்கு உற்சவரும் அமையப்பெற்றதாக வரலாறு. தெப்பக்குளம் தீர்த்தம் உள்ளது. அரங்கநாதர் சுயம்பு மூர்த்தம் தலைப்பகுதி.
பூஜை நேரம்: காலை 5 மணியிலிருந்து மாலை 10 மணி வரை.
<< Previous  29  30  31 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar