பதிவு செய்த நாள்
30
டிச
2019
01:12
ஈரோடு: சூரம்பட்டி, சுயம்பு மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, கம்பத்துக்கு பக்தர்கள் தீர்த்தம் ஊற்றி வழிபட்டனர்.
ஈரோடு சூரம்பட்டி வலசில் உள்ள, சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 24ல் பூச்சாட்டு தலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் (டிசம்., 28ல்) இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் தலைமை பூசாரி பிரபு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கம்பத்தை அருள் வாக்கு கேட்ட பின், பொதுமக்கள், விழாக்குழுவினர் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் ஊஞ்சல் முன் நட்டு சிறப்பு பூஜை செய்தார். அதையடுத்து, மஞ்சள், வேப்பிலை கலந்த தீர்த்த நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் இருந்து எடுத்து வந்த பக்தர்கள் கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர் சுயம்பு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அரசமர விநாயகர், சன்னதி விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.