| அருள்மிகு படித்துறை விநாயகர் திருக்கோயில் |
|
|
|
|
|
| |
|
|
| |
|
|
|
|
மூலவர் | : |
படித்துறை விநாயகர் |
|
|
தீர்த்தம் | : |
சூரிய புஷ்கரணி |
|
|
ஊர் | : |
அருப்புக்கோட்டை |
|
|
மாவட்டம் | : |
விருதுநகர்
|
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
| |
|
|
 |
திருவிழா: |
 |
| |
|
|
| |
சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, தமிழ்வருடப்பிறப்பு, தைப்பொங்கல், தீபாவளி, திருவாதிரை போன்ற உற்சவ நாட்களில் மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தி விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. |
|
| |
|
|
 |
தல சிறப்பு: |
 |
| |
|
|
| |
இங்குள்ள விநாயகர் ஜடாமுடியோடு கூடிய வித்தியாசமான கோலத்தில் உள்ளவை என்பது சிறப்புமிக்கதாகும். |
|
| |
|
|
 |
திறக்கும் நேரம்: |  | |
|
| | | | | காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். | | | | | |
 |
முகவரி: |  | | | | | | |
அருள்மிகு படித்துறை விநாயகர் திருக்கோயில்,
அருப்புக்கோட்டை,
விருதுநகர். |
|
| | | |
 |
போன்: |  | | | | | | |
+91 9894192727 | |
|
| | |  |
பொது தகவல்: |  |
| |
|
|
| |
கிழக்குப் பார்த்த வண்ணம் அமைந்த திருக்கோயில். சிலை கிடைத்த இடத்தில் உயர்ந்த பீடத்தை உருவாக்கி, அதன்மீது விநாயகரை பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோயிலுடன் இணைந்த உபகோயில் இது. |
|
| |
|
|
|
| |
 |
பிரார்த்தனை |  | |
|
| | | |
நினைத்தது நிறைவேறவும், வளமான வாழ்வு அமைந்திடவும் வேண்டுவோர் இங்கு அதிகம். குழந்தைப்பேறுக்காக வேண்டியும், மாங்கல்யம் பாக்கியம் கைகூடவும் இங்கு வந்து பிரார்த்திக்கின்றனர். | | |
|
| |
 |
நேர்த்திக்கடன்: |  | |
|
| | | |
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் கணபதிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்தும், தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர். | | | |
| |
 |
தலபெருமை: |  |
| |
|
|
| |
மாங்கல்ய பாக்கியம் கைக்கூடி வேண்டுவோர், விநாயகருக்கு மாலை வாங்கி சாத்தி, அந்த மாலையைப் பெற்று வீட்டில் பத்திரப்படுத்தி வைக்கின்றனர். மாங்கல்ய பாக்யம் கூடிவந்ததும், அந்த மாலையை எடுத்து வந்து தெப்பக்குளத்தில் சேர்த்துவிடுகின்றனர்.
|
|
| |
|
|
|
 |
தல வரலாறு: |  |
| |
|
|
| |
ஜடாமுடியோடுகூடிய வித்தியாசமான திருக்கோலத்தில் விநாயகர் அருளும் தலம், அருப்புக்கோட்டை. சூரிய புஷ்கரணி எனும் தெப்பக் குளத்தின் வடகரையில் கோயில் கொண்டுள்ளதால் இவர் படித்துறை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கி.பி. 1193-ம் ஆண்டில் திரு ஆலவாயுடையான் சோழகங்கன் மகன் அருளாளரழகப் பெருமான் என்பவரால் இக்குளம் உருவாக்கப்பட்டது. அப்போது பூமியிலிருந்து இவ்விநாயகர் கண்டெடுக்கப்பட்டு, குளக்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். |
|
| |
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
| |
|
|
| |
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்குள்ள விநாயகர் ஜடாமுடியோடு கூடிய வித்தியாசமான கோலத்தில் உள்ளவை என்பது சிறப்புமிக்கதாகும்.
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|