தொண்டாமுத்தூர்: பேரூரில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலத்தை, அறநிலையத்துறையினர் மீட்டனர்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில், பேரூர், இந்திரா நகர் அருகே, 24.7 செண்ட் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை நீக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று காலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் சத்யவதி, கோவை மண்டல உதவி கமிஷனர் உஷா நந்தினி ஆகியோர் தலைமையிலான அறநிலையத்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, கோவில் நிர்வாகம் சார்பில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.