நெல்லிக்குப்பம்: எய்தனுாரில் உள்ள வாலி வழிபட்ட ஆதிபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரில் பத்மதளநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. 1098 ம் ஆண்டு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் திருப்பணிகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன. இக்கோவிலில் வாலி, ரிஷிகள், நாயன்மார்கள் வழிபட்ட ஸ்தலமாகும். பழமை வாய்ந்த இக்கோவில் புதுப்பிக்கப் பட்டதை தொடர்ந்து நேற்று மகா கும்பாபிேஷகம் நடந்தது. இதற்கான பூஜை கடந்த 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாக பூஜைகள் நடந்தது. நேற்று நான்காம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனையை தொடர்ந்து கலசங்கள் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து ஒரே சமயத்தில் ஆதிபுரீஸ்வரர், பத்மதளநாயகி, விநாயகர் கோவில் கோபுரங் கள் கும்பாபிஷேகம் நடந்தது. அமைச்சர் ராஜ்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு திருக்கல்யாணமும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடந்தது. இன்று முதல் மண்டலாபிஷேக பூஜைகள் நடக்கிறது.