வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்கு தடுப்புகள்



மேட்டுப்பாளையம்,: பக்தர்கள் சிரமம் இல்லாமல் சுவாமியை வழிபட, வனபத்ரகாளியம்மன் கோவிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என, உதவி கமிஷனர் தெரிவித்தார்.


மேட்டுப்பாளையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய், வெள்ளி ஞாயிறு ஆகிய நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். விஷேசம் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகமாக இருக்கும் போது, கூட்ட நெரிசலால் சுவாமியை வழிபட மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். ‌அதிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வர இருப்பதை அடுத்து, வரிசையாக நின்று சுவாமியை வழிபட, கோவில் நிர்வாகம் தடுப்புகள் அமைத்துள்ளன.


இதுகுறித்து கோவில் உதவி கமிஷனர் (பொறுப்பு) சரவணன் கூறியதாவது: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வழக்கமாக வெள்ளிக்கிழமை நாட்களில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம், குறிப்பாக பெண்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஒரே நேரத்தில் பக்தர்கள் கூட்டமாக வரும் போது, நெரிசல் ஏற்பட்டு தள்ளு, முள்ளு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் வசதிக்காகவும் மூன்று வரிசையாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று வரிசைகள் கட்டண முறையும், ஒரு வரிசை பொது தரிசனத்திற்கும் என தடுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. சுவாமி வழிபட்ட பின் வெளியே செல்லவும் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த தடுப்புகளில் வரிசையில் நின்று சுவாமியை வழிபட கேட்டுக் கொள்ளப்படுகிறது. பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் அணிகலன்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் வரிசையில் நிற்கும் போது, மழை, வெய்யிலால் பாதிக்காமல் இருக்க, நிழல் தரும் பாதுகாப்பான மேல் கூரை அமைக்கப்பட்டு உள்ளது. கோவிலில் கட்டுமான திருப்பணிகள் நடைபெறுவதால், இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு, பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்