பதிவு செய்த நாள்
30
ஜன
2021
11:01
அன்னுார்:அல்லிகுளம், கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 1ம் தேதி நடக்கிறது.அல்லிகுளம், புதுக்காலனியில், பழமையான, கருப்பராயன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், விநாயகர், கன்னிமார், தன்னாசியப்பன், சன்னதிகள் அமைந்துள்ளன. கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன.இதையடுத்து, கும்பாபிஷேக விழா, 31ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. இரவு, எண் வகை மருந்து சாத்துதல், யாகசாலை பூஜை நடக்கிறது. பிப். 1ம் தேதி அதிகாலையில், வேள்வி பூஜையும், காலை 9:30 மணிக்கு, விநாயகர், கருப்பராயன், கன்னிமார், தன்னாசியப்பன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. இதையடுத்து, மகா தீபாராதனையும், அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது.