Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலைக்கு 30 டன் காய்கறி; ... கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரி பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2019
03:12

தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்திகளுக்கு, நேற்று 24ம் தேதி சிறப்பு பூஜைகள் நடந்தன.

தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, நேற்று 24ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, நந்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:30 மணிக்கு மேல், மூலவ மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன.

இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் உள்ள நந்திக்கு, பிரதோஷத்தை யொட்டி, நேற்று 24ம் தேதி சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன.

பக்தர்கள் வழிபாடு: அரூரில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று 24ம் தேதி நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷே கங்கள் நடந்தன. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீ வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி, அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar