செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்



முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. வருடாபிஷேகம் பூஜை, சிறப்பு யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி நடந்தது. பின்பு செல்லிஅம்மனுக்கு கங்கையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர், பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் ஊர் காப்பு கட்டப்பட்டது. கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பால்குடம், அக்னிசட்டி, பூக்குழி, வேல் குத்தும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. ஜூலை 24ல் 2008 விளக்கு பூஜை, ஜூலை 26ல் வளையல் அலங்காரம், ஜூலை 27ல் அக்னி சட்டி ஊர்வலம், ஜூலை 28ல் பால்குடம் ஊர்வலம், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா, ஜூலை 29ல் வேல் குத்தி பூக்குழி, இறங்குதல், பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா, ஜூலை 30ல் முளைப்பாரி ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும். முதுகுளத்துார், சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்