மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்



மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியதை தொடர்ந்து வீர அழகர் சுவாமி செட்டிகுளம் கிராம மண்டகப்படிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார்.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடம் தோறும் ஆடி பிரம்மோற்ஸவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்தாண்டுக்கான விழா இன்று துவங்கியதை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்ற பிறகு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடந்த பிறகு வீர அழகரின் கைகளில் காப்பு கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீர அழகர் கருட வாகனத்தில் எழுந்தருளிய பிறகு செட்டிகுளம் கிராம மக்கள் மேள, தாளங்களுடன்,தேங்காய் பழ தட்டுகளுடன் மண்டகப்படிக்கு அழைத்து சென்றனர்.அங்குள்ள விநாயகர் கோயிலில் சுவாமிக்கு அபிஷேக,ஆராதனைகள் தீபாராதனை நடைபெற்ற பிறகு அன்னதானம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 26ம் தேதி இரவு 7:35 மணிக்கு நடைபெற உள்ளது. 29ம் தேதி மாலை 5:45 மணிக்கு தேரோட்டமும், 30ம் தேதி பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்