கோவை: கோவையில் ஸ்ரீ சபரீச சேவா சங்கத்தின் 13-ஆம் ஆண்டு ஸ்ரீ தர்மசாஸ்தா மஹோத்சவம் இன்று ஜன., 3, 4ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் இடையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள V.R.G திருமண மஹாலில், ஸ்ரீ சபரீச சேவா சங்கத்தின்13-ஆம் ஆண்டு ஸ்ரீ தர்மசாஸ்தா மஹோத்சவம் நாளை (சனி) மற்றும் 4-ம் தேதி (ஞாயிறு) ஆகிய இரு தினங்கள் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.
விழாவின் முதல் நாளான இன்று காலை 6.00 மணி முதல் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் மற்றும் ஸ்ரீ ஸ்வயம்வர பார்வதி ஹோமங்கள் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும், தொடர்ந்து ஸ்ரீ சபரீச பஜன் மண்டலி பேரூர் சத்யா & பார்ட்டி குழுவினரின் நாமசங்கீர்த்தனமும் நடைபெற்றது. மாலை 5.00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் (நகர்வலம்), இரவு திரு ஆய்க்குடி குமார் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும் நடைபெற உள்ளது.
நாளை ஜனவரி 04ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ஹரிஹரபுத்ர மூல மந்திர ஹோமம் காலை 9.00 மணிக்கு சங்காபிஷேகம் மற்றும் சாஸ்தா அஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு ஸ்ரீ ராம் கோபால் பாகவதர் குழுவினரின் ஹரிஹரபுத்ர நாமசங்கீர்த்தனம் நடைபெறும். காலை 11 மணிக்கு 18 வகை மலர்களால் 18 படிகள் அமைத்து புஷ்பாபிஷேகம் நடைபெரும் . மதியம் 12.30 மணிக்கு மஹா தீபாராதனைக்குப் பிறகு, 1.00 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்த பக்தி நிகழ்வுகளில் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி ஆன்மீக அன்பர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ தர்மசாஸ்தாவின் அருளைப் பெறுமாறு ஸ்ரீ சபரீச சேவா சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.