காளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு ஹோமம்



காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில்  சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று காளஹஸ்தீஷ்வர சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சி அஞ்சி  விநாயக சுவாமி சன்னதியில் ஆகம சாஸ்திரங்களின்படி கோயில் அர்ச்சகர்களால் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது . தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி மற்றும் மகா தீப தூப நைவேத்யம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், கோயிலின் செயல் அலுவலர்  பி.கே. வெங்கடேசுலு மற்றும் கோயிலின் செயல் பொறியாளர் சீனிவாசராஜு ஆகியோர் சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டு ஆசிகளைப் பெற்றனர்.மேலும் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்