தங்க கருட வாகனத்தில் ‌பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் வீதியுலா



உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வையொட்டி சுவாமி தங்க கருட வாகனத்தில் சுவாமி ‌வீதியுலா நடந்தது.


உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அன்று இரவு திருப்பல்லக்கிலும், விசேஷத் திருமஞ்சனம், ததியாராதனமும் நடந்தது. 14ம் தேதி இரவு சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று இரவு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. 15ம் தேதி சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தது. நேற்று காலை 11 மணியளவில் திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோலச் சேவையும், விசேஷத் திருமஞ்சனமும். ததியாராதனமும் நடந்தது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். வரும் 24ம் தேதி வரை நடக்கும் பிரம்மோற்சவ விழா தினசரி சுவாமி வீதியுலா நடக்கிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்