Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவண்ணாமலை மாவட்டம்>திருவண்ணாமலை அம்மன் கோயில்
 
திருவண்ணாமலை அம்மன் கோயில் (335)
 
அருள்மிகு ரேணுகாம்பாள் என்கிற எல்லையம்மன் திருக்கோயில்
சேராம்பட்டு,செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில்
அகோபடவேடு,போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
புதூர் செங்கம்,செங்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
அருள்மிகு மனோன்மணியம்மன் உடனுறை அகத்தீஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு மனோன்மணியம்மன் உடனுறை அகத்தீஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில், வேட்டவலம் 606754, திருவண்ணாமலை வட்டம் மற்றும் மாவட்டம்.9940719820
திருவண்ணாமலைக்கு தென்கிழக்கே விழுப்புரம் பாதையில் 24 கிமீ தொலைவில் உள்ள ஊர். இதே பகுதியில் உள்ள பண்டரியர் திருமண மண்டபத்திலிருந்து அரை கி.மீ தொலைவில் தெய்வசிகாமணி சுவாமி அவர்களின் அதிஷ்டானம் உள்ளது.
மலை மேல் அமைந்துள்ள கோயில், இங்கிருந்து திருவண்ணாமலை ஆலயத்தைக் காண முடியும். அரண்மனையோடு இணைந்த கோயில். இவ்வாலயத்தில் மரகத லிங்கம் உள்ளது. இங்கிருந்து 2 கிமீ தொலைவில் வேட்டவலம் திருவண்ணாமலை சாலையில் பச்சையம்மன் கோயில் உள்ளது. 20வது நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கோயில். ஆடி மாத திங்கள் மற்றும் வெள்ளி விசேஷ நாட்கள் அன்று விசேஷ அலங்காரங்கள் உண்டு. அருகே உள்ள அகத்தீஸ்வரர் கோயிலையும் திருவண்ணாமலை கிரிவலத்தின் போது தரிசிக்க வேண்டும் என்கிற ஐதீகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. பங்குனியில் பிரம்மோற்சவம்.
பூஜை நேரம்: நான்கு கால பூஜை
அருள்மிகு கெங்கையம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு கெங்கையம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், சந்தவாசல் 606905, திருவண்ணாமலை மாவட்டம்.
+91 04181-243207, 9677341227.
திருவண்ணாமலை வேலூர் பாதையில் உள்ள போளூர், கீழ்பட்டு தாண்டியதும் கண்ணமங்கலத்திற்கு முன் வரும் சந்தவாசல் கோயில் 49 கிமீ தொலைவில் உள்ளது.
ராஜ்கம்பீர மலை இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ளது. சிவபெருமான் ஒரு காலை இந்த இடத்திலூம் மறு காலை திருவண்ணாமலையிலூம் வைத்தாக ஐதீகம். இன்றும் அவர் கால் வைத்த இடம் ஒரு குட்டையாக உள்ளது. இதனை சிவபாதம் என்று அழைக்கின்றனர். அவர் இங்கு மீதமிருந்த காலைப் பதித்ததனால் மீதிமலை என்கிற பெயரும் உண்டு. விஷ்ணு கார்த்திகை அன்று இந்த மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. அம்மன் அமர்ந்த கோலத்தில் கங்கை அம்மனாக காட்சி தருகிறாள். தக்ஷணின் அவமரியாதையினால் வெகுண்ட சிவனின் தாண்டவத்தினால் எழுந்த தீயினைத் தாளாத கங்கை மகாவிஷ்ணுவிடம் வேண்ட 7 தீர்த்தங்களை உருவாக்கினார். அப்போது கட்டப்பட்ட கங்கை மற்றும் பெருமாள் ஆலயங்கள் காலப் போக்கில் மறைந்தன.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை (வெள்ளி மதியம் 1 மணி வரை)
<< Previous  32  33  34 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar