புதுச்சேரி: லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வித்யா கணபதி கோவில் கும்பாபிேஷக விழாவில், திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வித்யா கணபதி கோவில் உள்ளது. கோவில் கும்பாபி ேஷகத்தையொட்டி, கடந்த 28ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனை தொடர்ந்து, 29ம் தேதி, மூர்த்தி ஹோமம், முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, 30ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை, மூலமந்திர ேஹாமம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான, நேற்று காலை நான்காம் கால யாக பூஜையில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் சிவகொழுந்து ஆகியோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து, யாத்ரா தானம், கடம்புறப்பாடுடன், மூலவர் மற்றும் உற்சவர் விமானத்தில் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, காலை 10:20 மணிக்கு வித்யா கணபதி மூலஸ்தான உற்சவ மூர்த்திக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில், முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., மீனாட்சிசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் சங்கல்பம், வித்யா கணபதிக்கு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விவேகானந்த பள்ளி நிறுவனர் செல்வகணபதி எம்.பி., பள்ளி முதல்வர் பத்மா ஆகியோர் செய்திருந்தனர்.