ராமநாதபுரம்: ராமநாதபுரம் வடக்குத் தெரு திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவ விழாவில் இன்று திருக்கல்யாணம் நடந்தது. பூக்குழி உற்ஸவ விழா செப்.,11ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி செப்.,25 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று (செப்.,18) காலையில் அபிேஷகம், அலங்காரத்தில் திரவுபதி அம்மனுக்கும், அர்ச்சுனனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. செப்.,22 ல் கீசகவதம், 23ல் அரவான் களப்பலி, 25ல் மாலையில் பூவளர்த்தல், இரவு 10:00 மணிக்கு பூக்குழி இறங்கும் உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.