அன்னூர் சிவவாக்கிய சித்தர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்



அன்னூர்: ருத்திரியம்பாளையம் சிவவாக்கிய சித்தர் மடாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.


ருத்திரியம் பாளையத்தில், அருள் பாலித்து வரும் அகிலாண்டேஸ்வரி உடனமர் மருந்தீசர் மற்றும் சிவ வாக்கிய சித்தர் மடாலயத்தில், புதிதாக பல லட்சம் ரூபாய் செலவில், கருவறை, விமானம், மணி மண்டபம், தியான மண்டபம், ஆலய நுழைவு வாயில் அமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த, 15ம் தேதி கணபதி பூஜை உடன் துவங்கியது. கடந்த 16ம் தேதி மாலை முளைப்பாலிகை, புண்ணிய நதிகளின் தீர்த்தம், விமான கலசங்கள் ஆகியவற்றை வானவேடிக்கையோடு பக்தர்கள் கோவிலுக்கு கொண்டு வந்தனர். இரவு முதல் கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், சுவாமி விக்ரகங்கள், விமான கலசங்கள் ஆகியவற்றுக்கு பாவன அபிஷேகமும், எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 9:00 மணிக்கு விமான கலசம், மூல ஆலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தச தரிசனம், தசதானம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் சிவனடியார்கள் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்