Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஸ்ரீ நாகதேவதை திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஸ்ரீ நாகதேவதை திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஸ்ரீ நாகதேவதை
  உற்சவர்: ஸ்ரீ நாகதேவதை
  ஊர்: வேலூர்
  மாவட்டம்: வேலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு காலம், பவுர்ணமி, அமாவாசை, ராகு கேது பெயர்ச்சி சிறப்பு யாகம்  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7:00 – 1:00 மணி, மாலை 4:00 – 7:30 மணி காலை 7:00 – இரவு 7:30 மணி (செவ்வாய், வெள்ளி) திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு ஸ்ரீ நாகதேவதை அம்மன் ஆலயம் காவலர் குடியிருப்பு, வேலூர் கோட்டை வேலூர்  
   
போன்:
   
  +91 95668 64925 0416 – 222 8925 
    
 பொது தகவல்:
     
  வரலாற்று சிறப்புமிக்க 16ம் நூற்றாண்டு வேலூர் கோட்டையின் உட்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  மனம் தளராமல் இருக்க, தன்னம்பிக்கை கிடைக்க, ராகு காலத்தில் அம்மனுக்கு 9 நெய் தீபமேற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும். பகைவர் தொல்லை, வியாபாரத்தடை அகலும் 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து புடவை சாற்றுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் கொண்டவருக்கு, உலகில் முடியாதது என்று எதுவுமில்லை. இப்படி நம்மீது நாமே நம்பிக்கை வைத்தால் எல்லாம் சாத்தியமாகும் என்பதை உணர்த்தும் கோயில்.   
     
  தல வரலாறு:
     
 
வரலாற்று சிறப்புமிக்க 16ம் நூற்றாண்டு வேலூர் கோட்டையின் உட்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. 

எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் கொண்டவருக்கு, உலகில் முடியாதது என்று எதுவுமில்லை. இப்படி நம்மீது நாமே நம்பிக்கை வைத்தால் எல்லாம் சாத்தியமாகும். சிலரிடம் இந்த தன்னம்பிக்கை இருப்பதில்லை. இதுபோல் உங்களுக்கும் தன்னம்பிக்கை வேண்டுமா... வேலுார் கோட்டையில் உள்ள நாகதேவதை அம்மன் கோயிலுக்கு வாருங்கள். 

கோட்டையின் உள்ளே சிறிது துாரம் சென்றதும் கோயிலை அடைந்துவிடலாம். உள்ளே நுழைந்ததும் விநாயகர் நம்மை வரவேற்பார். பின் கிழக்கு நோக்கியிருக்கும் நாகதேவதை அம்மனை தரிசிக்கலாம். அம்மனின் விஸ்வரூபம் பிரமிப்பைத் தரும். கன்னங்கரேலென்று அடர்த்தியான கருமையில் அவளை பார்க்கும்போது நமக்குள் புதுவித நம்பிக்கை தோன்றும். பின் அவளை சுற்றிவரும்போது பெரிய ஆலமரம் ஒன்று தென்படும். முன்பு அம்மன் இந்த மரத்தின் அடியில் உள்ள புற்றில்தான் அருள்பாலித்து வந்தாள். 
இப்படி பிரகாரத்தை சுற்றிவரும்போது பச்சையம்மன், பக்த ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம். 


ராகு காலத்தில் அம்மனுக்கு 9 நெய் தீபமேற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். இங்கு அமாவாசை தோறும் யாகம் வளர்த்து சிறப்பான பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால் பகைவர் தொல்லை, வியாபாரத்தடை அகலும். பவுர்ணமியன்று உற்ஸவருக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பாலாபிஷேகம் செய்கின்றனர். பிறகு அம்மனை அலங்கரித்து, ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டி பாடி பக்தர்கள் பரவசம் அடைகின்றனர். ராகு கேது பெயர்ச்சியின் போது இங்கு சிறப்பு யாகமும் நடைபெறுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வரலாற்று சிறப்புமிக்க 16ம் நூற்றாண்டு வேலூர் கோட்டையின் உட்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
 
     
பகிர்க copied
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar