ஆடி முதல் செவ்வாய்; நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்



நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் செவ்வாய்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரம், தீபாராதனைகளும் நடந்தது.பின் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கபட்டு பூச்சொரிதல் விழா நடந்தது.இதில் அசோக்நகர், மீனாட்சிபுரம், தெலுங்கர் தெரு, கோவில்பட்டி, மாரியம்மன் கோவில் தெரு,கர்ணம் தெரு, செட்டியார்குளத்தெரு, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கையில் பூதட்டுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே நத்தம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் ஆடி முதல் செவ்வாய் கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்