திருமலை தர்மகிரியில் கரிஷ்டி யாகம், வருண ஜபம், சாந்தி ஹோமம் துவங்கியது



திருப்பதி; திருமலை  தர்மகிரியில் கரிஷ்டி யாகம், வருண ஜபம், பர்ஜன்ய சாந்தி ஹோமங்கள் வேத சம்பிரதாயப்படி ஆரம்பமாகியது.


தேசம் செழிக்கவும், உரிய காலத்தில் மழை பெய்யவும் வேண்டி, திருமலையில் உள்ள தர்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தில் கரிஷ்டி யாகம், வருண ஜபம், பர்ஜன்ய சாந்தி ஹோமங்கள் நேற்று தொடங்கியது. தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வர் கே.எஸ்.எஸ் அவதானியின் வழிகாட்டுதலின் கீழ், வேத, ஸ்ரௌத மற்றும் ஸ்மார்த்த மரபுகளில் நிபுணத்துவம் பெற்ற 32 வேத அரிஞர்கள் காலை, மதியம் மற்றும் மாலை அமர்வுகளில் இந்த சடங்குகள், கீர்த்தனைகள் மற்றும் பாராயணங்களை நடத்துகின்றனர். ஆறு ரித்விக்குகள் கரிரிஷ்டி யாகம் செய்தனர்.  வருண மற்றும் பர்ஜன்ய மந்திரங்களை உச்சரிப்பதற்காக பன்னிரண்டு ரித்விக்குகள் கோகர்பம் தீர்த்தத்தின் நீரில் இடுப்பளவு நின்று வழிபாடுகளை செய்தனர். இந்நிகழ்ச்சியில் வேதவிஞ்ஞான பீடத்தின் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்