தேவகோட்டை: தேவகோட்டையின் எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடி விழா தொடங்கியது. தேவகோட்டை எல்லையில் பூர்வீக கோட்டை அம்மன் கோயிலில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு நகரத்தார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை போடப்பட்டது. நேற்று பீடத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேடையில் கோட்டை அம்மன் எழுந்தருளி. காப்பு கட்டப்பட்டு தொடர்ந்து அம்மனுக்கு கோயில் சார்பில் முதல் பொங்கல் வைத்து பூஜைகளுடன் அம்மனின் ஆடித்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தினமும் காலை மாலை பீடத்திற்கு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. 28 ந்தேதி திருவிழாவின் பிரதானமான ஊர்மக்கள் பொங்கல் வைத்து வழிபடும் புள்ளி பொங்கல் நடைபெற உள்ளது.