நூதன முறையில் சாக்குவேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்



கமுதி: கமுதி அருகே செங்கப்படை அழகுவள்ளியம்மன் கோயில் விழாவில் நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் வைக்கோல் வைத்து சாக்குவேடம் அணிந்து வந்தனர்.


கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி பொங்கல் விழா நடந்தது.இதனை முன்னிட்டு கடந்த ஒருவாரத்திற்கு முன்பு காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை நடந்தது.பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி,சேத்தாண்டி வேடத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.அழகு வள்ளியம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருள்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் உடலில் வைக்கோல் வைத்து சாக்குவேடம் அணிந்து நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு முளைக்கொட்டு திண்ணையில் இருந்து மக்கள் முளைப்பாரி தூக்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து தண்ணீரில் கரைத்தனர்.விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை செங்கப்படை கிராமமக்கள் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்