Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் பெருமாள் கோயில்
 
காஞ்சிபுரம் பெருமாள் கோயில் (445)
 
அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் ஞானபிரான் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் ஞானபிரான் தேவஸ்தானம் திருக்கோயில், திருவலந்தை, மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம் வட்டம், காஞ்சி மாவட்டம் 603104.
+91 9444235284.
ஈ.சி.ஆர் சாலையில் திருவிடந்தையிலிருந்து 15 கிமீ தூரம் மகாபலிபுரம். அங்குள்ள ஸ்தல சயனப் பெருமாள் திவ்ய தேசத்திற்கு சிறிது தூரத்தில் கோயில்.
பல்லவன் காலத்தில் அமைந்த குடைவரைக் கோயில். பல்லவ அரசன் ஹரிகேசர வர்மன் நித்தம் திருவிடந்தைக்குத் தன் தாயாருடன் சென்று ஆதிவராகப் பெருமானை தரிசித்து, பின் அரண்மணைக்கு வந்து அடியார்க்கு அன்னம் பாலித்து உண்ணும் வழக்கம் கொண்டவனாய் இருந்தான் இவனது பக்தியினைச் சோதிக்க ஓர் வயோதிகனாக உருக்கொண்டு பெருமான் வலக்கரத்தில் பூமிதேவியினை ஓர் பெண்ணாகவும் மாற்றி இவன் முன்னே வந்து தனக்கு மிகவும் பசியாக உள்ளது. எனவே உடன் அன்னம் பரிமாறும்படிக் கூறினார். தன் வழக்கத்தை எவ்வாறு கைவிடுவது என்று எண்ணி அந்த வயோதிகரையே திவ்ய தேசத்துப் பெருமாளாக பாவித்து உணவு பரிமாறினார். அவன் இச்சைப்படியே வராக மூர்த்தியாகக் காட்சி தந்து இத்தலத்தில் ஞான பிரானாக அருள் பாலிக்கிறார். ஆதிவராகப் பெருமாள், ஞானபிரான் அகிலவல்லி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: (ஒரு காலம் காலை 8 மணிக்கு திருவாராதனை)
அருள்மிகு வைகுண்ட நாராயணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வைகுண்ட நாராயணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், வயலூர் (மாமல்லபுரம்), வழி மாமல்லபுரம், 603102.
மகாபலிபுரத்திலிருந்து 10கிமீ தொலைவில் உள்ள தலம் வாயலூர் என்னும் வயலூர்.
வாவூர் என்பது புராதனப் பெயர். கடற்கரை பட்டினங்களான புதுப்பட்டினம், மாமல்லபுரம் மற்றும் புதுப்பட்டினத்திற்கு வாயிலாக அமைந்ததால் வாயிலூர் என்று வழங்கப்பட்டு பின் வயலூரானது. இத்தலத்திற்கு வா என வியாக்ரபாதரை அழைத்ததால் வாவூர் ஆனது. வியாக்ரபாதர் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்த 108 தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. சைவமும் வைணவமும் இணைந்து பரவும் இத்தலத்தில் அங்கயர்கண்ணி உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் அருள் பாலிக்கிறார். ஒரே நேரத்தில் சிவனையும் பெருமாளையும் சேர்த்து தரிசிக்கும் பேறு வேண்டிய பக்தனுக்காக இவ்வாறு இருவரும் ஒரே தலத்தில் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது. பல்லவர் காலக்கோயிலுது. நரசிம்மவர்மனின் அமைச்சரின் மனைவி மனஸ்தாபத்தினால் திருமணம் ஆனப் புதிதிலேயே கடலில் மூழ்கி இறக்க பின் இந்தச் சிவ பெருமானை வணங்கி திருமணம் பாக்கியம் பெற்றதாகவும் தலக்குறிப்பு கூறுகிறது. வைகுண்ட நாராயணப் பெருமாள் மகாலக்ஷ்மி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுகமண்டலம்.
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், கலியுக வரதராஜப் பெருமாள், மலைமண்டலப் பெருமாள் திருக்கோயில், சதுரங்கப்பட்டினம் (சத்ரஸ்), செங்கல்பட்டு வட்டம், காஞ்சி மாவட்டம் 603102.
+91 44-27487064.
செங்கல்பட்டிலிருந்து 27கிமீ மகாபலிபுரத்திலிருந்து 20 கிமீ. வீராபுரம் சாய்பாபா கோயில் அருகே உள்ளது. 108 ஆம் எண் பேருந்து கோயம்பேடிலிருந்து கல்பாக்கம் செல்லும்.
200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நெசவாளர் தங்கியிருந்ததாகவும் இப்பகுதியினை சம்புவராய செட்டியார் ஆண்டு வந்ததாகவும், கிருஷ்ண தேவராயர் காலத்தில் சதிரவாசகன் பட்டணம் என்றழைக்கப்பட்டு பிற்காலத்தில் ஆங்கிலேயர் (டச்சு) பாணியில் சத்ரஸ் ஆனது. இங்கு 2 சிவன் மற்றும் 2 பெருமாள் கோயில்களும் உள்ளன. மலை மண்டலப்பெருமாள் என்றழைக்கப்படும் இவர் தொன்மை மிக்கவர். பெருமாளின் திருவடியும் கருடனின் திருமுடியும் நேர்க்கோட்டில் உள்ளது சிறப்பான அமைப்பு. இது யோக நரசிம்மர் கோயிலாக இருந்த போதிலும், முன்பு போர்காலத்தில் பெருமாளைக் காப்பதற்காக இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததனால் இங்கு இப்பெருமாள் பிரதானமாக விளங்குகிறார். குரு இராகவேந்திரரும் இத்தலத்தை விஜயம் செய்து வழிபட்டதாகத் தகவல். இங்குள்ள நந்தவனத்தில் அவர் பெருமாளுக்கு பூ பறித்துச் சாத்தியதாகவும் வரலாறு. இங்குள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் தனியாக சூரியன். ராகு கேதுவிற்குச் சன்னிதி உள்ளன. சர்ப்ப தோஷ நிவர்த்தி தரும் தலம். உளுந்து வடைமாலையும் பிரார்த்தனையாகச் செலுத்தப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் இங்கு ஒர் சித்தர் வாழ்ந்தார். அவரது திருவுருவமும் இக்கோயிலில் உள்ளது. (சிவன்கோயிலில்). இங்கு தொல் பொருள் ஆய்வு துறையின் பராமரிப்பில் உள்ள பல டச்சு சின்னங்கள் உள்ளன. லக்ஷ்மிநாராயணப்பெருமாள் கலியுக வரதராஜப்பெருமாள் மலைமண்டலப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தேவி அமர்ந்த திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு øகுந்தவாசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு øகுந்தவாசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், மானாம்பதி (மகாபலிபுரம்), மகாபலிபுரம் மற்றும் வழி திருக்கழுக்குன்றம் வட்டம் காஞ்சி மாவட்டம் 603104.
+91 9941472894, 9790879760.
சென்னை பாண்டி ஈ.சீ. ஆர் பாதையில் உள்ள தலம் மகாபலிபுரம். இது திவ்ய தேசமாகும். மகாபலிபுரத்திலிருந்து இத்தலம் 6கிமீ. திருப்போரூரிலிருந்து வருபவர்கள் கேளம்பாக்கம் செக் போஸ்டில் (10 கிமீ தூரம்) வலப்புறம் திரும்பினால் ஈ.சீ. ஆர் பாதை மற்றும் திருவிடந்தை திவ்ய தேசமும் வரும். மானாம்பதி செல்லும் பாதையில் அருகுன்றம் மற்றும் எச்சூரில் லக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோயில்கள் உள்ளன. மானாம்பதி எச்சூரிலிருந்து 4 கிமீ. சென்னையிலிருந்து 25 கிமீ தொலைவில் பழைய மகாபலிபுரம் சாலையில் சோழிங்கநல்லூருக்கு முன்னதாக செம்மஞ்சேரியில் ஸ்ரீநிவாஸப்பெருமாள் கோயில் உள்ளது.
மானாம்பதி என்கிற பெயரில் உத்தரிமேரூர் அருகிலும் ஓர் அருணகிரிநாதர் பாடல் பெற்ற முருகன் தலம் உள்ளது. அது விசூர் என்று அழைக்கப்படுகிறது. பல்லவர் காலக் கற்றளி. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி செய்யப்பட்டது. இத்திருக்கோயிலின் மூலவர் மேல் ஓர் நல்ல பாம்பு இருந்து வந்ததென்றும் திருப்பணிக் காலத்தில் அது அங்கேயே தங்கி இருந்து மேற்பார்வை இடுவது போல் இருந்ததும் தற்காலத்தில் நிகழ்ந்த அதிசயமாகக் கூறப்படுகிறது. வைகுந்தவாசப் பெருமாள் வேதவல்லி அமர்ந்த திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், ஒலக்கூர், வழி திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், 604305.
+91 4147-238271.
திண்டிவனம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 140 கிமீல் உள்ள ஊர். திண்டிவனத்திற்கு வடக்கே 15கிமீல் இந்தத் தலம் உள்ளது. திண்டிவனத்திலிருந்து -05.30 முதல் 10.30 வரை அரை மணி நேரத்திற்கு பேருந்து ஒரு பேருந்து உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் மேற்கே இரண்டரை கிமீல் ஊர்.
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊர். 1000 ஆண்டுகளுக்கு முன்னர் உலக்கையூர் என்று பெயர். 1400 ஆண்டுகளுக்கு முன் அதியமான் வந்தக் குறிப்பு உள்ளது. இராஜேந்திர சோழனின் மகன் விஜய ராஜேந்திரன் 1018-1054 காலத்தில் போரில் யானை மேல் உயிர் துறந்த செய்தியும் இவ்வூர்ப் பெயர் விஜய ராஜேந்திரவளநாடு என்கிற குறிப்பும் கல்வெட்டாக உள்ளன. ஊரில் காமாட்சி உடனுறை அகஸ்தீஸ்வரர் கோயில் தற்போது திருப்பணி நடைபெறுகிறது. 3ம் நந்திவர்மன் மகன் கம்ப வர்மனின் (646-878) யானை இவ்வூரையே அழித்ததாகத் தகவல். பராந்தக சோழன் (907-953), முதலாம் குலோத்துங்கன் (1110-1111), சிவன் கோயிலில் உள்ள பைரவர் திருப்பணி 13ம் நூற்றாண்டு, காமாட்சி அம்மன் 16ம் நூற்றாண்டு என்று சரித்திரப் பின்னணி அடுக்காகக் கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய தலம். இவ்விடத்தை ஒய்மா நாடு என்றும் குறிப்பிடப்படுகிறது. இக்கோயில் 600 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. முகமதியர் காலத்தில் சின்னாபின்னப் படுத்தப்பட்ட இக்கோயிலிருந்து உற்சவர்கள் மறைத்து வைக்கப்பட்டதாகவும், ஊர் மக்கள் அவற்றை முயற்சி செய்து நிர்மானித்து பிரதிஷ்டை செய்தனர். பிற்காலத்தில் மதில் சுவர் திருப்பணி நடைபெற்ற போது மறைத்து வைக்கப்பட்ட உற்சவர் சிலைகள் கிடைத்ததாகவும் வரலாறு. சுந்தர வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு அருளாளப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு அருளாளப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், முன்னூர் 604301, திண்டிவனம் வட்டம்.
+91 44-22470545, 9444103813.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 140 கிமீ தூரத்தில் உள்ள ஊர் திண்டிவனம். திண்டிவனம் மரக்காணம் பாதையில் 18கிமீ தொலைவில் மிகப் ப்ராதனமான முன்னூர் தலம் உள்ளது. இது அப்பாதையில் உள்ள ஆலங்குப்பம் என்கிற ஊரிலிருந்து தெற்கே 3கிமீல் உள்ளது. திண்டிவனத்திலிருந்து 1,22 பேருந்து வழித்தடம் செல்கிறது. ஆடவல்லீஸ்வரர் மற்றும் அருளாளப் பெருமாள் கோயில்கள் உள்ளன.
தாருகாவனம் என்றழைக்கப்பட்ட இப்புராணத் தலம் முன்னூர், மூதூர் எனப் பெயர்கள் கொண்டது. 2ம் குலோத்துங்கனுக்கு திருநடனக் காட்சி காட்டிய ஆடவல்லீஸ்வரர் கோயிலும் இங்கு உள்ளது. முன்னூர் தலத்தில் உள்ள சிவன்கோயில் சுயம்பு மூர்த்தம் கொண்டது. இரண்டாவது குலோத்துங்கனால் கட்டப்பட்டது. அருளாளப் பெருமாள் கோயில் பல்லவர் காலத்துக் கோயில், தாருகாவனம் என்றும் போற்றப்படும் இத்தலம். மகரிஷிகளால் பூஜிக்கப்பட்ட பூலோக கைலாசம். 2700 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டட அமைப்பு. நீராழி மண்டபம் போன்ற அமைப்புக் கொண்ட கர்ப்பக்கிரகம் பார்வதி தேவியால் அமைக்கப்பட்ட சிவனை வழிபட்டதாக ஐதீகம் பிரம்ம தீர்த்தம். வன்னி தல மரம். மிக அபூர்வமான தெற்கு பார்த்த குரு பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது. ராஜநாராயண சதுர்வேதிமங்கலம் என்றும் 3ம் ராஜராஜன் காலத்திற்கு முன் இத்தல இறைவன் மூலஸ்தான முடைய மகாதேவர் என்றும் போற்றப்பட்டது. முன்னூர் தலம் பற்றி 52 கல்வெட்டுகள் உள்ளன. தேவார வைப்புத்தலத்தில் இடம்பெற்ற முந்தையூர் முதுகுன்றம் என்கிற பாடலில் வரும் அந்த ஊர்ப் பெயரும் இதுவே எனவும் ஆராய்ச்சியாளர்கள் ஓர் முடிவுக்கும் வரும் நிலையில் உள்ளனர். மேற்கு பார்த்த அருளாளப் பெருமாள் கோயிலும் புணர் நிர்மானம் பெற்றுள்ளது. இது கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டு பிற்கால சோழ சாம்ராஜ்யத்தில் சிதிலமடைந்தது. சுல்தான்களின் ஆதிக்கத்தில் பாதகம் ஏற்பட்டது. 1860 ல் வாழ்ந்த பரம வைணவத் தொண்டரான அனந்தாச்சாரியர் என்பவரின் கனவில் கள்ளிக்காட்டிற்கு இடையே தான் இருப்பதாகக் கூறி காட்சி கொடுத்தப் பெருமாள். இவரே இக்கோயிலின் திருப்பணிகளைத் துவக்கி திருக்கோயிலை சீர்ப்படுத்தினார். அருளாளப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, ஆதிகேசவப் பெருமாள் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை.
அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் தேவஸ்தானம் திருக்கோயில், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், 604001.
+91 9944238917
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் இருப்புப் பாதையில் உள்ள ஊர் திண்டிவனம், சென்னையிலிருந்து 140கிமீ. நகரத்திலேயே இக்கோயில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து அரை கிமீ.
தொன்மை வாய்ந்த தலம். திண்டீச்சுரம் என்கிற பெயரில் பழைய பெயர் கொண்ட தேவார வைப்புத் தலமும் ஆகும். கல்வெட்டுகளில் ஒய்மா நாட்டு திருத்திண்டீச்சுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. திந்திரிணீ என்னும் புளியம் காடு நிறைந்த பகுதியாக விளங்கிய தலமிது. பல்லவர் கால ராஜ கோபுரம். காஞ்சி க்ஷேத்திரத்தைச் சார்ந்த தலம். பிரமன் காஞ்சியில் யாகம் நிகழ்த்தியபோது யாக வாசல்கள் வனத்வயம் புரத்வயம் என 4 திக்குகளுக்கும் 4 வாயில்கள் நியமித்தார். வனத்வயம் என்பது வடக்கே நாராயணவனமும் தெற்கே திந்திரிணீ வனம் என்னும் எல்லையும், கிழக்கே மகாபலிபுரமும் அமைக்கப்பட்டதாகத் தகவல். மேற்கே விரிஞ்சிபுரமும் அதில் லட்சுமி நரசிம்மர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். மார்கண்டேயர் வேண்டிக்கொண்ட தன் பேரில் உக்கிரமாக இருந்த மூலவர் லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியாக சாந்தமாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் திந்திரிணீ வனத்தில் திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி ஆகிய அரக்கர்கள் செய்த கொடிய செயலை அனுமன் 4 கரம் கொண்டு போரிட்டுக் காத்ததால் இந்த மூலவர் ஆஞ்சநேயர் சங்கு சக்கிரத்துடன் 4 கரங்கள் கொண்டு விளங்குகிறார். சித்திரையில் ஆஞ்சிநேயருக்கு இலட்சார்ச்சனை, வைகாசியில் பிரம்மோற்சவம், ஆனியில் ஜேஸ்டா அபிஷேகமும், ஆடிப்புரமும், ஆவணி விநாயக சதுர்த்தியும், புரட்டாசியில் நவராத்திரி உற்சமும் நடைபெறுகிறது. அனுமத் ஜெயந்தி மற்றும் தனுர் மாதப் பூஜைகளும், கூடாரவல்லியும் நடைபெறுகின்றன. லக்ஷ்மி நரசிம்மர் மகாலட்சுமி, ஆஞ்சநேயர் கிழக்குத் திருமுக அமர்ந்த திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை
அருள்மிகு அழகு சுந்தரவரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு அழகு சுந்தரவரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், ஆலப்பாக்கம், வழி சாலவாக்கம், உத்திரமேரூர் வட்டம், காஞ்சி மாவட்டம் 603107.
+91 9444006204
செங்கல்பட்டை தாண்டி வரும் பாலாறு பாலம் தாண்டி வலப்புறம் சாலை ஆலப்பாக்கம் செல்லும். மெய்பூரைத் தாண்டி ஆலப்பாக்கம் 13 கிமீ. சாலவாக்கம் அருகே உள்ளது. செங்கல்பட்டு அருகே மற்றோர் ஊர் இதே பெயரில் உள்ளதால், இவ்வூர் ஆலப்பாக்கம் பாலவாக்கம் என்றும் கூறப்படுகிறது. செங்கல்பட்டு உத்திரமேரூர் பாதையில் வருபவர்கள் புக்கத்துரை தாண்டி வரும் சாலவாக்கம் கூட்டு ரோடில் வலப்புறம் செல்லும் சாலையில் 5கிமீ சென்றால் சாலவாக்கமும் அங்கிருந்து ஒன்றரை கிமீ தூரத்தில் ஆலப்பாக்கமும் உள்ளது. இந்தச் சாலை வாலாஜா மற்றும் திருமுக்கூடல் செல்கிறது.
பெருந்தேவிக்கு பதிலாக ஆனந்தவல்லி இருப்பது சிறப்பு. இவ்வாறு வரதராஜருக்கு இங்கும் உத்திரமேரூரிலும் தான் பெருந்தேவிக்கு பதிலாக ஆனந்தவல்லி என்பது தாயார் பெயர். குடும்ப கஷ்டம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு படியில் நெய் தடவி சர்க்கரைக் கோலம் போட்டு வேண்டுதல், மஞ்சள் வேஷ்டி தரித்து திருமண பிரார்த்தனை செய்தல் பலன் தரும். சுவாமி அழகு சுந்தர வரதராஜர் 800 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர். நிகமாந்த மகா தேசிகன் ஆராதித்தப் பெருமாள். காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த போது வழிபட்டார். சுந்தரம் என்றால் அழகு . காஞ்சி வரதனை அழகுறக் கண்ட இவர். இந்தப் பெருமாளை அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்ததால் அழகு சுந்தர வரதராஜர் எனக் குறிப்பிட்டார். உட்பட்டூர் என்பது புரதானப் பெயர். இதற்கான காரணம் ஓர் சமயம் வெள்ளம் இத்தலத்தை பாதித்துப் பெருமாளை அடித்துச் செல்ல நினைத்தபோது நிகமாந்தரின் வேட்டியில் பட்டு வெள்ளம் நிறுத்தப்பட்டது. வெள்ளம் அவர் உருவம் மேல் பட்ட ஊர் உட்பட்டூர் ஆனது. இக்கோயிலிற்கு உற்சவர் இல்லாத குறை இருந்தமையால் ஊர் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்த வெள்ளியினைக் கொண்டு வந்து உருக்கி உற்சவர் செய்தனர். ஒற்றுமைக்கு ஆதாரச் சின்னமாய் இந்த உற்சவம் திகழ்கிறது. தேசிகருக்கும், உடையவருக்கும் கருங்கல் மூர்த்தம் கர்ப்பக்கிரகத்திலேயே உள்ளது. நினைத்த காரியங்களை நிறைவேற்றும் பெருமாளுக்கு அவரவர்கள் வேண்டிக்கொண்ட வண்ணம் பிரார்த்தனைச் செலுத்துகின்றனர். பாஞ்சராத்ரம் வடகலை சம்ப்ரதாயத்துடன் கோயில் திகழ்கிறது. சித்ரா பவுர்ணமி, ஆனித் திருமஞ்சனம், கல்யாண உற்சவம் விசேஷம், லக்ஷார்ச்சனையும் செய்யப்படுகிறது. சனிக்கிழமை நல்ல பக்தர் கூட்டம் வருகிறது. அழகு சுந்தரவரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆனந்தவல்லி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம். ஒரு கால பூஜை.
அருள்மிகு அழகு சுந்தரவரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு அழகு சுந்தரவரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், ஆலப்பாக்கம், வழி சாலவாக்கம், உத்திரமேரூர் வட்டம், காஞ்சி மாவட்டம் 603107.
+91 9444006204
செங்கல்பட்டை தாண்டி வரும் பாலாறு பாலம் தாண்டி வலப்புறம் சாலை ஆலப்பாக்கம் செல்லும். மெய்பூரைத் தாண்டி ஆலப்பாக்கம் 13 கிமீ. சாலவாக்கம் அருகே உள்ளது. செங்கல்பட்டு அருகே மற்றோர் ஊர் இதே பெயரில் உள்ளதால், இவ்வூர் ஆலப்பாக்கம் பாலவாக்கம் என்றும் கூறப்படுகிறது. செங்கல்பட்டு உத்திரமேரூர் பாதையில் வருபவர்கள் புக்கத்துரை தாண்டி வரும் சாலவாக்கம் கூட்டு ரோடில் வலப்புறம் செல்லும் சாலையில் 5கிமீ சென்றால் சாலவாக்கமும் அங்கிருந்து ஒன்றரை கிமீ தூரத்தில் ஆலப்பாக்கமும் உள்ளது. இந்தச் சாலை வாலாஜா மற்றும் திருமுக்கூடல் செல்கிறது.
பெருந்தேவிக்கு பதிலாக ஆனந்தவல்லி இருப்பது சிறப்பு. இவ்வாறு வரதராஜருக்கு இங்கும் உத்திரமேரூரிலும் தான் பெருந்தேவிக்கு பதிலாக ஆனந்தவல்லி என்பது தாயார் பெயர். குடும்ப கஷ்டம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு படியில் நெய் தடவி சர்க்கரைக் கோலம் போட்டு வேண்டுதல், மஞ்சள் வேஷ்டி தரித்து திருமண பிரார்த்தனை செய்தல் பலன் தரும். சுவாமி அழகு சுந்தர வரதராஜர் 800 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர். நிகமாந்த மகா தேசிகன் ஆராதித்தப் பெருமாள். காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த போது வழிபட்டார். சுந்தரம் என்றால் அழகு . காஞ்சி வரதனை அழகுறக் கண்ட இவர். இந்தப் பெருமாளை அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்ததால் அழகு சுந்தர வரதராஜர் எனக் குறிப்பிட்டார். உட்பட்டூர் என்பது புரதானப் பெயர். இதற்கான காரணம் ஓர் சமயம் வெள்ளம் இத்தலத்தை பாதித்துப் பெருமாளை அடித்துச் செல்ல நினைத்தபோது நிகமாந்தரின் வேட்டியில் பட்டு வெள்ளம் நிறுத்தப்பட்டது. வெள்ளம் அவர் உருவம் மேல் பட்ட ஊர் உட்பட்டூர் ஆனது. இக்கோயிலிற்கு உற்சவர் இல்லாத குறை இருந்தமையால் ஊர் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்த வெள்ளியினைக் கொண்டு வந்து உருக்கி உற்சவர் செய்தனர். ஒற்றுமைக்கு ஆதாரச் சின்னமாய் இந்த உற்சவம் திகழ்கிறது. தேசிகருக்கும், உடையவருக்கும் கருங்கல் மூர்த்தம் கர்ப்பக்கிரகத்திலேயே உள்ளது. நினைத்த காரியங்களை நிறைவேற்றும் பெருமாளுக்கு அவரவர்கள் வேண்டிக்கொண்ட வண்ணம் பிரார்த்தனைச் செலுத்துகின்றனர். பாஞ்சராத்ரம் வடகலை சம்ப்ரதாயத்துடன் கோயில் திகழ்கிறது. சித்ரா பவுர்ணமி, ஆனித் திருமஞ்சனம், கல்யாண உற்சவம் விசேஷம், லக்ஷார்ச்சனையும் செய்யப்படுகிறது. சனிக்கிழமை நல்ல பக்தர் கூட்டம் வருகிறது. அழகு சுந்தரவரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆனந்தவல்லி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம். ஒரு கால பூஜை.
அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், அன்னாத்தூர், வழி அன்னாத்தூர், சித்தன்னகாவூர் அஞ்சல், காஞ்சி மாவட்டம் 603107.
+91 9444006204
ஆலப்பாக்கம் சாலவாக்கத்திலிருந்து 5கிமீல் செங்கல்பட்டிலிருந்து காவணிப்பாக்கம் செல்லும் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்லும். பாலாற்றின் பாலத்தைக் கடந்து மெய்யூர் வழியாகவும் வரலாம்.
500 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த தலம். காஞ்சி யானைகளுக்கு அன்னமிட்ட தோப்புப் பகுதியிருந்ததால் அன்னாத்தூர் என்கிற பெயர் பெற்றது. இங்கு ஆராதனை செய்த பாஷ்யம் அய்யங்கார் பெரும் வறுமையில் வாடி வழியில்லாது போக எறும்பு ஒன்று அன்னத்துப் பருக்கையை ஊர்ந்து வந்து ஓர் பாத்திரத்தில் இட பொருளாதாரம் வளர்ச்சி பெற்றதால் அன்னாத்தூர் என்பது மற்றோர் குறிப்பு. மஹாபாகவத அக்ரஹாரம் என்பது புரதானப் பெயர். அஹோபில மடத்து 33ம் அழகிய சிங்கர் இப்பெருமானை வழிபட்டு தலத்திற்கு இவ்வாறு பெயரிட்டதாகவும் வரலாறு. மேலும் தாமரைத் தண்டில் திரி செய்து 48 நாட்கள் விளக்கேற்றி பிள்ளைப் பேறு பெற்றதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அன்னாத்தூர் ராஜகோபாலச் சாரியார் தம்பி ராகவாச்சாரியார் மற்றும் இவ்வூரில் வாழ்ந்த புண்ணியகோடி முதலியாரின் முயற்சியினால் 2003ல் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றுள்ளது. ஜெய விஜய துவார பாலகருக்குப் பதிலாக சக்ர-தரன் சங்க-தரன் ஓவியம் உள்ளது. சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம். ஒரு கால பூஜை
<< Previous  42  43  44  45  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar