Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா ... சாய்பாபா கோவிலில் மஹா சண்டி ேஹாம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க 70வது மஹோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2020
04:12

 கோவை : கோவை ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின் 70வது மஹோற்சவ விழா நேற்று துவங்கியது.

அதிகாலை 4:30 மணிக்கு, பேரூர் விஸ்வநாத கனபாடிகள், சுந்தரவாத்தியார் ஆகியோரது தலைமையில், மஹாகணபதி ஆவாஹனம் செய்து கணபதி ஹோமம் நடந்தது.தொடர்ந்து தர்மசாஸ்தா, ஸ்ரீஅம்பாள் ஆவாஹனம் செய்து சூர்யநமஸ்காரம் அபிஷேகம் நடந்தது. காலை 7:30 மணிக்கு மகாருத்ர ஜபம் நவக்கிரஹஹோமம், ஸ்ரீசுதர்சனஹோமம் ஆகியவை நடந்தது. 12:30 மணிக்கு மகாபூர்ணாஹூதி, வசோர்தாரை மகாதீபாராதனை நடந்தது. வழக்கமாக நடைபெறும் பக்தபோஜனம் என்றழைக்கப்படும் மகாஅன்னதானம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உணவு பொட்டலங்களாக, ஆதரவற்றோர் இல்லங்கள், தொலை துார கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, வாகனங்களில் சென்று வினியோகிக்கப்பட்டது.உலக ஷேமத்திற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் மகாருத்ரம், இந்த ஆண்டு, 121 வேதவிற்பன்னர்களை கொண்டு, 11 அடுக்குகளாக பிரித்து நான்கு நாட்களுக்கு நடத்தப்படுகிறது.இந்த மகாருத்ர ஜபம், அன்றாடம் காலை 7:30 மணிக்கு துவங்கி நடைபெறும்.வரும் சனியன்று மகாருத்ரஜபம் நிறைவடைந்து, அன்று காலை 8:00 மணிக்கு மகாருத்ர ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து ஐயப்பசுவாமிக்கு லட்சார்ச்சனையும், அஷ்டாபிஷேகமும் நடைபெறும்.

ஞாயிறன்று காலை 9:00 மணிக்கு பஞ்சவாத்தியங்கள் முழங்க திருவாபரண பெட்டியுடன் திருமஞ்சனஉலாவும், 11:00 மணிக்கு ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம், கோவை ஜெய்ஹிந்த் முரளி பாகவதர் குழுவினரின் திவ்யநாம பஜனையும் நடக்கிறது.மதியம் 1:00 மணிக்கு மகாதீபாரதனையோடு, விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.பக்தர்களுக்கு வேண்டுகோள்தற்போது நிலவி வரும் கோவிட் 19 சூழல் காரணமாக,அரசு உத்தரவுப்படி, ஸ்ரீ ஐயப்பன்பூஜா சங்க ஆண்டுவிழா பூஜைகளில் உறுப்பினர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் மட்டும் பங்கேற்கலாம். பக்தர்கள், facebook:sri ayyappan puja sangham,web:www.savithrilive.com, youtube:bakthinaama என்ற லிங்க்கில் தொடர்பு கொண்டு, காணொளி பூஜா நிகழ்ச்சிகளை தரிசனம் செய்ய, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: அரங்கநாத சுவாமி கோவிலில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  மாட்டுபொங்கல் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar