Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திண்டுக்கல் மாவட்டம்>திண்டுக்கல் பெருமாள் கோயில்
 
திண்டுக்கல் பெருமாள் கோயில் (319)
 
அருள்மிகு பெருமாள் திருக்கோயில்
மதப்பனூர், திண்டுக்கல் மாவட்டம்
அருள்மிகு வேணுகோபாலசாமி திருக்கோயில்
குன்னூர், திண்டுக்கல் மாவட்டம்
அருள்மிகு கம்பராயப் பெருமாள் திருக்கோயில்
அழப்பலாச்சேரி, திண்டுக்கல் மாவட்டம்
அருள்மிகு நரசிங்கப் பெருமாள் திருக்கோயில்
நடுவக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்
அருள்மிகு திருவேங்கடநாதப் பெருமாள் திருக்கோயில்
இடையகோட்டை திண்டுக்கல் மாவட்டம்
வேடசந்தூரிலிருந்து வடமேற்காக 23 கி.மீ.
இக்கோயில் நங்கங்கையாற்றின் கரையில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றுமதில் சுவற்றுடன், இரண்டு பிராகாரங்களுடன் மூலவர் சுயம்புவாக திருமகள், பூமிதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தி.பி. 1500 பிற்பகுதியில் இவ்வூரில் அதிகளவில் வசித்த இடையர்களில் ஒருவன் தினம்தோறும் பால் பானையுடன் மற்றொரு ஊரில் விற்றுவர தினமும் நடந்து போகும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கால் இடறி, தினமும் தவறி விழும்போது, இதை நினைவில் கொண்டு மறுநாள் தன் கோடாரியால் கால் இடறிய பகுதியை வெட்டும்போது குருதி வெளிவரக்கண்டு பயமுற்று, அவ்வூரில் உள்ளவர்களிடம் முறையிட்டு, அவ்விடத்தை தோண்டி பார்க்கும்போது, சுயம்புவாக திருவேங்கடநாதப் பெருமாள் மற்றும் திருமகள், பூமிதேவியுடன் காட்சியளித்தார். இடையனால் வெட்டுப்பட்ட பகுதி இன்றும் இறைவனின் திருமேனியில் காணலாம். இவ்வூருக்கும் இடையகோட்டை என்றும் பெயர் வழங்கலாயிற்று. அனேக உற்சவமூர்த்திகள் உள்ளன. இக்கோயிலை வள்ளால மாக்கைய நாயக்கர் என்பவர் திருப்பணி செய்ததை இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகிறது. இக்கோயிலில் பாஞ்சராத்திர ஆகமப்படி தினமும் பூஜை நடைபெறுகிறது. நவராத்திரி ஒன்பது நாட்களும், வைகுண்ட ஏகாதசியன்றும் மிக விஷேசமாக உற்சவங்கள் நடைபெறுகின்றன.
அருள்மிகு சௌந்தர ராஜபெருமாள் திருக்கோயில்
வடமதுரை திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல்லிருந்து வடகிழக்கே 17 கி.மீ.
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் சுற்றுமதில் சுவற்றுடன், அழகிய இராஜகோபுரமும், இரண்டு பிராகாரங்களுடன் மூலவர் சௌந்தர ராஜபெருமாள் தனிச்சன்னதியில் சௌந்திரவல்லித்தாயார். தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் பால்கேணி. கம்பத்தடி மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் அழகுவாய்ந்தவை. ஆண்டாள் திருப்பாவையில் மாயனை மன்னும் வடமதுரை மைந்தனை என்று குறிப்பிட்டு பாடிய தலம். அனேக கல்வெட்டுக்கள் உள்ளன. மதுரை நாயக்க மன்னர்கள் இக்கோயிலுக்கு திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகிறது. தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. ஆடிமாதம் 11 நாள் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு சவுந்திரராஜப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு சவுந்திரராஜப் பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல் மாவட்டம் 624709.
+91 451-2557232.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் உள்ள கோயில். மதுரை திண்டுக்கல் 62 கிமீ தாடிக்கொம்பு 12 கிமீ.
பாண்டி மன்னருக்கு உதவிட இந்தப்பகுதியில் தங்கிய விஜய நகர மன்னர்கள் அச்சுத மற்றும் ராமதேவராயர் கட்டிய கோயில். மண்டூக முனிவர் வழிபட்ட தலம். தாடிக்கொம்பிற்கு அருகே பாயும் குடகனாற்றின் கரையில் அழகர் கோயில் பெருமாளை வணங்கி இந்த முனிவர் தவம் செய்த போது தளாசூரன் என்கிற அரக்கன் இடையூறு செய்ய திருமாலிருஞ்சோலை திவ்ய தேசப் பெருமாள் அவனை அங்கு வதம் செய்து முனிவருக்கு உதவினார். அவர் விருப்பத்திற்கு இணங்க பெருமாள் எழுந்தருளிய தலம். பிரார்த்தனைத் தலம். கல்வி, ஞானம், நோயற்ற நிலை, திருமணத்தடை நீக்கம், மாங்கல்ய பாக்கியம், மக்கட்பேறு, கடன் நிவர்த்தி தரும் பெருமாள். மாடக்கோயில் சிற்பக் கருவூல கோயில். இதுபோன்ற சிற்பங்களை யாராலும் வடிக்கமுடியாது என்பதால் இக்காலத்திலும் சிற்பிகள்-தாடிக்கொம்பு, தாரமங்கலம், ஆவுடையார்கோயில், திருவீழிமிழலை, கொடுங்கை வெற்றி மண்டபம் நீங்கலாக சிற்ப வேலைகளைச் செய்துத் தருவோம் என்று இன்றும் எழுதித் தரும் நியமம் உள்ளது. இதுவே இக்கோயில் சிற்பத்திற்குச் சான்று. சவுந்தராஜப் பெருமாள் சவுந்தரவல்லி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு கல்யாணநரசிங்கப்பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு கல்யாணநரசிங்கப் பெருமாள் திருக்கோயில், வேடசந்தூர், அகோபில நரசிம்ம பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோயில், 68 மார்க்கெட் ரோடு வேடசந்தூர், பாளையம் கிராமம் ராமகிரி, வேடசந்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம் 624710.
+91 4551-261265, 9952646389.
வேடசந்தூர் வட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் உள்ள ராமகிரிபகுதியில் உள்ளது.
600 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். சக்கிரகிரி என்னும் புராதனப் பெயர் கொண்ட ஊர், சுந்தரபாண்டியன் காலத்தில் பாண்டிநாட்டுப் பகுதிகள் பாளையங்கள் 72 ஆக சிற்றரசர்களின் கீழ் பிரிக்கப்பட்டபோது சாமைய நாயக்கரின் கீழ் தட்டை நாடென்ற பெயரோடு விளங்கியது. தற்போது ராமகிரியான இப்பகுதி வேட்டை நாய்களை கீரிப்பிள்ளை துரத்திக் கொண்டு செல்லும் அதிசயத்தைக் கண்ணுற்ற மன்னன் வினவிய போது கல்யாண நரசிங்கப் பெருமாள் சேவை சாதிக்கும் தலம் என அறிந்தான். அவன் கனவில் பெருமாள் தோன்றி தனக்குக் கோயில் கட்டும்படி பணித்ததாக வரலாறு. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் சம்ப்ரோக்ஷணம் நடந்துள்ளது. திருமணக் கோலத்தோடு காட்சி அளிப்பதால் திருமண பாக்கியம் அருளும் பெருமாள் இவர். வைகுண்ட ஏகாதசி மற்றும் அனுமத் ஜெயந்தி விசேஷம். கல்யாண நரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி அமர்ந்த திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு கோபிநாதசுவாமி திருக்கோயில்
அருள்மிகு கோபிநாதசுவாமி திருக்கோயில், திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் 624001.
+91 451-2554241, 2554324, 8012629633.
திருச்சி மதுரை ரயில் மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம். திருச்சியிலிருந்து 95கிமீ. 700 படிகள் ஏற வேண்டும். ஒன்றரை கிமீ. வாகனம் செல்லாது. சனிக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகள் கோயில் வரை செல்கின்றன.
13ம் நூற்றாண்டில் ஆந்திர மாநில பெல்லாரியினை வல்லாள மன்னன் ஆண்டு வர அவனது மனைவி கொப்பம்மாள் மற்றும் மகன் கோபிநாதன் ஆகியோரோடு எண்ணற்ற பசுக்கள் சூழ பரிபாலித்து வந்தான். அங்கு பஞ்சம் தலை விரித்து ஆடியது. அப்போது அவ்வழியே வந்த அந்தணர் ஒருவருக்கு அங்கிருந்த வறட்சியினைப் பொருட்படுத்தாது அன்னம் பாலித்தார். அவனும் அம்மன்னனை பாண்டிய தேசத்தில் இந்தப் பசுக்களோடு சென்று தங்கினால் சுபிக்ஷமாக இருக்கலாம் எனக் கூறினார். அவனும் அவ்வாறே ரெட்டியார் சத்திரத்து மலையடிவாரத்தில் தங்கினான். அந்தப் பகுதியும் சில காலத்தில் வறட்சிக்குள்ளானது. அவனும் இறைவனிடம் தன் உயிரையாவது எடுத்துக் கொண்டு அந்தப் பசுக்களையும், பிற உயிரினங்களையும் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இறைவன் அவன் பக்திக்குச் செவி சாய்த்து உடன் மழை பொழியச் செய்தார். அவனும் மலையுச்சியில் பசுக்களை மேய்த்து வந்தான். அவன் தாயார் கொப்பம்மாள் தினமும் மதிய உணவு கொண்டு செல்வாள். தன் வேணு கானத்தால் பசுக்களைக் கவர்ந்து இவ்வாறு இருந்த சமயத்தில் அவன் இறைவனிடம் கொடுத்த சத்யம் நினைவுக்கு வந்தது. ஓர் காளை மாட்டை நிறுத்தி வாத்தியம் வாசிப்பதை நிறுத்தினான். அதன் மேல் ஏறி தூக்கிட்டுக் கொண்டான். அவன் தாய் வந்து பார்த்த போது சிறு குடலும் பெருங்குடலும் அந்தக் காளையின் மீது விழுந்திருந்தது. இந்த அவலத்தைக் கண்டு அவளும் இறந்து போனாள். பின்னர் ஒரு சமயம் கன்னிவாடி ஜமீன் பரிஷ் என்பவர் மலை மேல் மாடு வேட்டையாடச் சென்ற போது அங்குள்ள மாடுகள் யாவும் மான்களாகத் தென்பட்டன. அன்று மாலை அவன் அரண்மனைக்கு வந்த சித்தர் மூலம் மலையில் நடந்த உண்மைச் சம்பங்களை அறிந்தார். இறைவன் பசுக்களைக் காக்கவே அவருக்கு பசுக்களை மான்களாக காண்பித்தார் எனக் கூறினார். பின்னர் அவர் சொல்படி மலையிலிருந்து தீர்த்தம் கொணர்ந்த தன் ஜமீன் முழுவதும் ப்ரோக்ஷணம் செய்து வரும் செல்வந்தனாக மாறினான். அவர் அறிவுரையின்படி மலை மேல் (கோபிநாதன் மலை) குழலுடன் அந்த வேப்ப மரத்தின் கீழ் கோயில் கட்டினான். கொப்பம்மாளுக்கும் சிலை நிறுவினான் என்பது வரலாறு. இன்றும் இங்குள்ள பெருமாள் பசுக்களைக் காப்பதாக ஐதீகம். கோபிநாதசுவாமி குழலுடன் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை
<< Previous  30  31  32 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar