பராமரிப்பு இல்லாமல் வறண்ட வாசீஸ்வரர் கோவில் குளம்



திருப்பாச்சூர்: திருப்பாச்சூர் நீர்வரத்து கால்வாய் முறையாக பராமரிக்காததால், வாசீஸ்வரர் கோவில் குளம் வறண்டுள்ளது.


திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான குளம், கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த கோவில் குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும், பராமரிப்பு இல்லாமல் துார்ந்து போனதால், குளத்திற்கு நீர் வருவது, 25 ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. இதனால், எவ்வளவு மழை பெய்தாலும், கோவில் குளம் நீரின்றி வறண்டு கிடப்பதோடு, கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும், விளையாட்டு மைதானமாகவும் மாறியுள்ளது. ஓராண்டுக்கு முன் கோவில் குளத்தை துார்வாரி, கரைகளை சீரமைத்த ஹிந்து சமய அறநிலைய துறையினர், நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஹிந்து சமய அறநிலைய துறையினர், வாசீஸ்வரர் சுவாமி கோவில் குளத்திற்கு தண்ணீர் சேகரமாகும் வகையில், நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்