காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு நகரத்தார் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் பால்குடம், தீச்சட்டி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி முதல் செவ்வாயான இன்று நகரத்தார்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், காவடி தூக்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நகரச் சிவன் கோயிலில் தொடங்கி, ஊர்வலமாக வந்து மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடங்களை செலுத்தினர். தொடர்ந்து, ஜூலை 24 திருவிளக்கு பூஜையும், ஜூலை 38 பிராமணர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், ஜூலை 31 ல் 1008 சங்காபிஷேகமும், ஆக. 14 கோமாதா பூஜையும், வளையல் அலங்காரம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவியாளர் லட்சுமிமாலா, செயல் அலுவலர்கள் விஸ்வநாத் செய்து வருகின்றனர்.