Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சிவ - விஷ்ணு திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சிவ - விஷ்ணு திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஜலநாராயணர்
  உற்சவர்: ஜலநாராயணர்
  அம்மன்/தாயார்: ஜல நாராயணி தாயார்
  தல விருட்சம்: நாகலிங்கமரம்
  ஊர்: காக்களூர்
  மாவட்டம்: திருவள்ளூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, ஸ்ரீராமநவமி, வைகாசி விசாகம், பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு சிவா - விஷ்ணு கோயில் பூங்கா நகர், காக்களூர், திருவள்ளூர் - 602 001.  
   
போன்:
   
  +91 94431 19861 
    
 பொது தகவல்:
     
  ஒரு பெரிய செவ்வக தொட்டியில் உள்ள நீரில் ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக துயில் கொண்டிருக்கிறார் ஜலநாராயணர். நடன ரூபத்தில் கால்கள் இருக்கின்றன. வலது கையில் அட்சய பாத்திரமும் இடது கையில் சங்கும் ஏந்தியவராய் காட்சியளிக்கிறார். பக்தர்கள் தொட்டியினுள் இறங்கக்கூடாது. மேலே அமைந்துள்ள பாதுகாப்பு பகுதியிலிருந்து குனிந்து பார்த்து தரிசிக்க வேண்டும் ஏகாதசிக்கு தண்ணீரை மாற்றி புதுத் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. நேபாளத்தில் காட்மண்டுவில் உள்ள ஜலநாராயணரை ''புத நீல கண்ட்'' என்கிறார்கள்.

இங்குள்ள ஜல நாராயணருக்கு பன்னீரும், வாசனைத் திரவியங்களும் அபிஷேகம் செய்யப்படுகிறது. தம்பதியர்கள் வலம்புரி சங்கில் தண்ணீர் எடுத்து நெல்லிக்கனிக்கு அபிஷேகம் செய்து அக்கனியைப் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்து சாப்பிட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள். ஏகாதசியன்று தம்பதியர்களுக்கான சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலில் ஜலநாராயணர் சந்நதியில் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பும் மகா தீபாராதனையும் தொடர்ந்து லட்சார்ச்சனை வைபவமும் நடைபெறுகிறது. மேலும் இக்கோயிலில் ஷீரடி மகானுக்கு தனிச்சந்நிதியும் உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  ஏகாதசி தினத்தன்று விரதத்துடன் நாகலிங்க மரத்தின் கீழ் கடவுளை பார்த்தபடி வடக்கு நோக்கி அமர்ந்து அவரவர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் இவைகளை சொல்லி சங்கல்பம் செய்து கொண்டு கடவுளை பிரார்த்தனை செய்தால் திருமணத்தடை நீங்கும், பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும், பிதுர் சாபங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

ஏவல் பில்லி சூன்யங்கள் துர் தேவதைகளின் மந்த்ர உச்சாடனங்கள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும். வியாபாரம், தொழில் அபிவிருத்தி அடையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகள் வலுப்படும். மனசங்கடங்கள் நீங்கும். நல்ல உத்யோகம் கிட்டும். குழந்தைகள் கல்வியில் மேன்மை அடைவர். நாக கோஷத்திற்கு பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் நினைத்த வரங்கள் கைக்கூடும். தீராத நோய்கள் எல்லாம் நீங்கி இனிமையான வாழ்வு கிடைக்கும்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  ஏகாதசியன்று பெருமாளுக்கு வாசனை பன்னீர் அபிஷேகத்திற்கு கொடுத்து அபிஷேகத்தை தரிசனம் செய்து அதன் பிறகு அலங்கார தீபாராதனை முடிந்தவுடன் வலம்புரி சங்கில் நெல்லிக்கனி வைத்து சுத்தமான பன்னீரை சேர்த்து பக்தர்கள் கையில் வைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்து ஜலநாராயண பெருமாள் மற்றும் நாகலிங்க மரத்தை ஓம் நமோ நாராயணா என்ற நாம சங்கீர்த்தனத்துடன் வலம் வந்து அவர்களது கோரிக்கைகளை பிரார்த்னை செய்து பெருமாளுடைய பாதத்தில் சங்கினால் பன்னீரை சேர்க்கும் பூஜைக்கு வலம்புரி சங்கு நெல்லிக்கனி பரிஹார பூஜை என வழங்குகிறது.  
    
 தலபெருமை:
     
  உலகிலேயே பெருமாளும் தாயாரும் நீர் மீது காட்சியளிக்கும் ஒரே தலம். அதேபோல் பெருமாள் திருவடிகள் நடனமாடும் கோலத்தில் காணப்படுகிறது.

சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் உரியது. மூலவராக ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் (சிவன்) மற்றும் ஜல நாராயணப் பெருமாள் இருவரும் அருகருகே வீற்றிருந்து அருள் செய்கின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  திருவள்ளூர் அருகில் காக்களூரில் உள்ள பூங்கா நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மனைகள், வீடுகள் உருவானபோதே விநாயகர், சிவன், விஷ்ணுவையும் கொண்ட கோயில் உருவானது. நாளடைவில் இக்கோயிலில் மேலும் படிப்படியாக விரவுபடுத்தப்பட்டு இன்றைய நிலை 46 விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. 1990 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் ஆன பிறகு மீண்டும் இக்கோயிலை புணருத்தாரணமும், கும்பாபிஷேகமும் செய்ய 3 ஆண்டுகளுக்கு முன்பு முடிவானபோதுதான், காட்மாண்டுவில் உள்ளது போலவே இங்கும் ஸ்ரீ ஜலநாராயணரை பிரதிஷ்டை செய்ய முடிவானது. 12 டன் எடையுள்ள கல்லில் 8 மாதத்தில் உருவான ஜலநாராயணர் விக்கிரகம் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நிறைவேறியது.

நாம் வாழும் இந்த பூமியானது முன்பு நீராக இருந்தது. பின் அந்த நீர் வற்றி வாழ்வதற்கு ஏற்றபடி நிலமாக மாறியது. அந்த நீருக்கு (ஜலத்திற்கு) 'நாரா' என்ற பெயரும் உண்டு. சிருஷ்டியின் ஆரம்பத்தில் கடவுள் முதலில் தோன்றியதால் 'நாராயணன்' என்று அழைக்கப்படலானார். அதன் பிறகுதான் ஜீவராசிகள் தோன்றியது. இதனால் பெருமாளுக்கு ஜலநாராயணர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

மகாவிஷ்ணு சிறிய அளவிலான நீர்நிலையின் நடுவே (பாற்கடலில் உள்ளது போல்) 11 தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது அனந்தசயனக் கோலத்தில் காட்சிதருகிறார். நான்கு கைகளில் சக்கராயுதம், கதாயுதம், சங்கு மற்றும் ஒரு அட்சயப் பாத்திரம் ஆகியவற்றுடன் காட்சி தருகிறார். திருமாலின் பாதம் நடனமாடும் கோலத்தில் உள்ளது. தாயார் பெருமாளின் திருவடிகளுக்குக் கீழே தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீ ஜல நாராயணி தாயாராக அருள்பாலிக்கிறார்.

சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் உரிய தலம். இங்கு மூலவராக ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் (சிவன்) மற்றும் ஜல நாராயணப் பெருமாள் இருவரும் அருகருகே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவன் புஷ்பவனேஸ்வரர், தாயார் பூங்குழலி அம்பாள் சன்னதிகளுடன் விநாயகர், முருகன், கிருஷ்ணர், ராமர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், ஆதிசங்கரர், கிருபானந்த வாரியார், ராமலிங்க வள்ளலார், அகத்தியர் உட்பட மொத்தம் 44 முதல் 46-க்கும் மேற்பட்ட சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. உட சன்னதிகளுக்கு எதிரே உள்ள கூரையில் பஞ்சமுகத்துடன் கூடிய 11000 ருத்ராட்சங்களால் ஆன ஒரு பெரிய குடை வடிவ ருத்ராட்சப் பந்தல் உள்ளது. இது மாலை மின்விளக்குகள் எரியும்போது, ருத்ராட்சப் பந்தல் மிகப் பெரிய அளவில் சிறப்பிக்கப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: உலகிலேயே பெருமாளும் தாயாரும் நீர் மீது காட்சியளிக்கும் ஒரே தலம். அதேபோல் பெருமாள் திருவடிகள் நடனமாடும் கோலத்தில் காணப்படுகிறது.
 
     
பகிர்க copied
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar